என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • மோட்டோரோலா நிறுவனம் எட்ஜ் 30 சீரிஸ் இந்திய வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
    • புது மோட்டோ எட்ஜ் 30 சீரிஸ் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் எட்ஜ் 30 அல்ட்ரா மற்றும் எட்ஜ் 30 பியூஷன் ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் சமீபத்தில் தான் அறிமுகம் செய்து இருந்தது. இந்த நிலையில், இரு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் செப்டம்பர் 13 ஆம் தேதி அறிமுகமாகும் என மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது.

    புது மோட்டோ ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. புதிய மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சீன சந்தையில் மோட்டோ X30 ப்ரோ பெயரிலும் மோட்டோ எட்ஜ் 30 பியூஷன் ஸ்மார்ட்போன் மோட்டோ S30 ப்ரோ பெயரிலும் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.


    அம்சங்களை பொருத்தவரை மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா மாடலில் 6.67 இன்ச் pOLED FHD+ எண்ட்லெஸ் எட்ஜ் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், தின் சேண்ட்பிளாஸ்ட் செய்யப்பட்ட அலுமினியம் ஃபிரேம், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 200MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு கேமரா, பில்ட்-இன் மேக்ரோ விஷன், 12MP 2x டெலிபோட்டோ போர்டிரெயிட் கேமரா, 60MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் 4610 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    மோட்டோ எட்ஜ் 30 பியூஷன் மாடலில் 6.55 இன்ச் பார்டர்லெஸ் pOLED FHD+ 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, சேண்ட்பிளாஸ்ட் செய்யப்பட்ட அலுமினியம் ஃபிரேம், ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு கேமரா, பில்ட்-இன் மேக்ரோ விஷன், 32MP ஆட்டோபோக்கஸ் செல்பி கேமரா மற்றும் 4400 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

    ஐகூ நிறுவனம் இந்தியாவில் புதிய Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஐகூ Z6 லைட் 5ஜி இந்திய விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அதன் படி இந்திய சந்தையில் ஐகூ Z6 லைட் 5ஜி ஸ்மாட்ர்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஐகூ Z6 லைட் 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்படலாம். விலை விவரங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ இந்தியா வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.


    தற்போது இணையத்தில் லீக் ஆகி இருக்கும் விலை விவரங்கள் உண்மையாகும் பட்சத்தில் ஐகூ Z6 லைட் 5ஜி மாடல் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும். மேலும் இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐகூ Z6 லைட் 5ஜி மாடலில் 6.58 இன்ச் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும்.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் / மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த ஃபன்டச் ஒஎஸ், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 2 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட கூலிங் சிஸ்டம் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கலாம். 

    • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • ஐபோன் 14 ப்ரோ மற்றும் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 13 ப்ரோ மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 13 ப்ரோ மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முற்றிலும் புதிய ஏ16 பயோனிக் சிப்செட், 48MP பிரைமரி கேமரா, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே என அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் கிராஷ் டிடெக்‌ஷன் மற்றும் செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் எமர்ஜன்சி SOS வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ப்ரோ மோஷன் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோனில் முதல் முறையாக ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பேட்டரியை சேமிக்க ஏராளமான தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புது ஐபோன்களிலும் செராமிக் ஷீல்டு முன்புற கவர் வழங்கப்பட்டு உள்ளது.


    ஐபோன் 14 ப்ரோ மற்றும் 14 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்:

    6.1 இன்ச் 2566x1179 பிக்சல் OLED 460ppi சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே - ஐபோன் 14 ப்ரோ

    6.7 இன்ச் 2796x1290 பிக்சல் OLED 460ppi சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே - ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்

    6-கோர் ஏ16 பயோனிக் பிராசஸர்

    128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி மெமரி ஆப்ஷன்கள்

    ஐஒஎஸ் 16

    வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)

    டூயல் சிம்

    48MP வைடு ஆங்கில் கேமரா

    12MP 120 டிகிரி அல்ட்ரா வைடு இரண்டாவது கேமரா

    12MP 3x டெலிபோட்டோ கேமரா

    12MP ட்ரூ டெப்த் செல்பி கேமரா

    5ஜி, ஜிகாபிட் கிளாஸ் எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.3

    லித்தயம் அயன் பேட்டரி

    15 வாட் மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங், பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ஸ்பேஸ் பிளாக், சில்வர், கோல்டு மற்றும் டீப் பர்பில் நிறங்களில் கிடைக்கின்றன.

    ஐபோன் 14 ப்ரோ 128 ஜிபி ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900

    ஐபோன் 14 ப்ரோ 256 ஜிபி ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900

    ஐபோன் 14 ப்ரோ 512 ஜிபி ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 900

    ஐபோன் 14 ப்ரோ 1 டிபி ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 900

    ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900

    ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900

    ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 512 ஜிபி ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 900

    ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1 டிபி ரூ. 1 லட்சத்து 89 ஆயிரத்து 900

    ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களின் முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. விற்பனை செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்குகிறது. 

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விரைவில் நடைபெற இருக்கிறது.
    • புது மோட்டோ ஸ்மார்ட்போன் 200MP கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    மோட்டோரோலா நிறுவனம் சர்வதேச சந்தையில் எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இதே மோட்டோ ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு உறுதியாகிவிட்டது.

    பிஐஎஸ் வலைதளத்தை தொடர்ந்து புதிய மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டதாக டிப்ஸ்டர் ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். இதோடு இந்திய சந்தையில் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இதோடு ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட் ஒன்றையும் அவர் இணைத்து இருக்கிறார்.


    ப்ளிப்கார்ட் டீசரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம், ஏற்கனவே வெளியான ரெண்டர்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. எனினும், இதே டீசரில் புதிய மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 200MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதே சென்சார் சீனாவில் கிடைக்கும் மோட்டோ X30 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    புதிய மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.7 இனஅச் OLED வளைந்த எட்ஜ் கொண்ட டிஸ்ப்ளே, FHD பிளஸ் ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 125 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ கேமரா, 60MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் மற்றும் பிக்சல் வாட்ச் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
    • முன்னதாக மே மாதம் நடைபெற்ற கூகுள் I/O 2022 நிகழ்வில் இவற்றுக்கான டீசர் வெளியாகி இருந்தது.

    கூகுள் நிறுவனம் பிக்சல் ஹார்டுவேர் நிகழ்வு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வு "மேட் பை கூகுள்" (Made By Google) எனும் தலைப்பில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் வாட்ச் போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. முன்னதாக இதே சாதனங்களின் டீசர் மே மாத வாக்கில் நடைபெற்ற 2022 கூகுள் I/O நிகழ்வில் வெளியிடப்பட்டு இருந்தது.

    இவை மட்டுமின்றி நெஸ்ட் ஸ்மார்ட் ஹோம் பிரிவிலும் கூகுள் புது சாதனங்களையும் கூகுள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டீசரில் பிக்சல் 7 சீரிஸ் சாதனங்கள், அடுத்த தலைமுறை டென்சார் பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போன்களில் கேமரா பார் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இவை பிக்சல் 6 சீரிசில் இருந்ததை விட அளவில் சிறியதாக வழங்கப்பட்டு இருக்கிறது.


    பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் மேட் பினிஷ் கொண்ட அலுமினியம் பிரேம், பிக்சல் 7 ப்ரோ மாடலில் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் வழங்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 7 மாடலில் 2400x1080 பிக்சல் 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேவும், பிக்சல் 7 ப்ரோ மாடலில் 3120x1440 பிக்சல் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேவும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    பிக்சல் 7 மாடலில் இரண்டு கேமராக்களும், பிக்சல் 7 ப்ரோ மாடலில் மூன்று கேமரா சென்சார்களும் வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் வசதி வழங்கப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிட்பிட் ஹெல்த் மற்றும் பிட்னஸ் அம்சங்களை கொண்டிருக்கும்.

    இத்துடன் இந்த வாட்ச் மாடலில் புதிய வியர் ஒஎஸ் அனுபவம் கிடைக்கும். இது அனைத்து பிக்சல் மற்றும் ஆணட்ராய்டு போன்கள், பிக்சல் பட்ஸ் ப்ரோ மற்றும் பிக்சல் பட்ஸ் ஏ சீரிஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் உடன் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பிக்சல் சீரிஸ் அறிமுக நிகழ்வு அக்டோபர் 6 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. புதிய கூகுள் சாதனங்களின் விற்பனை அதே நாளில் துவங்கும் என கூகுள் அறிவித்து உள்ளது. விற்பனை கூகுள் ஸ்டோர் வலைதளம், நியூ யார்க் நகர கூகுள் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

    • ஐகூ நிறுவனத்தின் புதிய Z சீரிஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    ஐகூ Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற இருக்கிறது. புது ஸ்மார்ட்போனின் டீசர்கள் அமேசான் தளத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் சீரிஸ் பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. பிராசஸர் விவரங்கள் நாளை (செப்டம்பர் 7) அறிவிக்கப்பட இருக்கிறது. இத்துடன் செப்டம்பர் 8 ஆம் தேதி ஐகூ Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் இதர அம்சங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய ஐகூ ஸ்மார்ட்போன் டூயல் 5ஜி வசதி கொண்டிருக்கிறது.


    இணையத்தில் வெளியான ரெண்டர்களின் படி ஐகூ Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று ஏஐ கேமரா சென்சார் மற்றும் எல்இடி பிளாஷ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முன்புறம் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்பட இருக்கும் குவால்காம் பிராசஸர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸருக்கு நிகரானதாக இருக்கும் என தெரிகிறது.

    டீசர்களின் படி இந்த ஸ்மார்ட்போனின் கேமிங் திறன் சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய விவரங்கள் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது.

    • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஐஎப்ஏ 2022 நிகழ்வில் முற்றிலும் புதிய நோக்கியா லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • பியுர்புக் சீரிசின் கீழ் மொத்தம் மூன்று புதிய நோக்கியா லேப்டாப் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

    ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும் 2022 ஐஎப்ஏ நிகழ்வில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா பியுர்புக் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. பியுர்புக் சீரிசில் மொத்தம் மூன்று லேப்டாப்கள் அறிமுகமாகி இருக்கின்றன. இவை நோக்கியா பியுர்புக் போல்டு, நோக்கியா பியுர்புக் லைட் மற்றும் நோக்கியா பியுர்புக் ப்ரோ என அழைக்கப்படுகின்றன.

    நோக்கியா பியுர்புக் போல்டு மற்றும் பியுர்புக் லைட் மாடல்களில் 14 இன்ச் டிஸ்ப்ளே, பியுர்புக் ப்ரோ மாடலில் 15.6 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. போல்டு மற்றும் லைட் மாடல்களில் இண்டெல் பெண்டியம் சில்வர் N6000, பியுர்புக் ப்ரோ மாடலில் இண்டெல் கோர் i3 1220P பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏஎம்டி நிறுவனத்தின் ரைசன் 5000 பிராசஸரை விட இண்டெல் கோர் i3 சக்திவாய்ந்த பிராசஸர் ஆகும்.


    மூன்று லேப்டாப் மாடல்களிலும் FHD IPS ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட், 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பியுர்புக் போல்டு மாடலில் டச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. நோக்கியா பியுர்புக் சீரிஸ் மாடல்களில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, வைபை 5 வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி 3.2 (x2), யுஎஸ்பி ஏ 3.2 (x1) போர்ட்கள், 3.2 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த மாடல்களில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், கைரேகை சென்சார், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் போல்டு மற்றும் லைட் மாடல்களில் 128 ஜிபி எஸ்எஸ்டி, பியுர்புக் ப்ரோ மாடலில் 512 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டு இருக்கிறது. பியுர்புக் லைட் எடை 1.47 கிலோ ஆகும். பியுர்புக் போல்டு 2.5 கிலோவும், பியுர்புக் ப்ரோ எடை 2.0 கிலோ ஆகும். இதன் ப்ரோ மாடலில் 2MP கேமரா, அலுமினியம் டாப் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சிறிய மாடல்களில் 1MP கேமரா மற்றும் பிளாஸ்டிக் பிரேம் வழங்கப்பட்டு உள்ளது. 15.6 இன்ச் மாடலில் பேக்லிட் கீபோர்டு, 57Wh பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் இடம்பெற்று இருக்கிறது. லைட் மற்றும் போல்டு மாடல்களில் 38Wh பேட்டரி மற்றும் 44 வாட் பவர் அடாப்டர் வழங்கப்பட்டு உள்ளது. 14 இன்ச் மாடல்களை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் எட்டு மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

    நோக்கியா பியுர்புக் சீரிஸ் விண்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இதன் ப்ரோ மாடலில் நான்கு ஸ்பீக்கர் சிஸ்டம், சிறிய மாடல்களில் 2 ஸ்பீக்கர் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படுவது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதே மாதத்தில் பிரான்ஸ் நாட்டில் அறிமுகமாவது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • ரெட்மி பிராண்டின் புது ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புது ரெட்மி ஸ்மார்ட்போன் லெதர் டெக்ஸ்ச்சர் டிசைன் கொண்டிருக்கும் என டீசரில் தெரியவந்துள்ளது.

    சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், இதே தேதியில் மற்றொரு ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என ரெட்மி தெரிவித்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் ரெட்மி A1 எனும் பெயரில், மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது Mi தீபாவளி விற்பனையின் அங்கமாக வெளியாக இருக்கிறது.

    புதிய ரெட்மி A1 ஸ்மார்ட்போன் லெதர் போன்ற டெக்ஸ்ச்சர் கொண்ட பேக் பேனல் கொண்டிருக்கும் என ரெட்மி வெளியிட்டு இருக்கும் டீசரில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன், புளூ மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் அறிமுகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. இதன் டிஸ்ப்ளேவில் நாட்ச் இடம்பெற்று இருக்கிறது.

    இத்துடன் மீடியாடெக் பிராசஸர், கிளீன் ஆண்ட்ராய்டு அனுபவம் வழங்கும் என ரெட்மி தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போன் MIUI-க்கு மாற்றாக ஸ்டாக் ஆண்ட்ராய்டு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், ஏஐ கேமரா அம்சங்களுடன் வெளியாகிறது.

    புது ரெட்மி A1 எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் இதன் விலை 2019 வாக்கில் ரூ. 4 ஆயிரத்து 499 விலையில் அறிமுகமான ரெட்மி கோ ஸ்மார்ட்போனை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படாது என்றே தெரிகிறது. ரெட்மி A1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    • லெனோவோ நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் புது ஸ்மார்ட் கண்ணாடி பில்ட் இன் டிஸ்ப்ளே மற்றும் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது.
    • இந்த ஆக்மெண்டெட் ரியாலிட்டி கிளாஸ்-இல் உள்ள டிஸ்ப்ளே 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரிப்ரெஷ் கொண்டுள்ளது.

    லெனோவோ நிறுவனம் கிளாசஸ் T1 ஆக்மெண்டெட் ரியாலிட்டி கண்ணாடியை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஏஆர் கிளாஸ் இரு கண்களிலும் மைக்ரோ OLED டிஸ்ப்ளேக்கள் உள்ளன. இதில் உள்ள டிஸ்ப்ளே 1920x1080 பிக்சல் மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இதன் பிரைட்னஸ் அளவுகள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட் ஏஆர் கிளாஸ் டியுவி ரெயின்லாந்து சான்று பெற்று இருக்கிறது.

    மேலும் அதிக தரமுள்ள ஹின்ஜ்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டெம்பில் ஆர்ம்கள், நோஸ் பேட்கள் உள்ளன. இத்துடன் பயனர்களின் சவுகரியத்திற்கு ஏற்ப மூன்று வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய நோஸ் பேட்கள் வழங்கப்படுகின்றன. இதில் உள்ள இன்பில்ட் ஸ்பீக்கர்கள் பொழுதுபோக்கு தரவுகளை பார்க்கவும் வழி செய்கிறது. இந்த ஸ்மார்ட் ஏஆர் கிளாஸ் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மாடல்களுடன் இணைந்து செயல்பட ஏதுவாக ரெடி ஃபார் எனும் அம்சம் கொண்டிருக்கிறது.


    லெனோவோ கிளாசஸ் T1 ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் மற்றும் விண்டோஸ் சாதனங்களுடன் இணைந்து செயல்படும் திறன் கொண்டிருக்கிறது. இதை ஸ்மார்ட்போன் அல்லது கணினியுடன் இணைத்து பயன்படுத்தலாம். யுஎஸ்பி டைப் சி கேபிள் கொண்டு பயனர்கள் இதனை ஆண்ட்ராய்டு சாதனத்துடன் இணைத்து கொள்ளலாம். ஐபோன் பயனர்கள் ஹெச்டிஎம்ஐ டு கிளாசஸ் அடாப்டர் பயன்படுத்த வேண்டும்.

    முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட் ஏஆர் கிளாஸ் அங்கு லெனோலோ யோகா கிளாசஸ் என அழைக்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் இந்த ஏஆர் கிளாஸ் விற்பனை அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. விற்பனை நெருங்கும் போது இதன் விலை அறிவிக்கப்படும்.

    • ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஐபோன் SE மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி இருக்கிறது.
    • மேலும் புது ஐபோன் SE தோற்றத்தில் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் நான்காவது தலைமுறை ஐபோன் SE பற்றிய முக்கிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முந்தைய 2022 ஐபோன் SE தோற்றத்தில் ஐபோன் 8 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது. புதிய தலைமுறை ஐபோன் SE மாடல் தோற்றத்தில் ஐபோன் XR போன்று காட்சியளிக்கிறது.

    புதிய ஐபோன் SE மாடலில் நாட்ச் வைத்த டிஸ்ப்ளே, அளவில் சிறிய பெசல்கள், பேஸ் ஐடி போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் புதிய ஐபோன் SE மாடலில் டச் ஐடி சென்சார் வழங்கப்படாது. தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் SE 2022 மாடலில் ஆப்பிள் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. இதே பிராசஸர் தான் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இது தவிர மற்ற அம்சங்கள் ஐபோன் XR மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ் மாடல்களில் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் ஆப்பிள் ஏ16 பயோனிக் பிராசஸர் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் XR மாடலில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா IPS LCD டிஸ்ப்ளே, ஏ12 பயோனிக் பிராசஸர், 3 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, 2942 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7MP செல்பி கேமரா, OIS வசதி கொண்ட 12MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    • சாம்சங் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் காப்புரிமை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இதில் புது ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    சாம்சங் நிறுவனம் புதிதாக டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டிரான்ஸ்பேரண்ட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. புது ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் சாம்சங் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு இருக்கும் விண்ணப்ப படிவத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    காப்புரிமை விண்ணப்பத்தில் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புது சாம்சங் ஸ்மார்ட்போன் ஃபிளாட் சர்பேஸ் பேக் பேனலில் கேமரா மாட்யுல் மற்றும் பிராண்டு லோகோ உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் மூலம் புதுமை மிக்க டிசைனை வழங்க சாம்சங் முடிவு செய்து இருக்கிறது. அதன்படி ஸ்மார்ட்போனின் பின்புறம் டிரான்ஸ்பேரண்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது.


    விண்ணப்பத்தின் படி, பயன்படுத்தப்படாத நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளே பின்புற பேனலில் நீள்கிறது. இது ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே போன்றே ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவே செயல்பாட்டு வரும். இரண்டாவதாக வரும் பின்புற ஸ்கிரீன் கொண்டு செல்பி எடுப்பது, விவரங்களை மேலோட்டமாக பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

    சாம்சங்கின் டூயல் ஸ்கிரீன் காப்புரிமை விண்ணப்பம், 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இசட்டிஇ நுபியா X மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனில் கிளாஸ் ரியர் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் காப்புரிமையில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது. இந்த காப்புரிமை உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் நிறுவனம் டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

    • வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடி ஷாப்பிங் செய்ய ஏதுவாக ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • இந்த சேவையின் மூலம் பயனர்கள் ஜியோமார்ட் பொருட்கள் அனைத்தையும் வாட்ஸ்அப்பில் இருந்தபடி வாங்கிக் கொள்ள முடியும்.

    ஜியோ பிளாட்பார்ம்ஸ் மற்றும் மெட்டா இணைந்து எண்ட்-டு-எண்ட் வாட்ஸ்அப் ஷாப்பிங் அனுபவத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் ஜியோமார்ட் பொருட்கள் அனைத்தையும் சாட் மூலம் வாங்கிக் கொள்ளலாம். முதல் முறையாக ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் மூலம் பயனர்கள் ஜியோமார்ட்-இல் கிடைக்கும் மளிகை பொருட்கள் மற்றும் அனைத்து விதமான பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

    பொருட்கள் வாங்குவதோடு, பணம் செலுத்துவது என அனைத்தையும் வாட்ஸ்அப் சாட் மூலமாகவே செய்து கொள்ளலாம். சமீபத்தில் மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் பொருட்களை நேரடியாக சாட் விண்டோவில் இருந்தபடி வாங்கிக் கொள்ளும் வசதியை வழங்கி இருந்தது. மெட்டா மற்றும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் இடையேயான கூட்டணியின் அங்கமாக இந்த சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.


    ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் மூலம் பல லட்சம் வியாபாரங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதி கிடைக்கும். சேவை அறிமுகம் செய்து இருப்பதோடு ஷாப்பிங் அனுபவத்தை எளிமையாக்கி, இதுவரை இல்லாத வகையில் சவுகரியமானதாக மாற்ற ஜியோமார்ட் முடிவு செய்துள்ளது.

    ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப்-பில் ஷாப்பிங் செய்வது எப்படி?

    வாட்ஸ்அப்-இல் இருந்தபடி ஜியோமார்ட்டில் ஷாப்பிங் செய்ய +917977079770 என்ற எண்ணிற்கு "Hi" என்று குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்த பின் ஜியோமார்ட் பொருட்களை வாட்ஸ்அப்-இல் வாங்க துவங்கலாம். 

    ×