search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    50MP பிரைமரி கேமராவுடன் எண்ட்ரி லெவல் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    50MP பிரைமரி கேமராவுடன் எண்ட்ரி லெவல் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய எண்ட்ரி லெவல் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன் 50MP டூயல் கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யுஐ கோர் 4.1 ஒஎஸ் கொண்டு இயங்குகிறது.

    சாம்சங் நிறுவனம் சத்தமின்றி கேலக்ஸி A04 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A03 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதால் இந்த மாடலில் HD+ டிஸ்ப்ளே, 50MP டூயல் கேமரா சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய சாம்சங் கேலக்ஸி A04 மாடல் அளவில் 164.4 x 76.3 x 9.1mm உள்ளது. இதன் மொத்த எடை 192 கிராம் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் LDC பேனல் மற்றும் இன்பினிட்டி வி நாட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கிரீன் HD+ ரெசல்யூஷன் சப்போர்ட் மற்றும் 5MP செல்பி கேமரா கொண்டுள்ளது.


    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் என டூயல் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த ஒன் யுஐ கோர் 4.1 மூலம் இயங்குகிறது. இத்துடன் ஆக்டா கோர் எக்சைனோஸ் 850 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெமரியை பொருத்தவரை 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு டூயல் சிம் சப்போர்ட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது.

    புதிய சாம்சங் கேலக்ஸி A04 ஸ்மார்ட்போன் பிளாக், வைட், கிரீன் மற்றும் காப்பர் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    Next Story
    ×