search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    டூயல் ஸ்கிரீன், டிரான்ஸ்பேரண்ட் ரியர் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் புது சாம்சங் ஸ்மார்ட்போன்
    X

    டூயல் ஸ்கிரீன், டிரான்ஸ்பேரண்ட் ரியர் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் புது சாம்சங் ஸ்மார்ட்போன்

    • சாம்சங் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் காப்புரிமை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இதில் புது ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    சாம்சங் நிறுவனம் புதிதாக டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டிரான்ஸ்பேரண்ட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. புது ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் சாம்சங் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு இருக்கும் விண்ணப்ப படிவத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    காப்புரிமை விண்ணப்பத்தில் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புது சாம்சங் ஸ்மார்ட்போன் ஃபிளாட் சர்பேஸ் பேக் பேனலில் கேமரா மாட்யுல் மற்றும் பிராண்டு லோகோ உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் மூலம் புதுமை மிக்க டிசைனை வழங்க சாம்சங் முடிவு செய்து இருக்கிறது. அதன்படி ஸ்மார்ட்போனின் பின்புறம் டிரான்ஸ்பேரண்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது.


    விண்ணப்பத்தின் படி, பயன்படுத்தப்படாத நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளே பின்புற பேனலில் நீள்கிறது. இது ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே போன்றே ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவே செயல்பாட்டு வரும். இரண்டாவதாக வரும் பின்புற ஸ்கிரீன் கொண்டு செல்பி எடுப்பது, விவரங்களை மேலோட்டமாக பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

    சாம்சங்கின் டூயல் ஸ்கிரீன் காப்புரிமை விண்ணப்பம், 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இசட்டிஇ நுபியா X மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனில் கிளாஸ் ரியர் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் காப்புரிமையில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது. இந்த காப்புரிமை உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் நிறுவனம் டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×