search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இணையத்தில் வெளியான ஐகூ 11 ப்ரோ அம்சங்கள்
    X

    இணையத்தில் வெளியான ஐகூ 11 ப்ரோ அம்சங்கள்

    • 2023 ஆண்டிற்கான பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஐகூ நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
    • மற்ற நிறுவனங்களை போன்றே ஐகூ நிறுவனமும் தனது ஸ்மார்ட்போனில் அதிவநீன குவால்காம் பிளாக்‌ஷிப் பிராசஸரை வழங்க இருக்கிறது.

    ஐகூ நிறுவனம் அடுத்த ஆண்டிற்கான பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் குவால்காம் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் பிராசஸர் தான் புதிய ஐகூ ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட இருக்கிறது. புதிய ஐகூ பிளாக்‌ஷிப் மாடல் ஐகூ 11 ப்ரோ பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய ஐகூ 11 ப்ரோ அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    டிப்ஸ்டரான யோகேஷ் ரார் ஐகூ 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை வெளியிட்டு இருக்கிறார். அதன் படி ஐகூ 11 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் டிஸ்ப்ளே 2K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், AMOLED LTPO பேனல், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இது முந்தைய பிராசஸரை விட அதிக செயல்திறன் மற்றும் பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய ஐகூ 11 ப்ரோ மாடலில் அதிகபட்சமாக 12 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படலாம். புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 14.6MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. ஐகூ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    ஐகூ நிறுவனத்தின் ஐகூ 11 ப்ரோ மாடல் சாம்சங் கேலக்ஸி S23, சியோமி 13 ப்ரோ, விவோ X90 ப்ரோ மற்றும் அசுஸ் ரோக் போன் 7 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். பிளாக்‌ஷிப் பிரிவில் அசத்தல் அம்சங்களுடன் களமிறங்கினாலும், ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் விலை போன்ற விஷயங்களே அதன் விற்பனையை தீர்மானிக்கும்.

    Next Story
    ×