என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது.
    • புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பபிள் வைட் மற்றும் பெபில் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    விவோ நிறுவனம் புதிய விவோ TWS ஏர் ஏர் இயர்பட்ஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.2, AAC கோடெக், 14.2mm டைனமிக் டிரைவர்கள், 117ms லோ லேடன்சி கேமிங் வசதியை கொண்டிருக்கிறது. இதில் உள்ள டீப்X 2.0 விவோ கோல்டன் இயர் அகௌஸ்டிக்ஸ் லேப்- இல் டியூன் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 25 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் உள்ள டூயல் மைக்ரோபோன்கள் AI கால் நாய்ஸ் ரிடக்ஷன் அல்காரிதம், L வடிவ ஆண்டி-விண்ட் நாய்ஸ் டக்ட்கள் காற்றின் சத்ததையும் கண்டறிந்து தடுக்கிறது.

     

    விவோ TWS ஏர் இயர்பட்ஸ் அம்சங்கள்:

    கூகுள் ஃபாஸ்ட் பேர் மற்றும் AAC கோடெக் சாதனங்களுடன் கன்கெட் ஆக ப்ளூடூத் 5.2

    கஸ்டம் 14.2mm டைனமிக் டிரைவர்கள், பயோ கார்பன் ஃபைபர் கம்போசிட் டயஃப்ராம்

    117ms லோ லேடன்சி கேமிங்

    டூயல் மைக்ரோபோன்கள், AI கால் நாய்ஸ் ரிடக்ஷன் அல்காரிதம்

    L வடிவ ஆண்டி விண்ட் டக்ட்கள்

    வாட்டர் ரெசிஸ்டண்ட் IP54

    இயர்பட்களில் 29 எம்ஏஹெச் பேட்டரி - அதிகபட்சம் 4.8 மணி நேர பிளேபேக்

    430 எம்ஏஹெச் பேட்டரி - அதிகபட்சம் 25 மணி நேர பிளேபேக்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய விவோ TWS ஏர் இயர்போன் பபுள் வைட் மற்றும் பபுள் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை விவோ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

    • ரியல்மி நிறுவனத்தின் புதிய GT3 ஸ்மார்ட்போன் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
    • ரியல்மி GT3 மாடலில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

    ரியல்மி நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி GT3 ஸ்மார்ட்போனினை GT சீரிசில் புதிய ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்தது. புதிய ரியல்மி GT3 மாடலில் 6.7 இன்ச் 144Hz 1.5K ஃபிளாட் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும் இதில் பல்ஸ் இண்டர்ஃபேஸ் ஆர்ஜிபி சிஸ்டம், டிரான்ஸ்பேரண்ட் டிசைன், 25 நிறஙகள், 2 ரிதம், 5 ஸ்பீடு மாடல்கள், நோட்டிஃபிகேஷன்களுக்கு கஸ்டம் செட்டிங்ஸ், லோ பேட்டரி மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் மேட் ஏஜி கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது.

     

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, டர்போ ரா லாஸ்லெஸ் இமேஜ் அல்காரிதம், ஸ்டிரீட் ஷூட்டிங் மோட் 3.0, மைக்ரோஸ்கோப் லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா வைடு கேமரா கொண்டுள்ளது. 4600 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரியல்மி GT3 ஸ்மார்ட்போன் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    ரியல்மி GT3 அம்சங்கள்:

    6.74 இன்ச் 2772x1240 பிக்சல் 40Hz-144Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU

    8 ஜிபி, 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி மெமரி

    ஆண்ட்ரய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP பெரிஸ்கோப் லென்ஸ்

    16MP செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    4600 எம்ஏஹெச் பேட்டரி

    240 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரியல்மி GT3 ஸ்மார்ட்போன் பூஸ்டர் பிளாக் மற்றும் பல்ஸ் வைட் நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை இந்கிய மதிப்பில் ரூ. 53 ஆயிரத்து 605 என துவங்குகிறது.

    • ஹானர் பிராண்டின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய ஹானர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் மேஜிக் Vs மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் 7.9 இன்ச் FHD+ 90Hz OLED மடிக்கக்கூடிய உள்புற ஸ்கிரீன், வெளிப்புறம் 6.45 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் உள்ள டைமிக் டிம்மிங், சர்கடியன் நைட் டிஸ்ப்ளே புளூ லைட் பாதிப்புகளை சிறப்பாக எதிர்கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்கிரீன்களிலும் 1920Hz PWM டிம்மிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கிரீன் ஃப்ளிக்கர் ஆவதை குறைக்கிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு சார்ந்த மேஜிக்ஒஎஸ் 7.1 வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    ஹானர் மேஜிக் Vs அம்சங்கள்:

    7.9 இன்ச் 2272x1984 பிக்சல் FHD+ OLED 10.3:9 டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    6.45 இன்ச் 2560x1080 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU

    12 ஜிபி ரேம்

    512 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் யுஐ 7.1

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    50MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன்

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி 3.1 டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை விவரங்கள்:

    ஹானர் மேஜிக் Vs மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சியான் மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1599 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 865 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.  

    • சியோமி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.
    • சர்வதேச சந்தையில் சியோமி 13 ப்ரோ விலை இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது.

    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய சியோமி 13 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய சியோமி 13 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 2K ஃபிளெக்சிபில் E6 AMOLED LTPO ஸ்கிரீன், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், பெரிய VC லிக்விட் கூலிங் வசதி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள கேமரா சிஸ்டம் லெய்கா ஆப்டிக்ஸ் பிராண்டிங் கொண்டுள்ளன.

     

    4820 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் சியோமி 13 ப்ரோ 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சியோமி 13 ப்ரோ அம்சங்கள்:

    6.73 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ E6 AMOLED, 120Hz டிஸ்ப்ளே டால்பி விஷன்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் அட்ரினோ 740 GPU

    12 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி

    டூயல் சிம்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14

    50MP பிரைமரி கேமரா

    50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்

    50MP டெலிபோட்டோ கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    4820 எம்ஏஹெச் பேட்டரி

    120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

     

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இந்திய சந்தையில் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய சியோமி 13 ப்ரோ வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 23 ஆயிரம் வரை எக்சேன்ஜ் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் கூடுதல் எக்சேன்ஜ் போனஸ் ரூ. 8 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் சியோமி 13 ப்ரோ முதல் விற்பனை மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. இதே ஸ்மார்ட்போனிற்கு விசேஷ விற்பனை மார்ச் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. சியோமி பயனர்களுக்கு புதிய சியோமி 13 ப்ரோ வாங்கும் போது அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் ரோது ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விலை அறிவித்ததோடு சியோமி நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் சியோமி 12 ப்ரோ 5ஜி மாடலுக்கு விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. விலை குறைப்பின்படி சியோமி 12 ப்ரோ 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 52 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 56 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • விவோ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 8 இன்ச் டிஸ்ப்ளே, இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என தகவல்.
    • விவோ X ஃபோல்டு 2 மாடலின் டிஸ்ப்ளே 2K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    விவோ நிறுவனத்தின் அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவோ X ஃபோல்டு 2 என அழைக்கப்பட இருக்கிறது. கடந்த வாரம் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் சார்ஜிங் விவரங்களை டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் எனும் டிப்ஸ்டர் வெளியிட்டு இருந்தது. தற்போது இதே டிப்ஸ்டர் புதிய விவோ X ஃபோல்டு 2 விவரங்களை வெளியிட்டுள்ளது.

    அதன்படி விவோ X ஃபோல்டு 2 மாடலில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், 2K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 8 இன்ச் டிஸ்ப்ளே, இதன் கவர் டிஸ்ப்ளேவில் உள்புற ஸ்கிரீன், அல்ட்ராசோனிக் இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. விவோ X ஃபோல்டு 2 உலகின் முதல் முறையாக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்ட முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது.

     

    இந்த பிராசஸருடன் 16 ஜிபி ரேம், 512 ஜிபி அல்லது 1 டிபி மெமரி வழங்கப்படுகிறது. விவோ X ஃபோல்டு 2 மாடலில் 4800 எம்ஏஹெச் டூயல் செல் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 3.0 வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புகைப்படங்களை எடுக்க விவோ X ஃபோல்டு 2 மாடலில் 50MP சோனி IMX866 பிரைமரி கேமரா, OIS வசதி வழங்கப்படுகிறது.

    இத்துடன் 12MP சோனி IMX663 சென்சார் அல்ட்ரா வைடு மற்றும் டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. விவோ X ஃபோல்டு 2 மாடல் இந்த ஆஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் விவோ X ஃப்ளிப் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    • ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Z சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய ஐகூ Z சீரிஸ் ஸ்மார்ட்போன் OIS வசதி கொண்ட பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது.

    புதிய ஐகூ Z சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஐகூ இந்தியா தலைமை செயல் அதிகாரி நிபுன் மர்யா புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் அடங்கிய டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டீசரில் புதிய ஐகூ ஸ்மார்ட்போன் பெயர் விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், படத்தில் உள்ள ஸ்மார்ட்போனின் பின்புறம் Z7 என எழுதப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ Z6 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் இது என்பது உறுதியாகி இருக்கிறது. தற்போது நிபுன் மர்யா வெளியிட்டு இருக்கும் டீசர் புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் டிசைன் தெரியவந்துள்ளது. இது தோற்றத்தில் கிட்டத்தட்ட விவோ T1x போன்றே காட்சியளிக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் செவ்வக வடிவம் கொண்ட கேமரா மாட்யுல், இரண்டு கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் OIS வசதி வழங்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது. கேமரா சென்சாரை தொடர்ந்து எல்இடி ஃபிளாஷ் அருகில் "Photography High Definition" என எழுதப்பட்டு இருக்கிறது. பேக் பேனலின் கீழ்புறத்தில் ஐகூ பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் டியல் நிறம் கொண்டிருப்பது தற்போதைய டீசரில் தெரியவந்துள்ளது. புதிய ஐகூ Z7 ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். முந்தைய ஐகூ Z சீரிஸ் மாடல்கள் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போனும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் ஐகூ Z7 சீரிசில் ஐகூ Z7 5ஜி மற்றும் Z7 ப்ரோ 5ஜி என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்பட்டது. மேலும் இவை I2207 மற்றும் I2213 எனும் மாடல் நம்பர்களை கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதுபற்றிய தகவல்கள் மற்றும் இரு மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படலாம்.

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது.
    • புதிய மோட்டோரோலா ரேசர் 2023 விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    மோட்டோரோலா நிறுவனம் புதிய ரேசர் 2023 ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. புதிய மோட்டோரோலா ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில், புதிய மோட்டோரோலா ரேசர் 2023 மாடல் டிசைன் விவரங்களை டிப்ஸ்டரான சமீபத்தில் தான் எவான் பிளாஸ் வெளியிட்டு இருந்தார்.

    தற்போது இதே டிப்ஸ்டர் புதிய ரேசர் 2023 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை தெரிவித்து இருக்கிறார். அதன்படி புதிய மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 வெளியீட்டுக்கு முன்பே அறிமுகம் செய்யப்படும் என எவான் பிளாஸ் தெரிவித்து இருக்கிறார். சாம்சங் தனது அடுத்த தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம்.

     

    மோட்டோரோலா "Juno Announcement Reveal + Event Activation Launch" தேதி ஜூன் 1 என தகவல் வெளியாகி உள்ளது. ஜூனே என்பது ரேசர் 2023 மாடலின் குறியீட்டு பெயர் ஆகும். வரும் மாதங்களில் புதிய ரேசர் 2023 ஸ்மார்ட்போனின் வெளியீடு நடைபெற இருக்கிறது. அறிமுக நிகழ்வுக்கு முன் புதிய ரேசர் மாடலின் அம்சங்களை படிப்படியாக அம்பலப்படுத்தும் டீசர்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

    புதிய மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி இதுவரை அதிக தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 144Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இதே அம்சங்கள் ரேசர் 2022 மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பதால், புதிய மாடல் சிறு அப்டேட் ஆக இருக்கும் என்றே தெரிகிறது.

    ரேசர் தவிர மோட்டோரோலா நிறுவனம் மற்றொரு கிளாம்ஷெல் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாகவும் எவான் பிளாஸ் தெரிவித்து இருக்கிறார். இந்த மாடல் "வீனஸ்" எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் அம்சங்கள் மர்மமாக இருக்கும் நிலையில், இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என்றும் இது உண்மையான ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    டிசைனை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போன் ரேசர் 2022 மாடலை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய OLED பேனல், பன்ச் ஹோல் டிசைன், கவர் டிஸ்ப்ளேவில் சிறு மாற்றம் செய்யப்பட்டு 3.5 இன்ச் அளவில் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட இருக்கிறது.

    Photo Courtesy: Evan Blass

    • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 15 விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • புதிய ஐபோன் 15 மாடலில் யுஎஸ்பி சி போர்ட், டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது.

    ஐபோன் 15 ப்ரோ ரெண்டர்களை தொடர்ந்து ஐபோன் 15 ரெண்டர்கள் தற்போத இணையத்தில் வெளியாகி உள்ளது. 9to5mac வெளியிட்டு இருக்கும் புதிய 3D CAD ஃபைல் ரெண்டர்களில் ஐபோன் 15 விவரங்கள் தெரியவந்துள்ளது.

    கேஸ் உற்பத்தியாளர் மற்றும் 3D நிபுணர் இயன் செல்போ 9to5mac இடம் CAD மாடலை வழங்கி இருக்கிறது. அதில் ஐபோன் 15 மாடல் நாட்ச் ரக டிஸ்ப்ளேவுக்கு மாற்றாக டைனமிக் ஐலேண்ட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.

    இது ஸ்கிரீனின் மேல்புறத்தில் ஒவல் வடிவ கட்-அவுட் கொண்டுள்ளது. இதில் செல்ஃபி கேமரா, ஃபேஸ் ஐடி சென்சார் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் ஐபோன் 15 மாடலில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என CAD ஃபைல் விவரங்களில் தெரியவந்துள்ளது. ஸ்கிரீன் தவிர இந்த மாடலின் ரெசல்யூஷன், ரிப்ரெஷ் ரேட் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன.

     

    புதிய ரெண்டர்களின் படி ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் புதிய ஐபோன் மாடல்கள் அனைத்திலும் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் மாடல்களில் பழைய தொழில்நுட்பங்கள் இடம்பெறாது என்பதால் ஆப்பிள் இந்த முடிவை எடுக்கும் என கூறப்படுகிறது.

    ஸ்டாண்டர்டு ஐபோன் மாடல்களில் டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. மூன்றாவது கேமரா மற்றும் LiDAR உள்ளிட்டவை ப்ரோ மாடல்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. இவைதவிர ஐபோன் 15 மாடலில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. இது ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் அதிவேக டேட்டா பரிமாற்றத்தை வழங்குகிறது.

    Photo Courtesy: 9to5mac

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ரேசர் 2023 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • தற்போதைய தகவல்களில் புதிய மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் பெரிய கவர் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போன் விவரங்களை டெக்அவுட்லுக் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி புதிய மோட்டோரோலா ரேசர் 2023 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட பெரிய கவர் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் 2.7 இன்ச் ஸ்கிரீன் உள்ள நிலையில், புதிய மாடல் 3.6 இன்ச் அல்லது இதை விட பெரிய ஸ்கிரீன் வழங்கப்படலாம்.

    புதிய மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போன் "ஜூனோ" குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக தற்போதைய தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2022 வெர்ஷனுடன் ஒப்பிடும் போது, புதிய மாடலில் வித்தியாசமான ரியர் டிசைன் உள்ளது. இந்த பேனல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் தனித்துவ டிசைன் கொண்டிருக்கிறது.

     

    ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் மேட் வெல்வட் AG கிளாஸ், மோட்டோரோலா மற்றும் ரேசர் லோகோ இடம்பெற்று இருக்கிறது. மேல்புறத்தில் கிளாசி கிளாஸ், பெரும்பாலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

    மோட்டோரோலா ரேசர் 2022 மாடலில் 2.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ 2 ஃப்ளிப் மாடலில் பெரிய கவர் டிஸ்ப்ளே அதாவது 3.26 இன்ச் அளவில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மோட்டோரோலா புதிய மாடலில் சற்றே பெரிய கவர் டிஸ்ப்ளே வழங்கஇருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய மாடலின் பின்புறத்தில் உயர்த்தப்பட்ட கேமரா ஐலேண்ட், இரண்டு கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ் இடம்பெற்று இருக்கிறது. எனினும், புதிய 2023 மோட்டோரோலா ரேசர் மாடலில் இது சற்றே வித்தியாசமாக உள்ளது. மோட்டோரோலா ரேசர் 2023 மாடலில் கேமரா ஐலேண்ட் வழங்கப்படவில்லை.

    மோட்டோரோலா ரேசர் 2023 மாடலில் அதன் முந்தைய வெர்ஷனில் இருப்பதை போன்ற டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதன் நான்கு புறங்களிலும் மெல்லிய பெசல்கள், எளிதில் கண்டறிய முடியாத கிரீஸ்கள் உள்ளன. ஸ்மார்ட்போனின் ரெண்டர்களில் செல்ஃபி கேமரா இடம்பெறவில்லை, எனினும், இதில் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

    Photo Courtesy: TechOutlook

    • ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
    • புதிய ஹெச்டிசி டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கிறது.

    அலுவல் பணிகளை மேற்கொள்வது, படிப்படி என பலதரப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய பலரும் டேப்லெட்களை பயன்படுத்த துவங்கி உள்ளனர். இந்த டிரெண்ட் காரணமாக டேப்லெட் சந்தை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. அந்த வரிசையில், ஹெச்டிசி A102 பெயரில் புதிய டேப்லெட் அறிமுகமாக இருக்கிறது.

    கூகுள் SMS சான்றளிக்கும் தளத்தில் புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ஹெச்டிசி டேப்லெட் தற்போது டெஸ்டிங் கட்டத்தில் உள்ளது. மேலும் இது பிப்ரவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் மிட்-ரேன்ஜ் அல்லது பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

     

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹெச்டிசி A102 மாடலில் 4ஜி வைபை வசதி, 11.0 இன்ச் 2K டிஸ்ப்ளே, 2000x1200 பிக்சல் ரெசல்யூஷன், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், Arm கார்டெக்ஸ் A75 மற்றும் Arm கார்டெக்ஸ் A55 கோர்கள் முறையே 2GHz மற்றும் 1.8GHz இயங்குகின்றன. இத்துடன் 20MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் ஃபேஸ் டிடெக்ஷன் மற்றும் ஏஐ ஃபேஸ் அன்லாக் வசதி, ஆண்டராய்டு 12, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் 8000 எம்ஏஹெச் பேட்டரி, ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைபை வசதி, யுஎஸ்பி டைப் சி 3.0 போர்ட், OTG சப்போர்ட் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு மற்றும் அலுவல் ரீதியிலான பயன்பாடுகளுக்கு ஏற்ற பட்ஜெட் பிரிவில் புதிய டேப்லெட் வாங்க நினைப்போருக்கு ஏற்ற மாடலாக இது இருக்கும் என தெரிகிறது. புதிய ஹெச்டிசி A102 மாடல் முதற்கட்டமாக ஆப்ரிக்க சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் மற்ற நாடுகளில் அறிமுகமாக இருக்கிறது.

    Photo Courtesy: Gizmochina

    • போக்கோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • முன்னதாக போக்கோ X5 5ஜி மற்றும் X5 ப்ரோ மாடல்களை போக்கோ நிறுவனம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.

    போக்கோ X5 5ஜி மற்றும் போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டு போக்கோ X5 GT மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் ஏற்கனவே TKDN மற்றும் BIS வலைத்தளங்களில் இடம்பெற்று விட்டது. இந்த வரிசையில், தற்போது இதே ஸ்மார்ட்போன் IMDA சான்றையும் பெற்றுவிட்டது. IMDA வலைத்தளத்தில் போக்கோ X5 GT ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், இந்த ஸ்மார்ட்போன் 23049PCD8G எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி, வைபை, ப்ளூடூத் மற்றும் NFC சப்போர்ட் வழங்கப்பட இருக்கிறது. இவைதவிர புதிய போக்கோ X5 GT ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் எதுவும் இந்த வலைத்தளத்தில் இடம்பெறவில்லை. எனினும், முந்தைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 12 டர்போ மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் என கூறப்பட்டது.

    ரெட்மி நோட் 12 டர்போ மாடல் சீன சந்தையில் மட்டும் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் போக்கோ பிராண்டிங்கில் அறிமுகமாகிறது.

    போக்கோ X5 GT எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி போக்கோ X5 GT ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 5500 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    • போக்கோ நிறுவனம் தனது புதிய C55 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்தது.
    • கடந்த மாதம் போக்கோ C5 ஸ்மார்ட்போன் அறிமுகமான நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகிறது.

    பல்வேறு டீசர்களை தொடர்ந்து போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ C55 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு வர இருக்கும் போக்கோ C55 இந்திய சந்தையில் பிப்ரவரி 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    கடந்த மாதம் போக்கோ C5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி எந்த விவரமும் வெளியாகவில்லை. எனினும், புதிய போக்கோ C55 ஸ்மார்ட்போன் லெதர் போன்ற பின்புறம், டூயல் கேமரா சென்சார்கள், பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

     

    முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களின் படி போக்கோ C55 ஸ்மார்ட்போன் ரிபிராண்டு செய்யப்பட்ட ரெட்மி 12C மாடலாக இருக்கும் என தெரிகிறது. இதன் பின்புறம் வித்தியாசமான பேனல் இடம்பெற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கைரேகை சென்சார், கேமரா மாட்யுலில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

     

    ரெட்மி 12C ஸ்மார்ட்போனில் 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI13 ஸ்கின் கொண்டிருக்கும் ரெட்மி 12C ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் அடாப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1 மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க போக்கோ C55 ஸ்மார்ட்போனில் டூயல் கேமராக்கள் வழங்கப்படுகின்றன. இவை 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா என கூறப்படுகிறது. இத்துடன் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    ×