search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    கூகுள் பிக்சல் போல்டு வெளியீட்டு விவரம்
    X

    கூகுள் பிக்சல் போல்டு வெளியீட்டு விவரம்

    • கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக விவரம் வெளியாகி இருக்கிறது.
    • சமீபத்தில் தான் கூகுள் நிறுவனம் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.

    கூகுள் பிக்சல் போல்டு அறிமுக விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். கூகுள் நிறுவனம் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த நிலையில், தற்போது பிக்சல் போல்டு அறிமுக விவரம் வெளியாகி இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் கூகுள் நிறுவனம் அக்டோபரில் நடத்தும் பிக்சல் 7 சீரிஸ் அறிமுக நிகழ்விலேயே பிக்சல் போல்டு மாடலையும் அறிமுகம் செய்யும் என கூறப்பட்டு இருந்தது. எனினும், இந்த தகவல்களை பொய்யாக்கும் வகையில் கூகுள் தனது பிக்சல் போல்டு மாடலை அறிமுகம் செய்யவில்லை.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒற்றி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து டிஸ்ப்ளே சப்ளை செயின் கன்சல்டண்ட் தலைமை செயல் அதிகாரி ராஸ் யங், கூகுள் நிறுவனத்தின் முதல் பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார்.

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான டிஸ்ப்ளே பாகங்களின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். முந்தைய தகவல்களில் கூகுள் நிறுவனம் இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து பெலிக்ஸ் எனும் குறியீட்டு பெயர் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியானது.

    Next Story
    ×