என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இணையத்தில் லீக் ஆன ரெட்மி K60 கேமிங் விவரங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன ரெட்மி K60 கேமிங் விவரங்கள்

    • சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • புது ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் சியோமி ரெட்மி K60 கேமிங் பெயரில் புது மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி சியோமி தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. புது ஸ்மார்ட்போன் விவரங்கள் IMEI டேட்டாபேஸ் வலைதளத்தில் 23011310C என மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

    இத்துடன் புது ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் முதற்கட்டமாக இந்த மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ரெட்மி K60 கேமிங் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் "சாக்ரடிஸ்" எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக ரெட்மி K60 சீரிஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், 100 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. சீன சந்தையில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி K50 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ரெட்மி K60 கேமிங் அறிமுகம் செய்யப்படுகிறது.

    ரெட்மி K50 கேமிங் எடிஷன் மாடலில் 6.67 இன்ச் FHD+1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவாஸ்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 64MP பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா செட்டப், 20MP செல்பி கேமரா, அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, 4700 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை CNY 3299 இந்திய மதிப்பில் ரூ. 39 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×