search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் இருக்கு - நீண்ட பேட்டரி பேக்கப்புடன் ரெடியாகும் கேலக்ஸி S23
    X

    ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் இருக்கு - நீண்ட பேட்டரி பேக்கப்புடன் ரெடியாகும் கேலக்ஸி S23

    • சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாக துவங்கி விட்டது.
    • புது கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் தனது புதிய பிளாக்‌ஷிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 பெயரில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய போல்டபில் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சாம்சங் தற்போது அடுத்த தலைமுறை கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில் புதிய சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிராசஸர் மூலம் புது ஸ்மார்ட்போனின் பேட்டரி பேக்கப் பிரிவில் அதிக கவனம் செலுத்த சாம்சங் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.


    தற்போதைய கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கலுயா எனும் குறியீட்டு பெயரில், SM8550 எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த பிராசஸரை TSMC தனது 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்படுவதாக தெரிகிறது.

    இந்த சிப்செட் ஒரு அசதிவேக கார்டெக்ஸ் X3 கோர் கொண்டிருக்கும். இது முந்தைய பிராசஸரை விட 25 சதவீதம் அதிக செயல்திறன் வழங்கும். சில மாதங்களுக்கு முன்பு தான் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 செயல்திறன் அறியும் சோதனைகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. புதிய சிப்செட் நவம்பர் அல்லது டிசம்பர் மாத வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    Next Story
    ×