என் மலர்
புதிய கேஜெட்டுகள்

அடுத்த தலைமுறை ஐபோன் SE இப்படித் தான் காட்சியளிக்குமாம் - இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்
- ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஐபோன் SE மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி இருக்கிறது.
- மேலும் புது ஐபோன் SE தோற்றத்தில் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் நான்காவது தலைமுறை ஐபோன் SE பற்றிய முக்கிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முந்தைய 2022 ஐபோன் SE தோற்றத்தில் ஐபோன் 8 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது. புதிய தலைமுறை ஐபோன் SE மாடல் தோற்றத்தில் ஐபோன் XR போன்று காட்சியளிக்கிறது.
புதிய ஐபோன் SE மாடலில் நாட்ச் வைத்த டிஸ்ப்ளே, அளவில் சிறிய பெசல்கள், பேஸ் ஐடி போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் புதிய ஐபோன் SE மாடலில் டச் ஐடி சென்சார் வழங்கப்படாது. தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் SE 2022 மாடலில் ஆப்பிள் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. இதே பிராசஸர் தான் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இது தவிர மற்ற அம்சங்கள் ஐபோன் XR மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ் மாடல்களில் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் ஆப்பிள் ஏ16 பயோனிக் பிராசஸர் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் XR மாடலில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா IPS LCD டிஸ்ப்ளே, ஏ12 பயோனிக் பிராசஸர், 3 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, 2942 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7MP செல்பி கேமரா, OIS வசதி கொண்ட 12MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.