என் மலர்

  புதிய கேஜெட்டுகள்

  60Hz AMOLED டிஸ்ப்ளே கொண்ட நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!
  X

  60Hz AMOLED டிஸ்ப்ளே கொண்ட நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் டேப் டு வேக் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் அலாய் பாடி, IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

  நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் கலர்ஃபிட் ப்ரோ 4 சீரிசில் நாய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த மூன்றாவது மாடல் ஆகும். புது வேரியண்டில் சிறு மாற்றங்கள், புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

  ரூ. 4 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ ஆல்ஃபா 4 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் ரியல்மி வாட்ச் 3 ப்ரோ, ஒன்பிளஸ் நார்டு வாட்ச் மற்றும் சில மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ ஆல்ஃபா 4 மாடலில் 1.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, சதுரங்க வடிவம் கொண்ட டயல், 368x448 பிக்சல் ரெசல்யுஷன், 60Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.

  இத்துடன் பால்ம் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு டிஸ்ப்ளேவை ஆஃப் செய்ய முடியும். இதற்கு கைகளை ஸ்கிரீன் மீது வைத்தாலே போதுமானது. இத்துடன் டேப்-டு-வேக் அம்சம் மூலம் ஸ்கிரீன் மீது ஒரே க்ளிக் செய்தால் ஸ்கிரீனை ஆன் செய்து கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் வலது புறத்தில் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் உள்ளதை போன்ற டிஜிட்டல் கிரவுன் இடம்பெற்று இருக்கிறது.

  அலுமினியம் அலாய் பில்டு கொண்டிருக்கும் கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா மாடலில் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் மற்றும் ஸ்டிரெஸ் டிராக்கர், மென்ஸ்டுரல் சைக்கில் மாணிட்டர், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா மாடலில் பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன் மற்றும் ப்ளூடூத் 5.3 வசதி வழங்கப்பட்டுள்ளது.

  இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏழு நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் வானிலை, பங்கு சந்தை அப்டேட்கள், நோட்டிஃபிகேஷன் மற்றும் அதிக அம்சங்கள் உள்ளன. இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பின்க், புளூ, வைன் மற்றும் டியல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை டிசம்பர் 28 ஆம் தேதி துவங்குகிறது.

  Next Story
  ×