என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- கூகுள் நிறுவனம் 2022 பிளாக்ஷிப் பிக்சல் போன் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புது பிக்சல் ஸ்மார்ட்போன்கள் இந்த தேதியில் தான் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு புது பிளாக்ஷிப் மாடல்கள் வெளியீடு வரும் மாதங்களில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இவற்றில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற கூகுள் I/O நிகழ்விலேயே கூகுள் நிறுவனம் இரு பிக்சல் ஸ்மார்ட்போன்களின் டீசரை வெளியிட்டு விட்டது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் 7 சீரிஸ் மாடல்களை அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்குகிறது. இதே நாளில் ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வு நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து விற்பனை அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் தோற்றம் ஏற்கனவே வெளியாகி விட்டது. மேலும் இவற்றில் அடுத்த தலைமுறை டென்சார் பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ். கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்தத்தில் முந்தைய பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது புதிய ஸ்மார்ட்போன்களில் சற்றே மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
இவை இன்னமும் கேமரா பார் கொண்டிருப்பதோடு, பிக்சல் 6 சீரிசை விட அளவில் சிறியதாக உள்ளன. பிக்சல் 7 ஸ்மார்ட்போன் அலுமினியம் பிரேம், மேட் பினிஷ், பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் வழங்கப்படுகிறது. பிக்சல் 7 சீரிஸ் டிஸ்ப்ளேக்கள் முந்தைய மாடல்களில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அதன்படி புதிய பிக்சல் 7 மாடலில் 2400x1080 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. பிக்சல் 7 ப்ரோ மாடலில் 3120x1440 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.
- சாம்சங் நிறுவனம் விரைவில் இரண்டு புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புது சாதனங்கள் வெளியீட்டு தேதியை சாம்சங் ஏற்கனவே அறிவித்து விட்டது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் Z ப்ளிப் 4 போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்களை ஆகஸ்ட் 10 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்கிறது. இதே சமயத்தில் புது ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுக நிகழ்வு தேதி நெருங்கி வரும் நிலையில், புது ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.
அந்த வகையில், புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்ளை முன்பதிவு செய்வோர் அசத்தல் சலுகை மற்றும் சிறப்பு பலன்களை பெற முடியும். கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 என இரு மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 1,999 ஆகும். முன்பதிவு செய்வோருக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்பட இருக்கிறது.

இரு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவற்றின் வினியோகம் ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கலாம். இந்திய சந்தையில் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போன் பிளாக், கிரீம்/பெய்க் மற்றும் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும்.
கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாக துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பிளாக், லைட் புளூ, போரா பர்பில் மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
- இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ப்ளஸ் ஸ்மார்ட்போன் மிராக்கிள் பிளாக் மற்றும் டிரான்குவில் சீ ப்ளூ ஆகிய நிறங்களில் வருகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6-ஐ இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமானதால் இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இதன் அடுத்த வெர்ஷனான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ப்ளஸ் மாடலை தற்போது இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் ஸ்மார்ட்போன் வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் ஸ்கிரீனில் இரண்டு பிளாஷ்கள் இடம்பெற்றூ உள்ளன. பின்புறம் டூயல் ரியர் கேமரா செட் அப் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி கைரேகை சென்சாரும் பின்புறமே உள்ளது.

டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 6.82 இன்ச் ஹெச்.டி ப்ளஸ் வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்ப்ளே இதில் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரியும் இதில் உள்ளது. ஹீலியோ ஜி25 புராசஸரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 8 எம்.பி டூயல் ரியர் கேமராவும் 5எம்.பி செல்ஃபி கேமராவும் இடம்பெற்று உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் லான்ச் ஆகி உள்ளது. மிராக்கிள் பிளாக் மற்றும் டிரான்குவில் சீ ப்ளூ ஆகிய நிறங்களில் வருகிற இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலை ரூ.7 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்-அப் உடன் வருகிறது.
- பிளாக், ஒயிட், ப்ளூ, ரெட் ஆகிய நான்கு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
அசுஸ் நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்ஷிப் போனை உலக சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி அசுஸ் சென்போன் 9 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 5.9 இன்ச் SAMOLED ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் சைடு மவுண்டட் கைரேகை சென்சாரும் இடம்பெற்று உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்-அப் உடன் வருகிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா ஒயிடு லென்ஸ் உடன் கூடிய செகண்டரி கேமராவும் இதில் உள்ளது. அதுமட்டுமின்றி 12 மெகாபிக்சல் கொண்ட செல்பி கேமராவும் இதில் இடம்பெற்று உள்ளது. புராசஸரை பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று உள்ளது.

அதுமட்டுமின்றி 4,300 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியவை இதில் இடம்பெற்று உள்ளன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கொண்ட அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் பேஸ் மாடலின் விலை ரூ.64 ஆயிரத்து 700 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிளாக், ஒயிட், ப்ளூ, ரெட் ஆகிய நான்கு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
- இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களும், டிசைன் பற்றிய விவரங்களும் தெரியவந்துள்ளன.
- இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்ப்ளே இடம்பெற்று உள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6-ஐ இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமானதால் இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இதன் அடுத்த வெர்ஷனான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ப்ளஸ் மாடலை தற்போது இந்தியாவில் வெளியிட அந்நிறுவனம் தயாராகி உள்ளது.

இதற்கான மைக்ரோசைட்டும் ப்ளிப்கார்ட்டில் நேரலைக்கு வந்துள்ளது. இதன்மூலம், இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும், டிசைன் பற்றிய விவரங்களும் தெரியவந்துள்ளன. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் ஸ்கிரீனில் இரண்டு பிளாஷ்கள் இடம்பெற்றூ உள்ளன.
பின்புறம் டூயல் ரியர் கேமரா செட் அப் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி கைரேகை சென்சாரும் பின்புறமே உள்ளது. டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 6.82 இன்ச் ஹெச்.டி ப்ளஸ் வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்ப்ளே இதில் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரியும் இதில் உள்ளது. புராசஸர் மற்றும் கேமரா விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 29-ந் தேதி இந்தியாவில் லான்ச் ஆக உள்ளது.
- ரியல்மி பட்ஸ் ஏர் 3 நியோவில் 30 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் வழங்கப்பட்டு உள்ளது.
- வெள்ளை மற்றும் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் இந்த இயர்பட்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது.
ரியல்மி நிறுவனம் அதன் பட்ஸ் ஏர் 3 நியோ என்கிற இயர்பட்ஸை இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தியது. அந்த இயர்பட்ஸ் இன்று முதன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரிஜினல் பட்ஸ் ஏர் 3 மாடலை போன்று இந்த புதிய நியோ மாடலும் ஸ்டெம் டிசைனை கொண்டுள்ளது. பட்ஸ் ஏர் 2 நியோவில் உள்ளது போல் இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேசன் வசதி இல்லை.
அதற்கு பதிலாக டால்பி அட்மாஸ் 3டி சவுண்ட் மற்றும் 30 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் வழங்கப்பட்டு உள்ளது. இதன் கடந்த வெர்ஷனான பட்ஸ் ஏர் 2 நியோவில் 28 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. இதில் 10 எம்.எம் டிரைவர்களும் இடம்பெற்று உள்ளன.

இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேசன் இடம்பெறாவிட்டாலும் என்விராண்மெண்ட் நாய்ஸ் கேன்சலேசன் எனப்படும் ENC இடம்பெற்று உள்ளது. டச் கண்ட்ரோல், ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி டைப் சி போர்ட் போன்ற அம்சங்களும் இதில் உள்ளன. வெள்ளை மற்றும் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ள இந்த இயர்பட்ஸின் விலை ரூ.1,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அறிமுக சலுகையுடன் ரூ.1,699க்கு இந்த இயர்பட்ஸ் தற்போது ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
- ரியல்மி வாட்ச் 3 வாட்டர் மற்றும் டஸ்ட் புரூஃபுக்கான IP68 தரச் சான்று பெற்றுள்ளது.
- கிரே மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வரும் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் ஆகி உள்ளது.
ரியல்மி நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. ரியல்மி வாட்ச் 3 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் பெரிய அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டதாகும். இதன் அளவு 1.8 இன்ச் ஆகும். சதுர வடிவிலான டிஸ்ப்ளே உள்ள இந்த ஸ்மார்ட்வாட்சில் கர்வுடு எட்ஜ்களை கொண்டுள்ளன. அதிகபட்சம் 500 நிட்ஸ் பிரைட்னஸும் இதில் வழங்கப்படுகிறது.
இது 67.5 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவை கொண்டுள்ளது. இதற்கு முந்தைய மாடலான ரியல்மி வாட்ச் 2-வை விட இது 35 சதவீதம் அதிகமாகும். இதில் பிரத்யேகமாக 100 வாட்ச் பேஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ரியல்மி லிங்க் ஆப்பை பயன்படுத்தி அதை மாற்றிக்கொள்ளலாம். 14 கிராம் எடை கொண்ட ஸ்கின் ஃபிரெண்ட்லி சிலிகான் ஸ்ட்ராப்பையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது.

இதுதவிர வாட்டர் மற்றும் டஸ்ட் புரூஃபுக்கான IP68 தரச் சான்றும் பெற்றுள்ளது. ப்ளூடூத் காலிங் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்சில் 340 எம்.ஏ.ஹெச் பேட்டரி இடம்பெற்று உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பயன்படுத்திக்கொள்ள முடியுமாம்.
கிரே மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வரும் இந்த ஸ்மார்ட்வாட்சில் விலை ரூ.3 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 2-ந் தேதி விற்பனைக்கு வர உள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுக சலுகையாக ரூ.2 ஆயிரத்து 999-க்கு பெற முடியும். ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.
- ஐடெல் A23s ஸ்மார்ட்போனில் பேஸ் அன்லாக் வசதி மற்றும் 3020 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் வசதி உள்ளது.
- ஸ்கை சியன், ஸ்கை பிளாக் மற்றும் ஓசன் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் வரும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
ஐடெல் நிறுவனம் அதன் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஐடெல் A23s என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் விலை வெறும் ரூ.5 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களுக்கு இந்த போன் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
அம்சங்களை பொறுத்தவரை, 5 இன்ச் ஹெச்.டி ப்ளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் யுனிசாக் SC9832E குவாட்கோர் புராசஸர் இடம்பெற்று உள்ளது. 2ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் ரியர் கேமராவும், VGA ரெசொலியூசன் உடன் கூடிய செல்ஃபி கேமரா உள்ளது.

இதுதவிர பேஸ் அன்லாக் வசதி மற்றும் 3020 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் பின்பகுதியில் கிரேடியண்ட் கிளாஸ் பினிஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஸ்கை சியன், ஸ்கை பிளாக் மற்றும் ஓசன் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. போன் வாங்கிய 100 நாட்களுக்குள் அதன் ஸ்கிரீன் உடைந்துவிட்டால் இலவசமாக ஸ்கிரீன் மாற்றி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வருகிறது.
- முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஏஸ் ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி அந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அறிமுகம் செய்ய உள்ளதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோவில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.7 இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளே இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஸ்னாப்டிராகன் 8 ப்ளஸ் Gen 1 புராசஸரும் இதில் இடம்பெற்று உள்ளதாம்.

ட்ரிபிள் கேமரா செட் அப் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் சோனி IMX766 பிரைமரி கேமராவும், 8 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா ஒயிடு கேமராவும், 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ கேமராவும் பின்புறம் இடம்பெற்று உள்ளது. அதேபோல் முன்பகுதியில் 16 மெகாபிக்சல் கொண்ட செல்பி கேமரா உள்ளது.
4,800 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 150 வாட் ரேப்பிட் சார்ஜிங் திறன் கொண்டதாகும். இந்த ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
- பாஸ்ட்டிராக் ரிஃப்ளக்ஸ் ப்ளே ஸ்மார்ட்வாட்சில் 25க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.
- 7 நாட்கள் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளது.
பாஸ்ட்டிராக் நிறுவனம் ரிஃப்ளக்ஸ் ப்ளே எனும் ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் அமேசான் ப்ரைம் டே சேலில் இந்த ஸ்மார்ட்வாட்சை பாஸ்ட்டிராக் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த வாட்சில் 25க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இதுதவிர 1.3 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவும், அலுமினியத்தால் ஆன வட்ட வடிவ டயலும் இதில் இடம்பெற்று உள்ளன.
இந்த வாட்சில் பல்வேறு கேம்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர பயனர்களின் இதய துடிப்பு, இரத்த அழுத்தம், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை அளவிடும் அம்சமும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சில் விதவிதமான அனிமேஷன் வாட்ச் பேஸ்களும் இடம்பெற்று உள்ளன. தேவைக்கேற்ப அதனை மாற்றி வைத்துக்கொள்ளலாம்.

வாட்சின் மூலமே போனின் கேமரா மற்றும் பாடல்களை கண்ட்ரோல் செய்யும் வசதி இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்டிற்காக IP68 ரேட்டிங் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி 7 நாட்கள் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப்பும் கொண்டுள்ளது.
பிளாக், ப்ளூ, ஆரஞ்ச் மற்றும் பிங்க் நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.7 ஆயிரத்து 995 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் அமேசான் பிரைம் டே சேலில் இந்த ஸ்மார்ட்வாட்சை ரூ.5 ஆயிரத்திற்கு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ரெட்மி K50i ஸ்மார்ட்போன் பேண்டம் ப்ளூ, ஸ்டெல்த் பிளாக் மற்றும் குவிக் சில்வர் ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- 5080 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இடம்பெற்று உள்ளது.
ரெட்மி நிறுவனம் K50i என்கிற அதன் புதிய K சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இன்று முதல் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் தொடங்கி உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 புராசஸர் இடம்பெற்று உள்ளது.
அதுமட்டுமின்றி 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் என டிரிபிள் கேமரா செட் அப் உடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்று உள்ளது. 5080 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இடம்பெற்று உள்ளது.

இதன் மூலம் 15 நிமிடத்தில் 50சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்றும் 46 நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டிஸ்ப்ளே மேட் ஏ+ ரேட்டிங் பெற்ற முதல் எல்.சி.டி மொபைல் இதுவாகும். ரெட்மி K50i ஸ்மார்ட்போன் பேண்டம் ப்ளூ, ஸ்டெல்த் பிளாக் மற்றும் குவிக் சில்வர் ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இதன் 6ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25 ஆயிரத்து 999 எனவும், 8ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல் அமேசான், Mi-ன் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஐசிஐசிஐ பேங்க் கார்ட் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
- கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் சார்கோல் மற்றும் சால்க் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் ஈவண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது தான் இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் ஓ.எல்.இ.டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
அம்சங்களை பொறுத்தவரை இது கூகுள் டென்சர் புராசஸர் இதில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், இதனுடன் 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கான இயங்குதள அப்டேட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேமராவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது. அதன்படி இதன் பின்புறம் 12.2 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா ஒய்டு செகண்ட்ரி கேமராவும், முன்பக்கம் 8 மெகாபிக்சல் கேமராவும் இடம்பெற்று இருக்கிறது. மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4410 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி என எண்ணற்ற அம்சங்கள் இதில் உள்ளன.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் சார்கோல் மற்றும் சால்க் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் செய்யப்படுகிறது.






