என் மலர்
புதிய கேஜெட்டுகள்

பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் ரெட்மி K60 சீரிஸ்
- சியோமி நிறுவனம் ரெட்மி K60 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- ரெட்மி K சீரிஸ் ரெட்மி பிராண்டின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆகும்.
சியோமி நிறுவனம் ரெட்மி K50 சீரிசின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி K50 சீரிஸ் தற்போது அப்டேட் செய்யப்பட உள்ளது. புதிய ரெட்மி K60 சீரிஸ் ரெட்மி பிராண்டின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும்.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த வரிசையில், மற்றொரு புது தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனின் சார்ஜிங் விவரங்கள் இடம்பெற்று உள்ளது. புதிய ரெட்மி K60 சீரிஸ் இருவித சார்ஜிங் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் என தெரிகிறது. இவற்றில் 67 வாட் வயர்டு, 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங், மற்றும் 120 வாட் வயர்டு, 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட உள்ளது.
இருவித சார்ஜிங் வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை சியோமி ஏற்கனவே வெளியிட்டு உள்ளது. மேலும் இரு வேரியண்ட்களில் 120 வாட் சார்ஜிங் கொண்ட மாடலுடன் ஒப்பிடும் போது 67 வாட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போனில் பெரிய பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்கள் வழங்கப்படலாம்.
இதன் டாப் எண்ட் மாடலில் 2K டிஸ்ப்ளே பேனல், 50MP பிரைமரி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் சமீபத்திய ஐபோன் 14 ப்ரோ சீரிசில் அறிமுகம் செய்த டைனமிக் ஐலேண்ட் அம்சம் புதிய ரெட்மி K60 சீரிஸ் மாடல்களில் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.






