search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இணையத்தில் லீக் ஆன ஒப்போ போல்டபில் போன் விவரங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன ஒப்போ போல்டபில் போன் விவரங்கள்

    • ஒப்போ நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஒப்போ போல்டபில் ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    ஒப்போ நிறுவனம் தனது முதல் கிளாம்ஷெல் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் டிசம்பர் மாத வாக்கில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய ஒப்போ போல்டபில் ஸ்மார்ட்போனின் பெயர் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகிவில்லை.

    எனினும், இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ ஃபைண்ட் N ப்ளிப் எனும் பெயரில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ஒப்போ ஃபைண்ட் N ப்ளிப் மாடல் அம்சங்களை டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    டிராகன்ஃபிளை எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் ஒப்போ ஃபைண்ட் N ப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் பர்பில் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4, மோட்டோ ரேசர் 2022 மற்றும் ஹூவாய் P50 பாக்கெட் நியூ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ ஃபைண்ட் N ப்ளிப் மாடலில் 6.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED பேனல், 3.26 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே, 2520x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் 32MP பிரைமரி கேமரா, 50MP சென்சார், 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்படுகிறது.

    முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக- ஒப்போ ஃபைண்ட் N-ஐ அறிமுகம் செய்தது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஒப்போ ஃபைண்ட் N2 பெயரில் இந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    Next Story
    ×