search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இணையத்தில் லீக் ஆன போக்கோ F5 5ஜி அம்சங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன போக்கோ F5 5ஜி அம்சங்கள்

    • போக்கோ நிறுவனம் முற்றிலும் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இது போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

    போக்கோ நிறுவனம் போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இது சீனாவில் விற்பனையாகி வரும் ரெட்மி K40s ஸ்மார்ட்போனின் ட்வீக் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். தற்போது போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் போக்கோ F5 5ஜி ரெட்மி K60 5ஜி ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2023 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 23013RK75C எனும் மாடல் நம்பர் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள் IMEI வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    இதன் இந்திய வேரியண்ட் 23013PC5I மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. குளோபல் வேரியண்ட் 23013PC75G மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி K60 பெயரில் முதலில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சீனாவை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் போக்கோ F5 5ஜி பெயரில் சர்வதேச சந்தை மற்றும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    இதுதவிர போக்கோ F5 ஸ்மார்ட்போனிற்கு மாண்ட்ரியன் எனும் குறியீட்டு பெயர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் AMOLED டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பிரைட்னஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும். இத்துடன் ரெட்மி K60 மாடலில் உள்ள அம்சங்களே வழங்கப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×