என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    108MP பிரைமரி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் கேலக்ஸி S22 FE
    X

    108MP பிரைமரி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் கேலக்ஸி S22 FE

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S22 FE ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • புது சாம்சங் ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S22 FE ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என கூறப்பட்ட நிலையில், தற்போது இதன் வெளியீடு உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் சிப்செட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் டுவட்டர் பதிவில் கேலக்ஸி S22 FE மற்றும் கேலக்ஸி பட்ஸ் 2 மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இரு சாதனங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதை லீக்கர் டொஹியுன் கிம் உறுதிப்படுத்தி இருக்கிறார். எனினும், இவர் கேலக்ஸி S22 FE வெளியாகாது என்றும் தெரிவித்துள்ளார்.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த நிகழ்வில் கேலக்ஸி S23 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மற்றொரு டிப்ஸ்டரான RGcloudS சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S22 FE மற்றும் கேலக்ஸி டேப் S8 FE போன்ற சாதனங்களை இரண்டாவது அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யும் என தெரிவித்து இருக்கிறார்.

    கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் மேலும் சில சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. கேலக்ஸி A74 ஸ்மார்ட்போனிற்கு மாற்றாக கேலக்ஸி S22 FE அறிமுகம் செய்யப்படும் என டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார். முன்னதாக சாம்சங் நிறுவனம் புதிய A14, A24, A34 மற்றும் A54 என புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

    Next Story
    ×