search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    108MP கேமரா கொண்ட போக்கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
    X

    108MP கேமரா கொண்ட போக்கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

    • போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
    • புதிய போக்கோ ஸ்மார்ட்போன் Early Access விற்பனை இன்று மாலை 6 மணிக்கு துவங்கியது.

    போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த போக்கோ X4 ப்ரோ ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். மேலும் இது ரெட்மி நோட் 12 ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் என்றும் கூறப்படுகிறது.

    புதிய போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI14 ஒஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    போக்கோ X5 ப்ரோ அம்சங்கள்:

    6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 30/60/90/120Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர்

    அட்ரினோ 642L GPU

    6 ஜிபி, 8 ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI14

    டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    3.5mm ஆடியோ ஜாக், சூப்பர் லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்

    டால்பி அட்மோஸ்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போக்கோ X5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் போக்கோ எல்லோ, ஹாரிசான் புளூ மற்றும் ஆஸ்ட்ரல் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அறிமுக சலுகையாக போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 20 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 22 ஆயிரத்து 999 விலையில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஒபன் சேல் பிப்ரவரி 13 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதுதவிர ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    Next Story
    ×