என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதிய கேஜெட்டுகள்

ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் உருவாகும் சாம்சங் லேப்டாப்

- சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புது லேப்டாப் மாடலில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் டச் ஸ்கிரீன் வசதி உள்ளது.
- இதனை லேப்டாப் மட்டுமின்றி இதனை டேப்லெட் போன்று பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது புது லேப்டாப் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த லேப்டாப் தென் கொரிய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய சாம்சங் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடலில் உள்ள 360 டிகிரி ஹின்ஜ் இதனை லேப்டாப் அல்லது டேப்லெட் போன்று பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடல் குவால்காம் நிறுவன பாகங்கள் மற்றும் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள கிராஃபிக்ஸ், பிராசஸர், வைபை கனெக்ஷன் தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளை குவால்காம் நிறுவனம் வழங்கி இருக்கிறது.
இந்த லேப்டாப்பில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 33.7செமீ டச் ஸ்கிரீன், 11.5mm தடிமனாக உள்ளது. இதன் ஒட்டுமொத்த எடை 1.04 கிலோ ஆகும். சாம்சங் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடலில் ஸ்னாப்டிராகன் 8cx ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய பிராசஸரை விட 57 சதவீதம் வரை அதிக செயல்திறன் மற்றும் 85 சதவீதம் சிறப்பான மல்டி-டாஸ்கிங் அனுபவத்தை வழங்குகிறது.
கூடுதலாக குவால்காம் அட்ரினோ GPU வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு குவால்காம் நிறுவனத்தின் ஃபாஸ்ட்கனெக்ட் 6900 சிஸ்டம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அதிவேக மற்றும் சீரான வைபை 6E கனெக்ஷன் வழங்கப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரை இந்த சாதனத்தை முழு சார்ஜ் செய்தால் 35 மணி நேரம் வரை தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். இந்த சாதனத்தில் சாம்சங் நிறுவனத்தின் S பென் ஸ்டைலஸ் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடல் கிராஃபைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 1.89 மில்லியன் வொன் இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 585 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தென் கொரிய சந்தையில் இதன் விற்பனை ஜனவரி 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
