என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அல்ட்ரா ஹெச்டி டிவி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
- இந்தியாவில் அறிமுகமான சோனி நிறுவனத்தின் முதல் மினி எல்இடி டிவி மாடல் ஆகும்.
சோனி XR-85X95K அல்ட்ரா ஹெச்டி மினி எல்இடி டிவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய எல்இடி டிவி வில ரூ. 6 லட்சத்து 99 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இது இந்திய சந்தையில் அறிமுகமான முதல் மினி எல்இடி டிவிக்கள் ஆகும்.
புதிய சோனி மினி எல்இடி டிவி XR மாடலில் காக்னிடிவ் பிராசஸர் XR வழங்கப்பட்டு இருக்கிறது. இது சோனி நிறுவனத்தின் சொந்த சிப்செட் ஆகும். மேலும் இதில் XR பேக்லிட் மாஸ்டர் டிரைவ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது. இது பேக்லிட்டிங் மற்றும் லோக்கல் டிமமிங் போன்ற அம்சங்களை வழங்குகிறது.
இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கும் புதிய சோனி மினி எல்இடி டிவி மாடல் சாம்சங் மற்றும் டிசிஎல் பிராண்டு மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. அளவை பொருத்தவரை மினி டிஸ்ப்ளே தெழில்நுட்பம் கொண்ட டிவி மாடல் எல்ஜி நிறுவனத்தின் OLED டிவி மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

அம்சங்கள்:
சோனி X95K சீரிஸ் டிவி 85 இன்ச் அளவில் கிடைக்கிறது. இதில் 3840x2160 பிக்சல் மினி எல்இடி டிஸ்ப்ளே பேனல் உள்ளது. இந்த டிவி காக்னிடிவ் பிராசஸர் XR மற்றும் XR பேக்லிட் மாஸ்டர் டிரைவ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அதிநவீன மினி எல்இடி பேக்லைட்டிங் மற்றும் லோக்கல் டிம்மிங் உள்ளிட்டவைகளை கவனித்துக் கொள்கிறது. மேலும் அதில் ஹெச்டிஆர் 10 மற்றும் டால்பி விஷன், டால்பி அட்மோஸ் சவுண்ட் உள்ளது.
இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி மென்பொருள் சார்ந்த கூகுள் டிவி யுஐ கொண்டிருக்கிறது. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், ஆப்பிள் ஏர்பிளே, ஆப்பிள் ஹோம்கிட் வசதி, HDMI 2.1, 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சோனி X95K மினி எல்இடி டிவி சீரிஸ் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 8 லட்சத்து 99 ஆயிரத்து 990 ஆகும். ஆனால் பெஸ்ட் பை சலுகையின் கீழ் இந்த டிவி ரூ. 6 லட்சத்து 99 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை சோனி செண்டர் ஸ்டோர் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை கடைகளில் நடைபெறுகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்குவதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி இருக்கிறது.
- சமீபத்தில் தான் சாம்சங், சியோமி மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகமானது.
சாம்சங், சியோமி மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கி விட்டன. இந்த நிறுவனங்கள் சந்தையில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக போல்டபில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் வரிசையில் கூகுள் நிறுவனமும் தனது பிக்சல் போல்டு மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதவிர ஒப்போ நிறுவனம் இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது ஒன்பிளஸ் நிறுவனமும் போல்டபில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்க முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. ஒன்பிளஸ்-இன் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசர்கள் வெளியாக துவங்கி உள்ளன.

2019 ஆண்டிலேயே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையில் புது துவக்கத்திற்கு அடித்தளம் போட்ட நிறுவனங்களாக ஹூவாய், சாம்சங் மற்றும் மோட்டோரோலா விளங்குகின்றன. அப்போதில் இருந்தே இந்த நிறுவனங்களின் போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்கள் சந்தையில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
2020 வாக்கில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்பை பெறவில்லை, இதனால் இது போன்ற மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்து இருந்தார். ஒன்பிளஸ் நிறுவனம் இது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, சிறப்பான டிஸ்ப்ளே தொழில்நுட்பம் கிடைக்க காத்துக் கொண்டு இருந்தது.
இந்த வரிசையில் தான் ஒன்பிளஸ் சிஇஒ பீட் லௌ தனது ட்விட்டரில் "இது என்னவாக இருக்கும் என நினைக்கின்றீர்கள்" எனும் கேள்வியுடன் போல்டபில் ஸ்மார்ட்போன் ஹின்ஜ் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இது தோற்றத்தில் ஒப்போ பைண்ட் N மாடலின் ஹின்ஜ் போன்றே காட்சியளிக்கிறது.
- சியோமி நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த ஸ்மார்ட்போனில் சாம்சங் Eco² OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் மிக்ஸ் போல்டு 2 பெயரில் பிளாக்ஷிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் மிக்ஸ் போல்டு 2 மாடலில் 8.02 இன்ச் சாம்சங் Eco² OLED 120Hz LTPO 2.0 மடிக்கக்கூடிய ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.
இதன் வெளிப்புற ஸ்கிரீன் 6.56 இன்ச் FHD+ சாம்சங் E5 AMOLED பேனல் ஆகும். இது டால்பி விஷன் மற்றும் HDR 10+ சப்போர்ட், வெளிப்புற ஸ்கிரீனுக்கு கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்காக சியோமி நிறுவனம் மைக்ரோ வாட்டர் டிராப் ஹின்ஜ் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இது மிக்ஸ் போல்டு 2 ஹின்ஜ் அளவை 8.8 மில்லிமீட்டராகவும், எடையை 35 சதவீதம் வரை குறைத்து இருக்கிறது.

சியோமி மிக்ஸ் போல்டு 2 அம்சங்கள்:
- 8.02 இன்ச் 2160x1914 பிக்சல் 2K+ Eco² OLED 4:3.55 டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- வெளிப்புறம் 6.56 இன்ச் 2520x1080 பிக்சல் FHD+ சாம்சங் E5 AMOLED 21:9 டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
- அதிகபட்சம் 3.2GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர்
- அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU
- 12 ஜிபி LPPDDR5 6400Mbps ரேம்
- 256 ஜிபி / 512 ஜிபி /1 டிபி UFS 3.1 மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, OIS, எல்இடி பிளாஷ்
- 13MP 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
- 8MP 2x டெலிபோட்டோ கேமரா, f/2.6, லெய்கா ஆப்டிக்ஸ்
- 20MP செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார், இன்ப்ரா-ரெட் சென்சார்
- யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6E 802.11 ax, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் (L1 + L5), NavIC
- யுஎஸ்பி டைப் சி, என்எப்சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 67 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சியோமி மிக்ஸ் போல்டு 2 மாடல் பிளாக் மற்றும் கோல்டு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 8 ஆயிரத்து 999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 250 என துவங்குகிறது.
இதன் டாப் எண்ட் மாடல் விலை 11 ஆயிரத்து 999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 645 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் சர்வதேச வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
- இதில் அண்டர் டிஸ்ப்ளே கேமரா சென்சார் மற்றும் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி Z போல்டு 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினையும் அறிமுகம் செய்து இருக்கிறது. நேற்று இரவு நடைபெற்ற அன்பேக்டு நிகழ்வில் புது போல்டபில் ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்தது.
புதிய கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 7.6 இன்ச் இன்பினிட்டி பிளெக்ஸ் டைனமிக் AMOLED 2x ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய மாடலை விட அதிக பிரகாசமாக உள்ளது. இத்துடன் 4MP அண்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது எளிதில் கண்களுக்கு தெரியாத வகையில் நேர்த்தியாக பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் உள்புறம் 6.2 இன்ச் HD+ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12L ஓஎஸ் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 பெற்று இருக்கிறது. இதில் உள்ள புதிய டாஸ்க்பார் கொண்டு சமீபத்திய செயலிகளை எளிதில் இயக்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 அம்சங்கள்:
- 7.6 இன்ச் 2176x1812 பிக்சல் QXGA+ 21.6:18 டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே
- 6.2 இன்ச் 2316x904 பிக்சல் 23.1:9 HD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
- 3.2GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
- அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU
- 12 ஜிபி ரேம்
- 256 ஜிபி / 512 ஜிபி / 1 டிபி (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12L மற்றும் ஒன் யுஐ 4.1.1
- டூயல் சிம் (நானோ+நானோ), ஒரு இசிம்
- 50 MP பிரைமரி கேமரா, f/1.8, OIS,
- 12 MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 1.12 μm
- 10 MP டெலிபோட்டோ கேமரா, f/2.4 1.0 μm, OIS, PDAF
- 10 MP செல்பி கேமரா, 1.22 μm, f/2.2
- 4MP அண்டர் டிஸ்ப்ளே கேமரா, f/1.8, 2.0μm
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX8) வசதி
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 6E (2.4/5GHz), ப்ளூடூத் 5.2 LE
- ஜிபிஎஸ் மற்றும் GLONASS, யுஎஸ்பி டைப் சி, என்எப்சி
- 4400mAh பேட்டரி
- 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
- 4.5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போன் கிரேகிரீன், பேண்டம் பிளாக் மற்றும் பெய்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1,799.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 490 என துவங்கி அதிகபட்சமாக டாப் எண்ட் மாடல் விலை 2 ஆயிரத்து 249.98 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 78 ஆயிரத்து 115 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- கார்மின் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாகசங்கள் நிறைந்த விளையாட்டுகளின் போது பயன்படுத்த உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச்-இன் அப்டேட் செய்யப்பட்ட மாடல் ஆகும்.
கார்மின் நிறுவனம் கடந்த ஆண்டு எண்டியுரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மலை ஏறுதல், ஹைகிங் என சாகசங்கள் நிறைந்த விளையாட்டுகளின் போது பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் அப்டேட் செய்யப்பட்ட புது மாடலை கார்மின் அறிமுகம் செய்து இருக்கிறது. கார்மின் எண்டியுரோ 2 பல்வேறு புது அம்சங்களை கொண்டுள்ளது.
குறைந்த எடை கொண்ட டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் கார்மின் எண்டியுரோ 2 டச் ஸ்கிரீன் மற்றும் சஃபயர் லென்ஸ் பாதுகாப்பு, நைலான் பேண்ட் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரி லைஃப்-ஐ ஜிபிஎஸ் மோடில் 150 மணி நேரம் வரை அதிகரித்துக் கொள்ளலாம். இதில் சன் சார்ஜிங் மற்றும் SatIQ தொழில்நுட்பம் உள்ளது. இது ஸ்மார்ட்வாட்ச் மோடில் அதிகபட்சம் 46 நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

எண்டியுரோ 2 மாடலில் பில்ட்-இன் எல்இடி பிளாஷ்லைட் உள்ளது. இதனை அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது ஃபெனிக்ஸ் 7 சீரிசில் வழங்கப்பட்டதை போன்றதாகும். ஆனால், இது இருமடங்கு அதிக பிரகாசமாக உள்ளது. இதில் டோபோ ஆக்டிவ் மேப்ஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் நெக்ஸ்ட் ஃபோர்க், விஷூவல் ரேஸ் பிரெடிக்டர், கிரேடு-அட்ஜஸ்ட் செய்யப்பட்ட பேஸ் ஆப்ஷன் போன்ற தொழில்நுட்பங்கள் உள்ளன.
இத்துடன் ஹார்ட் ரேட், ஸ்டிரெஸ், SpO2, ஸ்லீப் டிராக்கிங், பாடி பேட்டரி, பிட்னஸ் ஏஜ் என ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் கார்பின் பே, இன்சிடெண்ட் டிடெக்ஷன் மற்றும் மியூசிக் ஸ்டோரேஜ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. கார்மின் எண்டியுரோ 2 மாடலின் விலை 1,099.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 87 ஆயிரத்து 511.35 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- மோட்டோரோலா நிறுவனம் 2022 மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- விரைவில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மோட்டோரோலா ரேசர் 2022 ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான கிளாம்ஷெல் போல்டபில் ஸ்மார்ட்போன்களை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட முதல் கிளாம்ஷெல் போல்டபில் போன் என்ற பெருமையை மோட்டோரோலா ரேசர் 2022 மாடல் பெற இருக்கிறது.
சீன சந்தையில் மோட்டோரோலா ரேசர் 2022 மாடல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புது ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்காக சீன தளத்தில் பிரத்யேக வலைப்பக்கத்தை மோட்டோரோலா திறந்துள்ளது. அதில் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.

இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 10 பிட் கலர் டிஸ்ப்ளே, HDR 20+, டிசி டிம்மிங் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே அம்சங்கள் மோட்டோரோலா எட்ஜ் 30 மாடலுக்கு நிகராக வழங்கப்பட்டு இருக்கிறது.
மற்ற அம்சங்கள் அனைத்தும் தற்சமயம் விற்பனை செய்யப்படும், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சவால் விடும் வகையில் வழங்கப்பட இருக்கிறது. மோட்டோ X30 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் தலைசிறந்த கேமரா சிஸ்டம் இந்த மாடலிலும் எதிர்பார்க்கலாம். மோட்டோரோலா ரேசர் 2022 பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.
- மைக்ரோசாப்ட் நிறுவனம் கடைசியாக அறிமுகம் செய்த விண்டோஸ் 11 ஓ.எஸ். உலகின் பல்வேறு நாடுகளில் வெளியாக துவங்கி இருக்கிறது.
- புது விண்டோஸ் 11 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகமானது.
விண்டோஸ் 11 அம்சங்களில் சிலவற்றை விண்டோஸ் 10 ஓஎஸ்-இல் வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விண்டோஸ் 11 ஓஎஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கும் ப்ரிண்டிங் சார்ந்த அம்சங்கள் தான் விண்டோஸ் 10-இல் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய ப்ரிண்டிங் அம்சம் ப்ரிண்ட் செய்யும் போது பின் வழங்க இருக்கிறது. இவ்வாறு செய்யும் போது போலி கனெக்ஷன்கள் மற்றும் பிழைகளை தவிர்க்க முடியும். இது விண்டோஸ் 1- வெர்ஷன் 22H2 அப்டேட்டின் கீழ் வழங்கப்பட இருக்கிறது. விண்டோஸ்-இல் புது மாற்றங்களை செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. விண்டோஸ் 11 ஓஎஸ்-இல் பிரைவசி ஆடிட்டிங் பெயரில் புது அம்சம் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.

இந்த அம்சம் மூலம் மைக்ரோபோன், கேமரா மற்றும் லொகேஷன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் செயலிகள் பற்றி அறிந்து கொள்ள முடியும். விண்டோஸ் 10 வெர்ஷன் 22H2 அப்டேட்டின் கீழ் விண்டோஸ் 11 அம்சங்கள் விண்டோஸ் 10-க்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
புது மாற்றம் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பழைய படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறு புது ஓஎஸ் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இது உண்மையாகும் பட்சத்தில் 2024 வாக்கில் விண்டோஸ் 12 ஓஎஸ் வெளியாக வேண்டும். எனினும், இது பற்றி மைக்ரோசாப்ட் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புது சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
- தற்போது 50 லட்சம் பேர் ரியல்மி 5ஜி சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி ரியல்மி 9i 5ஜி மாடல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ரியல்மி 9i 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருந்தது.

ரியல்மி 7 சீரிஸ் மாடலில் மிரர் டிசைன், ரியல்மி 8 சீரிசில் டைனமிக் லைட் டிசைன், ரியல்மி 9 சீரிசில் ரிப்பில் ஹாலோகிராபிக் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வரிசையில், ரியல்மி 9i 5ஜி மாடலில் லேசர் லைட் டிசைன் வழங்கப்பட இருக்கிறது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இதே பிராசஸர் கொண்டு ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புதிய 5ஜி போன் வெளியீட்டை உணர்த்தும் டீசரை ரியல்மி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ரியல்மி 9i 5ஜி போன் மூன்று கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என உறுதியாகி விட்டது. இத்துடன் FHD+ LCD ஸ்கிரீன், 5000 mAh பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சாம்சங் நிறுவனம் தனது புதிய தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புது போல்டபில் போன் மட்டுமின்றி கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி Z ப்ளிப் 4, கேலக்ஸி Z போல்டு 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இது ஐரோப்பிய சந்தைக்கான விலை விவரங்கள் ஆகும். புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்கள் மட்டுமின்றி கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் விலை விவரங்களும் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் தான் சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவை இந்திய சந்தையில் துவங்கியது. முன்பதிவு துவங்கியதும் இந்த ஸ்மார்ட்போனின் நிற ஆப்ஷன்கள் பற்றிய தகவல் இணையத்தில் வெளியானது.
பிரபல டிப்ஸ்டரான ஸ்டீவ் ஹெம்மர்ஸ்டோபர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி Z போல்டு 4 மாடல்களின் விலை விவரங்கள் இடம்பெற்று உள்ளது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி புதிய கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் விலை விவரங்களும் வெளியாகி இருக்கிறது.
விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலின் 256 ஜிபி வேரியண்ட் 1799 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 400, 512 ஜிபி வேரியண்ட் 1919 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 100 வரை நிர்ணயம் செய்யப்படலாம். கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலின் 128 ஜிபி வேரியண்ட் விலை 1109 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 89 ஆயிரத்து 600 என்றும் 256 ஜிபி விலை 1169 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 94 ஆயிரத்து 500 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
கேலக்ஸி வாட்ச் 5 (40mm) ப்ளூடூத் மாடலின் விலை 299 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 ஆயிரத்து 200 என்றும் 4ஜி வேரியண்ட் விலை 349 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரத்து 200 வரை நிர்ணயம் செய்யப்படலாம். கேலக்ஸி வாட்ச் 5 (44mm) ப்ளூடூத் மாடல் விலை 329 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 26 ஆயிரத்து 600 என்றும் 4ஜி வேரியண்ட் விலை 179 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 30 ஆயிரத்து 600 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ (45mm) ப்ளூடூத் மாடல் விலை 469 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரத்து 900 என்றும் 4ஜி மாடல் விலை 499 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரத்து 300 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
- மிவி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய சவுண்ட்பார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
- இந்த சவுண்ட்பார்கள் கணினி மற்றும் டிவி உள்ளிட்டவைகளுடன் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
மிவி நிறுவனத்தின் போர்ட் S16 மற்றும் போர்ட் S24 சவுண்ட்பார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக மிவி S60 மற்றும் S100 சவுண்ட்பார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய மிவி போர்ட் S16 மற்றும் S24 மாடல்கள் பேப்ரிக் டிசைன், மேட் பினிஷ் கொண்டுள்ளது. இந்த சவுண்ட்பார் டிவி மற்றும் கணினியுடன் இணைத்து பயன்படுத்தலாம்.
பெயருக்கு ஏற்றார்போல் மிவி போர்ட் S16 மாடல் 16 வாட் அவுட்புட் வழங்குகிறது. இதே போன்று மிவி போர்ட் S24 மாடல் 24 வாட் அவுட்புட் வழங்கும். டூயல் பேசிவ் ரேடியேட்டர்கள் இருப்பதால் குறைந்த பிரீக்வன்சிக்களிலும் சீரான சவுண்ட் வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக சப்-வூபர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
மிவி போர்ட் S16 மற்றும் போர்ட் S24 அம்சங்கள்:
இந்த சவுண்ட்பாரில் பல்வேறு இன்புட் மோட்கள் உள்ளன. அதன்படி ப்ளூடூத், AUX, யுஎஸ்பி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சவுண்ட்பார் பயனர்கள் வீட்டில் இருந்தபடி சினிமா தர சவுண்ட் அனுபவிக்க செய்கிறது.

மிலி போர்ட் S16 மாடலில் 2000 எம்ஏஹெச் பேட்டரியும், போர்ட் S24 மாடலில் 2500 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு சவுண்ட்பார்களும் முழு சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகின்றன. மிவி போர்ட் S16 மற்றும் போர்ட் S24 சவுண்ட்பார்கள் டிசி அடாப்டர் மூலம் சக்தியூட்டிக் கொள்ளலாம். இவை பிளாக் நிறத்தில் கிடைக்கின்றன.
இதில் வால்யூம், பிளே, பாஸ், டிராக் கண்ட்ரோல் போன்ற கண்ட்ரோல்கள் உள்ளன. இத்துடன் ஹேண்ட்ஸ்-ஃபிரீ அசிஸ்டண்ட், எப்.எம். ரேடியோ, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி, AUX மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. இந்த சவுண்ட்பார் உடன் ரிமோட், பவர் அடாப்டர், யூசர் மேனுவல், வாரண்டி கார்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
மிவி போர்ட் S16 மற்றும் போர்ட் S24 மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை அறிமுக சலுகையாக முறையே ரூ. 1,299 மற்றும் ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் இரு சவுண்ட்பார்களின் விலை முறையே ரூ. 1,499 மற்றும் ரூ. 1,999 என மாறி விடும்.
- ரியல்மி நிறுவனத்தின் புதுவரவு ஸ்மார்ட்வாட்ச் மாடல் ரியல்மி வாட்ச் 3 பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த மாடல் ரியல்மி பேட் X உடன் அறிமுகமானது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த புது சாதனங்களில் ஒன்று ரியல்மி வாட்ச் 3. ரியல்மி AIoT நிகழ்வில் ரியல்மி பேட் X, ரியல்மி வாட்ச் 3, ரியல்மி மாணிட்டர் மற்றும் பல்வேறு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. டேப்லெட் மற்றும் மாணிட்டர் மாடல்களின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரியல்மி வாட்ச் 3 விற்பனை துவங்கி இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ரியல்மி வாட்ச் 3 மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 499 ஆகும். எனினும், முதல் விற்பனையில் இந்த வாட்ச் ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது. விலை குறைப்பு மட்டும் இன்றி வங்கி சலுகைகள் மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவையும் ரியல்மி வாட்ச் 3 மாடலுக்கு வழங்கப்படுகிறது.

ரியல்மி வாட்ச் 3 அம்சங்கள்:
ரியல்மி வாட்ச் 3 மாடலில் 1.8 இன்ச் 240x286 பிக்சல் TFT-LCD பேனல், டச் ஸ்கிரீன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் இது சாதாரன டிசைன், செவ்வக வடிவமைப்பு, வலது புறம் பவர் பட்டன் கொண்டிருக்கிறது. இத்துடன் நூற்றுக்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை ஆப் மூலம் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
இத்துடன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, ப்ளூடூத் காலிங் வசதி, ஏ.ஐ. சார்ந்த நாய்ஸ் கேன்சலிங் வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இத்துடன் SpO2 சென்சார், ஸ்டெப்ஸ் ரெக்கார்டர், இதய துடிப்பு சென்சார், ஸ்டிரெஸ் மாணிட்டர் மற்றும் ஸ்லீப் டிராக்கர் போன்ற அம்சங்கள் உள்ளன.
ரியல்மி வாட்ச் 3 மாடல் 340 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும். இது பயனர் செயல்பாடுகளை பொருத்து மாறுபடவும் வாய்ப்புகள் உண்டு.
- ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புது நோக்கியா மொபைல் மாடலை அறிமுகம் செய்தது.
- முன்னதாக இதே மொபைல் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 8120 4ஜி மொபைல் போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக நோக்கியா 2660 ப்ளிப் மற்றும் 5710 எக்ஸ்பிரஸ் ரேடியோ போன்ற மாடல்களுடன் நோக்கியா 8120 மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.
புது நோக்கியா 8120 அதன் பழைய ஃபீச்சர் போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அசத்தல் டிசைன், தலைசிறந்த உறுதித்தன்மை கொண்டிருக்கும் நோக்கியா 8120 மாடல் 4ஜி, வோல்ட்இ கனெக்டிவிட்டி, 2.8 இன்ச் டிஸ்ப்ளே, எளிய யூசர் இண்டர்பேஸ் கொண்டுள்ளது.
இத்துடன் டார்ச், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, MP3 பிளேயர், கேம்லாஃப்ட் கேம்கள், ஒரிஜின் டேட்டா கேம்கள் பிரீலோட் செய்யப்பட்டு உள்ளன.

நோக்கியா 8120 4ஜி அம்சங்கள்:
- 2.8 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
- அதிகபட்சம் 1GHz யுனிசாக் T107 சிங்கில் கோர் பிராசஸர்
- 48MB ரேம்
- 128MB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- S30+ ஓ.எஸ்.
- விஜிஏ கேமரா
- 3.5mm ஹெட்போன் ஜாக்
- வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, MP3 பிளேயர், டார்ச் லைட்
- 4ஜி வோல்ட்இஷ ப்ளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி
- 1450 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நோக்கியா 8120 4ஜி மாடல் டார்க் புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 ஆகும். விற்பனை அமேசான் மற்றும் நோக்கியா இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.






