search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    பிக்சல் 7 சீரிஸ் வெளியீட்டு தேதியை அறிவித்த கூகுள்
    X

    பிக்சல் 7 சீரிஸ் வெளியீட்டு தேதியை அறிவித்த கூகுள்

    • கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் மற்றும் பிக்சல் வாட்ச் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
    • முன்னதாக மே மாதம் நடைபெற்ற கூகுள் I/O 2022 நிகழ்வில் இவற்றுக்கான டீசர் வெளியாகி இருந்தது.

    கூகுள் நிறுவனம் பிக்சல் ஹார்டுவேர் நிகழ்வு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வு "மேட் பை கூகுள்" (Made By Google) எனும் தலைப்பில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் வாட்ச் போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. முன்னதாக இதே சாதனங்களின் டீசர் மே மாத வாக்கில் நடைபெற்ற 2022 கூகுள் I/O நிகழ்வில் வெளியிடப்பட்டு இருந்தது.

    இவை மட்டுமின்றி நெஸ்ட் ஸ்மார்ட் ஹோம் பிரிவிலும் கூகுள் புது சாதனங்களையும் கூகுள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டீசரில் பிக்சல் 7 சீரிஸ் சாதனங்கள், அடுத்த தலைமுறை டென்சார் பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போன்களில் கேமரா பார் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இவை பிக்சல் 6 சீரிசில் இருந்ததை விட அளவில் சிறியதாக வழங்கப்பட்டு இருக்கிறது.


    பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் மேட் பினிஷ் கொண்ட அலுமினியம் பிரேம், பிக்சல் 7 ப்ரோ மாடலில் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் வழங்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 7 மாடலில் 2400x1080 பிக்சல் 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேவும், பிக்சல் 7 ப்ரோ மாடலில் 3120x1440 பிக்சல் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேவும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    பிக்சல் 7 மாடலில் இரண்டு கேமராக்களும், பிக்சல் 7 ப்ரோ மாடலில் மூன்று கேமரா சென்சார்களும் வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் வசதி வழங்கப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிட்பிட் ஹெல்த் மற்றும் பிட்னஸ் அம்சங்களை கொண்டிருக்கும்.

    இத்துடன் இந்த வாட்ச் மாடலில் புதிய வியர் ஒஎஸ் அனுபவம் கிடைக்கும். இது அனைத்து பிக்சல் மற்றும் ஆணட்ராய்டு போன்கள், பிக்சல் பட்ஸ் ப்ரோ மற்றும் பிக்சல் பட்ஸ் ஏ சீரிஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் உடன் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பிக்சல் சீரிஸ் அறிமுக நிகழ்வு அக்டோபர் 6 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. புதிய கூகுள் சாதனங்களின் விற்பனை அதே நாளில் துவங்கும் என கூகுள் அறிவித்து உள்ளது. விற்பனை கூகுள் ஸ்டோர் வலைதளம், நியூ யார்க் நகர கூகுள் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×