search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    யூடியூபர்களுக்காக புது மைக்ரோபோன் அறிமுகம் செய்த சோனி - விலை எவ்வளவு தெரியுமா?
    X

    யூடியூபர்களுக்காக புது மைக்ரோபோன் அறிமுகம் செய்த சோனி - விலை எவ்வளவு தெரியுமா?

    • சோனி நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய மைக்ரோபோனை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த மைக்ரோபோன் கிரியேட்டர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக சோனி அறிவித்து உள்ளது.

    சோனி இந்தியா நிறுவனம் புதிதாக ஷாட்கன் மைக்ரோபோன் ECM-G1 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மைக்ரோபோன் கிரியேட்டர்கள் அதிக தரமுள்ள ஆடியோவை தெளிவாக பதிவு செய்து கொள்ள உதவுகிறது. இதில் பெரிய டையாமீட்டர் மைக்ரோபோன் கேப்சூல் உள்ளது. இது தெளிவான ஆடியோவை எந்த விதமான இரைச்சலும் இன்றி பதிவு செய்கிறது.

    புதிய சோனி ECM-G1 மைக்ரோபோன் விலாகிங் மற்றும் பேட்டி எடுப்பதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இறுக்கிறது. இது குரல்களை தெளிவாக பதிவு செய்வதோடு, வெளிப்புறங்களில் பயன்படுத்தும் போது காற்றின் சத்தத்தை தடுத்து நிறுத்த விண்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஆப்டிமைஸ் செய்யப்பட்ட பிரேம், வைப்ரேஷன் சத்தத்தையும் தடுத்து நிறுத்துகிறது.


    ECM-சூப்பர் கார்டியோய்டு பிக்கப்-பேட்டன் கேமராவின் முன்புறம் சுற்றசுச்சூழல் சத்தத்தை தடுத்து, தெளிவான மற்றும் தேவையான ஆடியோவை மட்டுமே பதிவு செய்கிறது. இது செல்பி ஷூட்டிங் போன்ற பயன்பாடுகளுக்கு ஏற்ற மைக்ரோபோன் ஆகும். இண்டோர் பயன்பாட்டுகளின் போது சுவர்களில் இருந்து வெளியேறும் அதிர்வுகளை தடுத்து, தெளிவான ஆடியோவை பதிவு செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய சோனி ECM-G1 மைக்ரோபோனுடன் ரெக்கார்டிங் கேபிள் வழங்கப்படுகிறது. இதில் உள்ள மைக்ரோபோன் ஜாக் பல்வேறு சாதனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் விரும்பும் இடத்தில் ஆடியோ பதிவை எவ்வித சமரசமும் இன்றி மேற்கொள்ள முடியும். இந்திய சந்தையில் புதிய சோனி ECM-G1 மைக்ரோபோன் விலை ரூ. 10 ஆயிரத்து 290 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×