என் மலர்
புதிய கேஜெட்டுகள்

50MP பிரைமரி கேமராவுடன் இந்தியா வரும் ரெட்மி நோட் 12 ப்ரோ!
- சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனினை இதே நிகழ்வில் அறிமுகம் செய்வதாக சியோமி அறிவித்து இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.
5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, சர்ஜிங் P1 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனினை 19 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்திடும். இந்த ஸ்மார்ட்போனுடன் 120 வாட் GaN சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிசில் நோட் 12 ப்ரோ பிளஸ் மற்றும் நோட் 12 ப்ரோ மாடல்களின் வெளியீடு மட்டும் உறுதி செய்யப்பட்டு விட்டது. இரு மாடல்களுடன் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.






