என் மலர்
புதிய கேஜெட்டுகள்

இணையத்தில் லீக் ஆன ரெண்டர்கள் - சத்தமின்றி உருவாகும் கேலக்ஸி A54 5ஜி!
- சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
- புது ஸ்மார்ட்போன் நான்கு வித நிறங்களில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முன்னதாக CAD சார்ந்த ரெண்டர்கள் வெளியாகி இருந்தது. ரெண்டர்களின் படி புது ஸ்மார்ட்போன் பிளாக், பர்ப்பில், வைட் மற்றும் கிரீனிஷ் எல்லோ என நான்கு வித நிறங்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல், AMOLED ஸ்கிரீன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 158.3x76.7mm அளழில் உருவாகி இருக்கிறது. இது கேலக்ஸி A53 மாடலை விட சற்றே அகலமாக இருக்கும் என தெரிகிறது. இத்துடன் 6.4 இன்ச் OLED HD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 1380 பிராசஸர் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். இதில் 50MP பிரைமரி கேமரா இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகமாகும் என தெரிகிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம்.
இது மட்டுமின்றி கேலக்ஸி A74 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ப்படாது என்றும் கேலக்ஸி A54 ஸ்மார்ட்போன் அடுத்த கேலக்ஸி A சீரிசில் டாப் எண்ட் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இதற்கு மாற்றாக கேலக்ஸி S22 FE ஸ்மார்ட்போன் கேலக்ஸி A74 விலை பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
Photo Courtesy: Android Headlines






