search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    64MP குவாட் கேமராவுடன் ரெட்மி நோட் 11SE இந்தியாவில் அறிமுகம்
    X

    64MP குவாட் கேமராவுடன் ரெட்மி நோட் 11SE இந்தியாவில் அறிமுகம்

    • ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    ரெட்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், ARM மாலி-G76 MC4 GPU, வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா என குவாட் கேமரா சென்சார்கள், 13MP இன் டிஸ்ப்ளே செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை கொண்டு பேட்டரியை முப்பது நிமிடங்களில் 54 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.


    ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் IP53 தர ஸ்பிலாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், டூயல் சிம் ஸ்லாட், 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.0, டூயல் ஸ்பீக்கர், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ சான்று, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5, போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் தண்டர் பர்பில், காஸ்மிக் வைட், ஸ்பேஸ் பிளாக் மற்றும் பைபிராஸ்ட் புளூ என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×