search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரோலபில் ஸ்லைடிங் ஸ்கிரீன் கொண்ட டெக்னோ கான்செப்ட் போன் அறிமுகம்
    X

    ரோலபில் ஸ்லைடிங் ஸ்கிரீன் கொண்ட டெக்னோ கான்செப்ட் போன் அறிமுகம்

    • டெக்னோ நிறுவனத்தின் புதிய கான்செப்ட் போன் ஸ்லைடிங் ஸ்கிரீன், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது.
    • கான்செப்ட் போன் என்பதால் உண்மையில் இது எப்போது விற்பனைக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    டெக்னோ ஃபேண்டம் விஷன் வி கான்செப்ட் போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. எனினும், இது வழக்கமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கிறது. ரோலபில் ஸ்லைடிங் ஸ்கிரீன் இருப்பதே இதன் முக்கிய அம்சமாக உள்ளது. மேலும் இது கான்செப்ட் மாடல் என்பதால், எப்போது வர்த்தக ரீதியாக அறிமுகமாகும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    புது கான்செப்ட் போன் குறித்து வெளியாகி இருக்கும் வீடியோவில் ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் மெல்லிய பெசல்கள், வளைந்த எட்ஜ் கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள், குவாட் எல்இடி ஃபிலாஷ் உள்ளது. இதன் கேமரா செட்டப் கீழ் சிறிய டிஸ்ப்ளே உள்ளது. இது நோட்டிஃபிகேஷன், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, ரிமைண்டர் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.

    இந்த சாதனம் ஏரோஸ்பேஸ் கிரேடு டைட்டானியம் அலாய் கேசிங், டியுரபில் ஹின்ஜ் மற்றும் காப்புரிமை பெற்ற டிசைன் கொண்டுள்ளது. மடிக்கப்பட்ட நிலையில், இந்த சாதனம் சாதாரன ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. இதன் உள்புற டிஸ்ப்ளே 10.1 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. புது கான்செப்ட் மாடல் பற்றி டெக்னோ சார்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.

    2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வு அடுத்த மாத இறுதியில் துவங்க இருக்கிறது. இந்த நிகழ்வில் பல்வேறு ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்களின் புது சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம். எனினும், டெக்னோ தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    Photo Courtesy: GSMArena

    Next Story
    ×