என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஒன்பிளஸ் 11 ப்ரோ ரெண்டர்கள் இம்மாத துவக்கத்தில் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
தற்போதைய தகவல்களின் படி ஒன்பிளஸ் 11 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், QHD+ ரெசல்யூஷன், பன்ச் ஹோல் கட்-அவுட், 120Hz ரிப்ரெஷ் ரேட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 32MP டெலிபோட்டோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஹேசில்பிலாட் கேமரா தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
புதிய ஒன்பிளஸ் 11 ப்ரோ மாடலில் குவால்காம் நிறுவனம் அறிவிக்க இருக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்றும் டாப் எண்ட் மாடல் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெநரி கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் பாஸ்ட் சார்ஜிங், டால்பி அட்மோஸ், 5ஜி, வைபை, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட், ஆண்ட்ராய்டு 13 வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட கேமரா மாட்யுல் வழங்கப்பட இருக்கிறது. வட்ட வடிவ கேமரா பம்ப் மூன்று சென்சார்கள் மற்றும் எல்இடி பிளாஷ் கொண்டிருக்கிறது.
Photo Courtesy: @OnLeaks @Smartprix
- விவோ நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை அறிவித்தது.
- இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த விவோ X போல்டு ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
விவோ நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. புது போல்டபில் போன் விவோ ஏற்கனவே அறிமுகம் செய்த விவோ X போல்டு போல்டபில் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன்ா ஆகும். புது ஸ்மார்ட்போன் விவோ X போல்டு பிளஸ் 5ஜி என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில் புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி மாடல் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டீசரின் படி புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய விவோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

இத்துடன் புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செய்ஸ் பிராண்டிங்கில் 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP போர்டிரெயிட் மற்றும் 8MP பெரிஸ்கோப் கேமரா வழங்கப்பட இருக்கிறது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட மற்றும் அதிக உறுதியான ஹின்ஜ் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள ஹின்ஜ் டியுவி ரெயின்லாந்து சான்று பெற்று இருக்கிறது. பரிசோதனையில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று லட்சம் முறை மடிக்கப்பட்டு இருக்கிறது. புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 4730 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 80 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
- ரியல்மி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் டைனமிக் ஐலேண்ட் போன்ற அம்சத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
- இதனை உறுதிப்படுத்தும் வகையில் வலைதள பதிவை வெளியிட்டு இருக்கிறது.
சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ரியல்மி ஆப்பிள் சமீபத்திய ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் அறிமுகம் செய்த டைனமிக் ஐலேண்ட் போன்ற அம்சத்தை தனது சாதனங்களில் கொண்டு வர இருக்கிறது. இதற்காக பயனர்கள் தங்களின் யோசனைகளை தெரிவிக்கலாம் என ரியல்மி தனது பயனர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வித்தியாசமான அம்சமாக டைனமிக் ஐலேண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
"கேமரா ஹோல் அருகில் உள்ள யுஐ பல்வேறு வடிவம் மற்றும் அளவுகளில் மாறி அழைப்புகள், அலெர்ட்கள், நோட்டிபிகேஷன் மற்றும் பல்வேறு விவரங்களை காண்பிக்கும்," என ரியல்மி தெரிவித்து இருக்கிறது. இந்த அம்சத்தை கச்சிதமான ஒன்றாக குறிப்பிடும் ரியல்மி தனது பயனர்களிடம் இந்த அம்சத்தை தனது சாதனங்களில் எப்படி கொண்டு வரலாம் என யோசனை வழங்க கோரிக்கை விடுத்து உள்ளது.

"விருப்பமுள்ள பயனர்கள் இந்த அம்சத்தை எப்படி பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பதை வரைபடம், ஜிப், எழுத்துக்கள் வாயிலாக தெரிவிக்கலாம். இது எப்படி வேலை செய்யும், காட்சியளிக்கும் எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கமெண்ட் செய்யுங்கள். உங்களின் யோசனைகளை எங்களின் ரியல்மி யுஐ டெவலப்பர்கள் பரிசீலனை செய்வர்," என ரியல்மி தெரிவித்து இருக்கிறது.
"உங்களின் கனவு ஐலேண்ட் எப்படி இருக்க வேண்டும்?" என்ற கேள்வியுடன் ஹோல்-பன்ச் கட்-அவுட்-ஐ சுற்றி மஞ்சள் நிற வெளிச்சம் இருப்பது போன்ற படத்தை ரியல்மி வெளியிட்டு உள்ளது. இது எதிர்காலத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்ற வாசகமும் இடம்பெற்று இருக்கிறது.
இம்மாத துவக்கத்தில் ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது முதல் டைனமிக் ஐலேண்ட் அம்சம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டைனமிக் ஐலேண்ட் டிஸ்ப்ளேவின் மேல்புறம் மாத்திரை வடிவிலான பகுதியில் ஸ்மார்ட்போன் நோட்டிபிகேஷன்களை அழகாக காண்பிக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இந்த அம்சம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நார்டு வாட்ச் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- இது தவிர ஒன்பிளஸ் 10R 5ஜி ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 10R 5ஜி பிரைம் புளூ எடிஷன் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில் ஒன்பிளஸ் நார்டு வாட்ச் மாடலையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் AMOLED டிஸ்ப்ளே, பல்வேறு சென்சார்கள், குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
புதிய ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய நார்டு வாட்ச் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. நார்டு சீரிஸ் என்பதால் இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய நார்டு வாட்ச் மாடலுக்காக பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் அதிக வாட்ச் பேஸ்கள், டிஸ்ப்ளே, ஸ்போர்ட்ஸ் மோட்கள் பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்பட இருக்கிறது. இது போன்று ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் கொண்ட டீசர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமேசான் வலைதளத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி சிறப்பு விற்பனை துவங்க இருக்கிறது. அந்த வகையில் இந்த வாட்ச் சிறப்பு விற்பனையின் போது அறிமுகமாகாது என்றே தெரிகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஒன்பிளஸ் நார்டு வாட்ச் ஜிபிஎஸ், பல்வேறு வாட்ச் பேஸ்கள், ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை டிராக் செய்யும் சென்சார்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு வாட்ச் விலை ரூ. 5 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இது மட்டுமின்றி வங்கி சலுகைகள் மற்றும் சிறப்பு தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தைக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக மாடல் ஆகும்.
சீனா டெலிகாம் நிறுவனத்துடன் இணைந்து சாம்சங் நிறுவனம் W22 பெயரில் ஸ்மார்ட்போன் மாடலை கடந்த ஆண்டு அறிமுகம் செய்து இருந்தது. இது கேலக்ஸி Z போல்டு 3 ஸ்மார்ட்போனின் லக்சரி வெர்ஷன் ஆகும். இது சீனாவுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக மாடல் ஆகும்.
தற்போது இரு நிறுவனங்களும் இணைந்து மற்றொரு ஸ்மார்ட்போனை உருவாக்க கூட்டணி அமைத்துள்ளன. இம்முறை இரு நிறுவனஎங்கள் கூட்டணியில் W23 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி Z போல்டு 4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் TENAA வலைதளத்தில் லீக் ஆகி உள்ளது.

அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மொத்தத்தில் ஐந்து கேமரா சென்சார்கள், 4320 எம்ஏஹெச் பேட்டரி, 5ஜி கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் பின்புறம் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 12MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. செல்பி எடுக்க 10MP மற்றும் 4MP அண்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கப்படுகிறது.
புதிய W23 ஸ்மார்ட்போனின் விலை 16 ஆயிரத்து 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 92 ஆயிரத்து 997 என நிர்ணயம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட இருக்கிறது.
- விவோ நிறுவனம் தனது இரண்டாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- விவோ மட்டுமின்றி ஐகூ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்களும் இணையத்தில் வெளியாக துவங்கி உள்ளன.
விவோ நிறுவனத்தின் இரண்டாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக விவோ X போல்டு பிளஸ் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த போல்டபில் ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம். விவோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஐகூ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. எனினும், இரு மாடல்கள் பற்றி இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
எனினும், இரு ஸ்மார்ட்போன் விவரங்களை டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் டிப்ஸ்டர் மூலம் வெளியாகி இருக்கிறது. அதன்படி விவோ X போல்டு பிளஸ் முந்தைய X போல்டு போன்ற மெமரி ஆப்ஷன் மற்றும் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனினும், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டும் கூடுதலாக ரெட் நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது. விவோ நிறுவனத்தின் முந்தைய X போல்டு ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

ஐகூவை பொருத்தவரை நியோ 7 ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் AMOLED E5 டிஸ்ப்ளே, FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
விவோ X போல்டு பிளஸ் மாடலில் 6.53 இன்ச் பிரைமரி FHD+ AMOLED டிஸ்ப்ளே, 8.03 இன்ச் இண்டீரியர் ஸ்கிரீன், 2K ரெசல்யூஷன் வழங்கப்படும் என தெரிகிறது. இரு டிஸ்ப்ளேக்களிலும் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP போர்டிரெயிட் கேமரா, 8MP பெரிஸ்கோப் கேமரா மற்றும் 5X ஆப்டிக்கல் ஜூம், 16MP செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- ஏசர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய ஆண்ட்ராய்டு டிவிக்களில் 60 வாட் ஹை-பை ப்ரோ ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் ஏசர் ஹோம் எண்டர்டெயின்மெண்ட் பொருட்களை விற்பனை செய்யும் உரிமம் பெற்ற இண்ட்கல் டெக்னாலஜிஸ் நிறுவனம் H மற்றும் S சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு டிவிக்களும் ஆண்ட்ராய்டு டிவி 11 ஒஎஸ் கொண்டிருக்கின்றன. இத்துடன் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன், MEMC தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன.
புதிய டிவி மாடல்களில் H சீரிஸ் 60 வாட் ஹை-பை ப்ரோ ஆடியோ சிஸ்டம், 65 இன்ச் மாடலில் 50 வாட் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவிக்களில் பிரீமியம் மெட்டல் பினிஷ், ஷெல் பாடி மற்றும் ஃபிரேம்லெஸ் டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இவை மூன்று ஆண்டுகள் வாரண்டியுடன் வருகின்றன.

இந்த டிவி-க்கள் நாட்டின் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள், நாடு முழுக்க சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிக விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவை 32 இன்ச் HD, 43 இன்ச் UHD, 50 இன்ச் UHD, 55 இன்ச் UHD மற்றும் 65 இன்ச் UHD டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளன. இத்துடன் ஸ்மார்ட் புளூ லைட் ரிடக்ஷன், HDR 10+, HLG சப்போர்ட், சூப்பர் பிரைட்னஸ், பிளாக் லெவல் ஆக்மெண்டேஷன் என ஏராள அம்சங்களை கொண்டிருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஏசர் அறிமுகம் செய்து இருக்கும் புதிய டிவி மாடல்கள் அறிமுக சலுகையாக சற்றே குறைந்த விலையில் விற்பனைக்கு வருகின்றன. அதன் பின் இவற்றின் விலை மாற்றப்பட்டு விடும். இவற்றின் விற்பனை முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் 4 ஆயிரத்திற்கும் அதிக சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கின்றன.
32 இன்ச் HD டிவி ரூ. 14 ஆயிரத்து 999
43 இன்ச் UHD டிவி ரூ. 29 ஆயிரத்து 999
50 இன்ச் UHD டிவி ரூ. 34 ஆயிரத்து 999
55 இன்ச் UHD டிவி ரூ. 39 ஆயிரத்து 999
65 இன்ச் UHD டிவி ரூ. 64 ஆயிரத்து 999
- விவோ நிறுவனத்தின் X போல்டு பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் TENAA தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் TENAA வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
மேலும் புதிய விவோ போல்டபில் ஸ்மார்ட்போன் பல்வேறு 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்கிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12 கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போன் கூகுள் பிளே சப்போர்ட் கொண்ட சாதனங்கள் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் நான்கு கேமரா சென்சார்கள், எல்இடி பிளாஷ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது.

தற்போது TENAA வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போனில் 2300 எம்ஏஹெச் மற்றும் 2300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12 வழங்கப்படுகிறது. விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்,12MP போர்டிரெயிட் லென்ஸ், 8MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 80 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ X போல்டு மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
- டெக்னோ பிராண்டின் புதிய கேமன் 19 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இது இந்தியாவின் முதல் நிறம் மாறும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் எனும் பெருமையை பெற்று இருக்கிறது.
டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் கேமன் 19 ப்ரோ மாண்ட்ரியன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இது நிறம் மாறும் தன்மை கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். நிறம் மாறும் தன்மையை செயல்படுத்த இதில் பாலிக்ரோமேடிக் போடோஐசோமர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 50MP போர்டிரெயிட் கேமரா, வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6.8 இன்ச் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், 8 ஜிபி ரேம், 5 ஜிபி விர்ச்சுவல் ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

டெக்னோ கேமன் 19 மாண்ட்ரியன் அம்சங்கள்:
6.8 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
8 ஜிபி ரேம், LPDDR4X ரேம்
128 ஜிபி UFS 2.2
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம்
ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹை ஒஎஸ் 8.6
64MP பிரைமரி கேமரா, OIS
50MP போர்டிரெயிட் கேமரா
32MP செல்பி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5 எம்எம் ஆடியோ ஜாக்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
டெக்னோ கேமன் 19 மாண்ட்ரியன் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்குகிறது. இத்துடன் அறிமுக சலுகையாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ பீச்சர் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
- முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 8210 4ஜி, 2660 ப்ளிப் போன் மாடல்களுடன் ஜூலை மாத வாக்கில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் எக்ஸ்பிரஸ் மியூசிக் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ பெயரில் புதிய 4ஜி பீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த பீச்சர் போனில் பில்ட்-இன் வயர்லெஸ் இயர்பட்ஸ் உள்ளது. இதில் புதுமை மிக்க டிசைன் லவுட்ஸ்பீக்கர், ஆடியோ கண்ட்ரோல் பட்டன் மற்றும் பெரிய பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ போன் நோக்கியா 8210 4ஜி மற்றும் நோக்கியா 2660 ப்ளிப் போன் மாடல்களுடன் ஜூலை மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ போன் நோக்கியா 5310 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் பெரிய பேட்டரி, பிரத்யேக ஆடியோ கண்ட்ரோல் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த போன் அதிநவீன பயனர்களின் இசை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இயர்பட்ஸ்-ஐ பயன்படுத்தாத சமயத்தில் அவற்றை போனின் பின்புறம் இருக்கும் ஸ்லைடரின் கீழ் வைத்துக் கொள்ளலாம். இதில் உள்ள இரு ஸ்பீக்கர்கள் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இதனுடன் வழங்கப்படும் இயர்போன்களை மற்ற ஸ்மார்ட்போன்களுடனும் இணைத்து பயன்படுத்தலாம்.
நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ மாடலில் 1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வரும் இயர்பட்ஸ்-இல் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பீச்சர் போன் நீண்ட கால பயன்பாட்டுக்கு உகந்ததை உறுதிப்படுத்தும் வகையில் சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.
நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ அம்சங்கள்:
2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே
0.3MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
யுனிசாக் டி107 பிராசஸர்
4MB ரேம், 48MB / 128MB மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
S30+ ஒஎஸ்
பில்ட்-இன் வயர்லெஸ் இயர்பட்ஸ்
வயர்லெஸ் எப்எம் ரேடியோ, MP3 பிளேயர்
இரு ஸ்பீக்கர்கள்
பவர், வால்யூம், மியூசிக் பட்டன்கள்
ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி கனெக்ஷன்
மைக்ரோ யுஎஸ்பி 2.0
1450 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ போனின் விலை ரூ. 4 ஆயிரத்து 999 ஆகும். இதன் விற்பனை செப்டம்பர் 19 ஆம் தேதி முன்னணி சில்லறை விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் துவங்குகிறது.
- ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
- புதிய ஐகூ Z6 லைட் 5ஜி குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.
ஐகூ நிறுவனம் குறைந்த விலையில் Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது சர்வதேச சந்தையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். புதிய ஐகூ Z6 லைட் 5ஜி மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 50MP பிரைமரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஐகூ Z6 லைட் 5ஜி மாடலில் 6.58 இன்ச் FHD+ 2408x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் வாட்டர் டிராப் ரக நாட்ச் உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்டு அறிமுகமான உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இது ஸ்னாப்டிராகன் 480 பிராசஸரின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இது முந்தைய பிராசஸரை விட 10 சதவீதம் மேம்பட்ட GPU திறன் மற்றும் 15 சதவீதம் மேம்பட்ட CPU திறன் கொண்டிருக்கிறது.

இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஐகூ Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் செப்டம்பர் 14 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்திய சந்தையில் ஐகூ Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்டெல்லார் கிரீன் மற்றும் மிஸ்டிக் நைட் நிறங்களில் கிடைக்கிறது.
- விவோ நிறுவனம் தனது புது 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- தற்போது இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து தற்போது V25 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கடந்த மாதம் தான் விவோ நிறுவனம் V25 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. அந்த வகையில் தற்போது V25 5ஜி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. புது ஸ்மார்ட்போனின் டீசர்களில் விவோ V25 5ஜி மாடல் நிறம் மாறும் ஃபுளோரைட் ஏஜி கிளாஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதே போன்ற அம்சம் ப்ரோ மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புளூ மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது.

விவோ V25 5ஜி மாடல் 64MP பிரைமரி கேமரா, OIS, 50MP ஆட்டோபோக்கல் செல்பி வீடியோ பொக்கோ ஃபிளேர் போர்டிரெயிட் கேமரா, 8 ஜிபி ரேம், 8 ஜிபி நீட்டிக்கப்பட்ட ரேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ V25 ப்ரோ வெளியீட்டை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
விவோ V25 5ஜி அம்சங்கள்:
6.44 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+
ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்
மாலி G68 MC4 GPU
8 ஜிபி ரேம், அதிகபட்சம் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 12
டூயல் சிம் ஸ்லாட்
64MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி பிளாஷ்
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
50MP செல்பி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி டைப் சி
4500 எம்ஏஹெச் பேட்டரி
44 வாட் பாஸ்ட் சார்ஜிங்
இந்திய சந்தையில் விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் விவோ வலைதளம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.






