என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாக துவங்கி விட்டது.
    • புது கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் தனது புதிய பிளாக்‌ஷிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 பெயரில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய போல்டபில் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சாம்சங் தற்போது அடுத்த தலைமுறை கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில் புதிய சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிராசஸர் மூலம் புது ஸ்மார்ட்போனின் பேட்டரி பேக்கப் பிரிவில் அதிக கவனம் செலுத்த சாம்சங் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.


    தற்போதைய கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கலுயா எனும் குறியீட்டு பெயரில், SM8550 எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த பிராசஸரை TSMC தனது 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்படுவதாக தெரிகிறது.

    இந்த சிப்செட் ஒரு அசதிவேக கார்டெக்ஸ் X3 கோர் கொண்டிருக்கும். இது முந்தைய பிராசஸரை விட 25 சதவீதம் அதிக செயல்திறன் வழங்கும். சில மாதங்களுக்கு முன்பு தான் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 செயல்திறன் அறியும் சோதனைகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. புதிய சிப்செட் நவம்பர் அல்லது டிசம்பர் மாத வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    • ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    ரெட்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், ARM மாலி-G76 MC4 GPU, வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா என குவாட் கேமரா சென்சார்கள், 13MP இன் டிஸ்ப்ளே செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை கொண்டு பேட்டரியை முப்பது நிமிடங்களில் 54 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.


    ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் IP53 தர ஸ்பிலாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், டூயல் சிம் ஸ்லாட், 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.0, டூயல் ஸ்பீக்கர், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ சான்று, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5, போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் தண்டர் பர்பில், காஸ்மிக் வைட், ஸ்பேஸ் பிளாக் மற்றும் பைபிராஸ்ட் புளூ என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

    • சோனி நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய மைக்ரோபோனை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த மைக்ரோபோன் கிரியேட்டர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக சோனி அறிவித்து உள்ளது.

    சோனி இந்தியா நிறுவனம் புதிதாக ஷாட்கன் மைக்ரோபோன் ECM-G1 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மைக்ரோபோன் கிரியேட்டர்கள் அதிக தரமுள்ள ஆடியோவை தெளிவாக பதிவு செய்து கொள்ள உதவுகிறது. இதில் பெரிய டையாமீட்டர் மைக்ரோபோன் கேப்சூல் உள்ளது. இது தெளிவான ஆடியோவை எந்த விதமான இரைச்சலும் இன்றி பதிவு செய்கிறது.

    புதிய சோனி ECM-G1 மைக்ரோபோன் விலாகிங் மற்றும் பேட்டி எடுப்பதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இறுக்கிறது. இது குரல்களை தெளிவாக பதிவு செய்வதோடு, வெளிப்புறங்களில் பயன்படுத்தும் போது காற்றின் சத்தத்தை தடுத்து நிறுத்த விண்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஆப்டிமைஸ் செய்யப்பட்ட பிரேம், வைப்ரேஷன் சத்தத்தையும் தடுத்து நிறுத்துகிறது.


    ECM-சூப்பர் கார்டியோய்டு பிக்கப்-பேட்டன் கேமராவின் முன்புறம் சுற்றசுச்சூழல் சத்தத்தை தடுத்து, தெளிவான மற்றும் தேவையான ஆடியோவை மட்டுமே பதிவு செய்கிறது. இது செல்பி ஷூட்டிங் போன்ற பயன்பாடுகளுக்கு ஏற்ற மைக்ரோபோன் ஆகும். இண்டோர் பயன்பாட்டுகளின் போது சுவர்களில் இருந்து வெளியேறும் அதிர்வுகளை தடுத்து, தெளிவான ஆடியோவை பதிவு செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய சோனி ECM-G1 மைக்ரோபோனுடன் ரெக்கார்டிங் கேபிள் வழங்கப்படுகிறது. இதில் உள்ள மைக்ரோபோன் ஜாக் பல்வேறு சாதனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் விரும்பும் இடத்தில் ஆடியோ பதிவை எவ்வித சமரசமும் இன்றி மேற்கொள்ள முடியும். இந்திய சந்தையில் புதிய சோனி ECM-G1 மைக்ரோபோன் விலை ரூ. 10 ஆயிரத்து 290 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய எண்ட்ரி லெவல் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன் 50MP டூயல் கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யுஐ கோர் 4.1 ஒஎஸ் கொண்டு இயங்குகிறது.

    சாம்சங் நிறுவனம் சத்தமின்றி கேலக்ஸி A04 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A03 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதால் இந்த மாடலில் HD+ டிஸ்ப்ளே, 50MP டூயல் கேமரா சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய சாம்சங் கேலக்ஸி A04 மாடல் அளவில் 164.4 x 76.3 x 9.1mm உள்ளது. இதன் மொத்த எடை 192 கிராம் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் LDC பேனல் மற்றும் இன்பினிட்டி வி நாட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கிரீன் HD+ ரெசல்யூஷன் சப்போர்ட் மற்றும் 5MP செல்பி கேமரா கொண்டுள்ளது.


    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் என டூயல் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த ஒன் யுஐ கோர் 4.1 மூலம் இயங்குகிறது. இத்துடன் ஆக்டா கோர் எக்சைனோஸ் 850 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெமரியை பொருத்தவரை 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு டூயல் சிம் சப்போர்ட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது.

    புதிய சாம்சங் கேலக்ஸி A04 ஸ்மார்ட்போன் பிளாக், வைட், கிரீன் மற்றும் காப்பர் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய பிராசஸர் கொண்டிருக்கும் என அதிகாரப்பூர்வ டீசரில் தெரியவந்துள்ளது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் ரூ. 17 ஆயிரத்து 999 எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இன்பினிக்ஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளை துவங்கி விட்டது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    முன்னதாக இன்பினிக்ஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசரை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. பின் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என மற்றொரு டீசரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


    தற்போது ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மட்டுமின்றி அதன் அம்சங்கள் பற்றிய தகவல்களை தெரிவித்து உள்ளது. ப்ளிப்கார்ட் வலைதள பதிவுகளின் படி இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 108MP பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட இருக்கிறது.

    இத்துடன் 16MP செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 10.6 வழங்கப்படும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஆடியோ அக்சஸரீ விற்பனையாளரான பிடிரான் இந்திய சந்தையில் புதிதாக சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்தது.
    • இந்த சவுண்ட்பார் பத்து மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது.

    டிஜிட்டல் லைப்ஸ்டைல் மற்றும் ஆடியோ அக்சஸரீ பிராண்டான பிடிரான் இந்திய சந்தையில் புதிதாக மியூசிக்பாட் இவோ எனும் பெயரில் சவுண்ட்பாரை அறிமுகம் செய்து இருக்கிறது. பிடிரான் மியூசிக்பாட் இவோ மாடல் க்ளோஸ்-அப் சினிமா அனுபவத்தை மிக நேர்த்தியாக வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பிடிரான் மியூசிக்பாட் இவோ மாடல் மெல்லிய, அதிநவீன டிசைன், மெட்டாலிக் முன்புற கிரில், மென்மையான வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது. இதில் உள்ள 10 வாட் ஸ்பீக்கர் மற்றும் 52 மில்லிமீட்டர் டிரைவர்கள் பத்து மணி நேரத்திற்கு சக்திவாய்ந்த பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம் கொண்டு டிவி, லேப்டாப் அல்லது டேப்லெட் உடன் இணைத்துக் கொள்ளலாம்.


    இந்த சவுண்ட்பார் கண்ட்ரோல் மிக எளிமையாக பயன்படுத்த வழி செய்வதோடு, வால்யும் மாற்றுவது, பாடல்களை தேர்வு செய்வது, அவற்றை இயக்குவது என எல்லாவற்றுக்கும் கண்ட்ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 3.5 எம்எம் ஜாக், ஆக்ஸ், யுஎஸ்பி டிரைவ், டிஎப் கார்டு அல்லது ப்ளூடூத் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பிடிரான் மியூசிக்பாட் இவோ சவுண்ட்பார் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நாளை துவங்குகிறது. 

    • சோனி நிறுவனம் இந்திய சந்தையில் வயர்லெஸ் சவுண்ட்பார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
    • இதில் சோனியின் டிஜிட்டல் சவுண்ட் பீல்டு பிராசஸிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சோனி நிறுவனம் இந்திய சந்தையில் HT S400 வயர்லெஸ் சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த சவுண்ட்பார் மாடல் 330W திறன் கொண்டது ஆகும். சமீபத்தில் தான் புதிதாக SA-RS5 வயர்லெஸ் ரியர் ஸ்பீக்கர்களை சோனி அறிமுகம் செய்து இருந்தது. இந்த நிலையில், புதிதாக வயர்லெஸ் சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

    இந்த சவுண்ட்பார் டால்பி டிஜிட்டல் மற்றும் S போர்ஸ் ப்ரோ முன்புற சரவுண்ட் உள்ளிட்டவைகளை சோனி நிறுவனத்தின் டிஜிட்டல் சவுண்ட் பீல்டு பிராசஸிங் தொழில்நுட்பம் மூலம் இணைக்கிறது. இதன் காரணமாக சினிமா தரத்தில் சரவுண்ட் சவுண்ட் அனுபவம் பெற முடியும். இந்த முன்புற ஸ்பீக்கர்கள் X பேலன்ஸ் கொண்டவை ஆகும். இதில் 160 மில்லிமீட்டர் வயர்லெஸ் சப்வூஃபர் உள்ளது.


    புதிய HT S400 மாடல் 330W திறன் மற்றும் HDMI-ARC ஒன்-கேபில் கனெக்‌ஷன் கொண்டுள்ளது. சோனி HT S400 சக்திவாய்ந்த வயர்லெஸ் சப்-வூஃபர் ஆகும். இதில் 160 மில்லிமீட்டர் அளவில் பெரிய ஸ்பீக்கர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆழமான, அதிக தரமுள்ள பேஸ் சவுண்ட் மற்றும் டால்பி டிஜிட்டல் உள்ளிட்டவைகளை சப்போர்ட் செய்கிறது. இந்த சவுண்ட்பார் வயர்லெஸ் கனெக்டிவிட்டி, பிரத்யேக வால்யூம் மற்றும் சவுண்ட் பட்டன்கள் அடங்கிய ரிமோட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சோனி HT S400 வயர்லெஸ் சவுண்ட்பாரில் உள்ள OLED டிஸ்ப்ளே இன்புட் சோர்ஸ், வால்யும் மற்றும் சவுண்ட் ஆப்ஷன் உள்ளிட்டவைகளை காண்பிக்கிறது. இத்துடன் இந்த சவுண்ட்பாரின் பின்புற பேனலில் சோனி சொந்தமாக மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய சோனி HT S400 சவுண்ட்பார் விலை ரூ. 21 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சவுண்ட்பார் விற்பனை சோனி செண்டர் மற்றும் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் மின்சாதன விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    • சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஸ்மார்ட் டிவி, அக்சஸரீஸ், லேப்டாப் என ஏராளமான சாதனங்களை விற்பனை செய்து வருகிறது.
    • இந்த வரிசையில் புது சாதனங்கள் வெளியீட்டை அடுத்த வாரம் நடத்த சியோமி முடிவு செய்து இருக்கிறது.

    சியோமி இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி இந்திய சந்தையில் புது சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் சில புது சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சியோமி அறிவித்து உள்ளது. இந்த வரிசையில், சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவி X சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


    புது சாதனங்கள் வெளியீட்டுக்கான டீசர்களில் நோட்புக் ப்ரோ 120ஜி மாடல் அதிவேகமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டீசர் புகைப்படங்களின் படி இந்த லேப்டாப் தோற்றத்தில் 2021 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இந்த லேப்டாப்பில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் குறித்து சியோமி எந்த தகவலையும் வழங்கவில்லை.

    பெயரை வைத்து பார்க்கும் போது இந்த நோட்புக்கில் 120 ஜி என்ற குறியீடு 120Hz ஸ்கிரீன் வழங்கப்படுவதை குறிப்பிடலாம் என தெரிகிறது. புதிய ரெட்மி நோட்புக் அம்சங்கள் பற்றி சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இந்த லேப்டாப் ரெட்மிபுக் ப்ரோ 15 மாடல் ரெட்மி புக் ப்ரோ மாடலின் சற்றே ட்வீக் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை வழங்க ஜியோபைபர் பெயரில் தனி பிரிவை இயக்கி வருகிறது.
    • நாட்டின் முன்னணி பிராட்பேண்ட் சேவை நிறுவனமாகவும் ஜியோபைபர் விளங்குகிறது.

    இந்திய சந்தையில் முன்னணி டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கிறது. இந்த நிறுவனம் பைபர் பிராட்பேண்ட் சேவைகளை வழங்க ஜியோபைபர் பெயரில் தனி பிராண்டை உருவாக்கி இருக்கிறது. நாடு முழுக்க பைபர் பிராட்பேண்ட் வழங்குவதில் ஜியோபைபர் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஜியோபைபர் நாட்டின் முன்னணி பைபர் பிராட்பேண்ட் நிறுவனமாக விளங்குகிறது.

    ஜியோபைபர் அதிவேக பிராட்பேண்ட் வழங்குவதோடு ஒடிடி பலன்கள் அடங்கிய சலுகைகள், இலவச ஜியோ செட் டாப் பாக்ஸ் என ஏராளமான சேவைகளையும் கூடுதலாக வழங்கி வருகிறது. எனினும், இவை அனைத்திற்கும் அதிவேக இணைய வசதி அவசியம் ஆகும். சிலருக்கு தங்களின் வீட்டில் அனைத்து இடங்களிலும் வைபை கவரேஜ் சிறப்பாக இருக்காது. இது போன்ற சமயத்தில் நெட்வொர்க் கனெக்டிவிட்டி மோசமாகவே இருக்கும்.


    இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஜியோபைபர் புது சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஒரு வைபை மெஷ் எக்ஸ்டெண்டர் ஆகும். இந்த எக்ஸ்டெண்டர் JCM0112 என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 மட்டுமே. இதனை மிக எளிய மாத தவணை முறை வசதியிலும் வாங்க முடியும். மாத தவணை மாதம் ரூ. 86.62 முதல் துவங்குகிறது.

    புதிய மெஷ் எக்ஸ்டெண்டரை ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது சில்லறை விற்பனை மையத்திற்கு சென்று இது பற்றிய விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த எக்ஸ்டெண்டர் அனைத்து விதமான கனெக்டிவிட்டி பிரச்சினைகளை சரி செய்து விடும். இத்துடன் இதனை இன்ஸ்டால் செய்யும் நடைமுறை மிகவும் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது.

    • ஹூவாய் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் சொந்தமான ஹார்மனி ஒஎஸ் கொண்டு இயங்குகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு பதில் தற்போது ஒரு பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் வழக்கத்திற்கு ஹூவாய் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. இந்த நிலையில், 2022 ஆண்டிற்கு ஹூவாய் மேட் 50 லைன் ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு P50 ப்ரோ ஸ்மார்ட்போனை அசாத்திய கேமரா அம்சங்களுடன் அறிமுகம் செய்து இருந்தது.

    தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்துலாக இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதை அடுத்து ஹூவாய் நிறுவனம் கூகுள் மற்றும் இதர அமெரிக்க நிறுவனங்களின் சிப்செட்களை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஹூவாய் நிறுவனம் தனக்கென சொந்தமாக ஹார்மனி ஒஎஸ்-ஐ உருவாக்கிக் கொண்டுள்ளது. பல்வேறு சிக்கல்களை கடந்தும் ஹூவாய் தொடர்ந்து புதுமைகளை உருவாக்குவதை நிறுத்தவில்லை.


    அந்த வகையில், ஹூவாய் மேட் 50 லைன் ஸ்மார்ட்போனில் எமர்ஜன்சி பேட்டரி மோட் எனும் அம்சம் வழங்கப்பட இருப்பதாக சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட் எல்லா ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட வேண்டும் என அனைவரும் விரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த அம்சமானது ஸ்மார்ட்போனின் பேட்டரி முழுமையாக தீர்ந்து போனாலும், அழைப்புகளை எப்படியாவது மேற்கொள்ள செய்திடும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஹார்மனி ஒஎஸ் 3.0-இன் கீழ் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஹூவாய் மேட் 50 மாடல்களில் இந்த ஒஎஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த அம்சம் அழைப்புகளை மேற்கொள்வதோடு குறுந்தகவல் அனுப்புவது, டாக்யுமெண்ட் மற்றும் லொகேஷன் கோட்களை ஸ்கேன் செய்யும் என கூறப்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாத வாக்கில் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஐபோன் 14 சீரிசுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஐபேட், ஏர்பாட்ஸ் ப்ரோ 2 போன்ற சாதனங்களும் அறிமுகம் செய்யப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் பற்றிய தகவல் நீண்ட காலமாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த மாடல் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளன. இது குறித்து தற்போது லீக் ஆகி இருக்கும் தகவல்களில் செப்டம்பர் 7 ஆம் தேதி ஆப்பிள் தனது ஐபோன் மாடல்கள் அறிமுக நிகழ்வை நடத்தலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆண்டு ஐபோன் மட்டுமின்றி - ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ரிடிசைன் செய்யப்பட்ட ஐபேட் 10, ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மற்றும் சில சாதனங்களையும், ஐஓஎஸ் 16, வாட்ச் ஓஎஸ் 9 உள்ளிட்ட மென்பொருள்களையும் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.


    வழக்கமாக புது ஐபோன் வெளியான இரு காலாண்டுக்கு பின்பு தான் இந்தியாவில் அதன் உற்பத்தி துவங்கும். புதிய ஐபோன் 14 மாடல்களின் உற்பத்தி தமிழ் நாட்டில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது என முந்தைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    விலையை பொருத்தவரை புதிய ஐபோன் 14 மாடல் விலை 799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 63 ஆயிரத்து 200 முதல் துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை அனைத்திலும் 120Hz ப்ரோமோஷன் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது.

    • மிவி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டுயோபாட்ஸ் F50 இயர்பட்ஸ்-ஐ மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.1 தொழில்நுட்பம், ஏஏசி கோடெக் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

    மிவி டுயோபாட்ஸ் F50 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனத்தின் புதிய மேட் இன் இந்திய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆகும். சமீபத்தில் தான் மிவி டுயோபாட்ஸ் A350 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் தற்போது F50 மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

    இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் 13 மில்லிமீட்டர் எலெக்ட்ரோ டைனமிக் டிரைவர்கள், ப்ளூடூத் 5.1 தொழில்நுட்பம், AAC மற்றும் SBC கோடெக் சப்போர்ட், டூயல் MEMS மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டுள்ளன.


    புதிய மிவி டுயோபாட்ஸ் F50 முழு சார்ஜ் செய்தால் 8.5 மணி நேரத்திற்கான பிளேபேக் மற்றும் கேஸ் சேர்த்தால் 50 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் IPX4 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த இயர்பட்ஸ் உடற்பயிற்சி மேற்கொள்வோருக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டச் கண்ட்ரோல், கூகுள், சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    மிலி டுயோபாட்ஸ் F50 மாடல் பிளாக், வைட், பின்க் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் மெட்டாலிக் பினிஷ் கொண்டிருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த இயர்பட்ஸ் ரூ. 999 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ஒரு வருடத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

    ×