search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஐகூ 11 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு
    X

    ஐகூ 11 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

    • ஐகூ நிறுவனம் தனது புது ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் சீனா மற்றும் சில சந்தைகளில் அறிமுகம் செய்தது.
    • தற்போது இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது

    பல்வேறு டீசர்களை தொடர்ந்து ஐகூ 11 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை ஐகூ நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனா மற்றும் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. மேலும் இது உலகின் அதிவேகமான ஸ்மார்ட்போன் என ஐகூ தெரிவித்து இருக்கிறது.

    பென்ச்மார்க்கிங் தளமான AnTuTu-வில் ஐகூ 11 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இது உலகின் அதிவேகமான ஸ்மார்ட்போன் என ஐகூ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய சந்தையில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனும் ஐகூ 11 தான் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதில் முற்றிலும் புதிய வி2 சிப் உள்ளது. இது சூப்பர் நைட் வீடியோ மற்றும் மேம்பட்ட கேம் ஃபிரேம் இண்டர்பொலேஷன் தொழில்நுட்பத்தை வழங்குகிறது.

    ஐகூ 11 அம்சங்கள்:

    6.78 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ வளைந்த E6 LTPO 4.0 AMOLED டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    16 ஜிபி LPDDR5X ரேம்

    256 ஜிபி UFS 4.0 மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    13MP 2x டெலிபோட்டோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்

    இந்திய சந்தையில் புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்த மாதம் அறிமுக நிகழ்வை ஒட்டி அறிவிக்கப்படும்.

    Next Story
    ×