search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MWC 2023"

    • டெக்னோ நிறுவனத்தின் ஃபேண்டம் விஷன் V ஸ்லைடிங் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டுள்ளது.
    • புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமாகிறது.

    டெக்னோ நிறுவனம் சமீபத்தில் தனது ஃபேண்டம் விஷன் V ஸ்மார்ட்போனை காட்சிப்படுத்தி இருந்தது. இது ஸ்லைடிங் ஸ்கிரீன் கொண்ட கான்செப்ட் மாடல் ஆகும். புதிய ஃபேண்டம் V ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்வதாக டெக்னோ அறிவித்து இருக்கிறது.

    பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் டெக்னோவின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இடதில் இருந்து வலதுபுறமாக மடிக்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது என டெக்னோ தெரிவித்து இருக்கிறது. புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் அனுபவத்தை வழங்குவதில் புது தரத்தை கட்டமைக்கும் என டெக்னோ தெரிவித்து இருக்கிறது. சமீபத்தில் தான் டிமெனசிட்டி 9000 சிப் கொண்ட ஃபேண்டம் X2 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனை டெக்னோ அறிமுகம் செய்தது. மீடியாடெக் உடனான கூட்டணி 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா வரை நீடிக்கும் என டெக்னோ அறிவித்து இருக்கிறது.

    இந்த நிகழ்வில் பிராண்டுகள் இடையே நெருங்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும், புதிய ஃபேண்டம் V ஃபோல்டு மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது. 

    ×