என் மலர்

  புதிய கேஜெட்டுகள்

  விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2
  X

  விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • புது ஸ்மார்ட்போன் தவிர இயர்பட்ஸ் மாடலும் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

  ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை ஜனவரி 4 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதும் ஒன்பிளஸ் நிறுவனம் இதே நாளில் தனது ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலும் அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல்கள் சர்வதேச வெளியீட்டுக்கு முன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

  வெளியீட்டு தேதி மட்டுமின்றி புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் 4000Hz அல்ட்ரா வைடு பேண்ட் நாய்ஸ் ரிடக்‌ஷன், 48db டீப் ஆக்டிவ் நாய்ஸ் ரிடக்‌ஷன் வசதி கொண்டிருக்கும் என ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதில் உள்ள டீப் நாய்ஸ் ரிடக்‌ஷன் வசதி 99.6 சதவீதம் வரை வெளிப்புற சத்தத்தை தடுக்கும். இதன் ஃபிரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 10Hz முதல் 40KHz வரை உள்ளது.

  டீசரின் படி புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் அப்சிடியன் பிளாக் மற்றும் அர்போர் கிரீன் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுக்கு ஒற்றுப் போகும் வகையில் உள்ளது. இயர்பட்ஸ் பெட்டியில் டைனாடியோ (DYNAUDIO) பிராண்டிங் மற்றும் டிசைன் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

  இதுவரை வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 11mm மற்றும் 6mm டூயல் டிரைவர்கள், ANC மோடில் அதிகபட்சம் 6 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப், ANC இல்லாத பட்சத்தில் 9 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப் வழங்கும் என கூறப்பட்டது. இதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது இதன் பேட்டரி லைஃப் ANC மோடில் 22 மணி நேரமும், ANC பயன்படுத்தாத சமயத்தில் 38 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

  Next Story
  ×