search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன்
    X

    அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன்

    • கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் சார்கோல் மற்றும் சால்க் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் ஈவண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது தான் இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் ஓ.எல்.இ.டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

    அம்சங்களை பொறுத்தவரை இது கூகுள் டென்சர் புராசஸர் இதில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், இதனுடன் 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கான இயங்குதள அப்டேட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கேமராவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது. அதன்படி இதன் பின்புறம் 12.2 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா ஒய்டு செகண்ட்ரி கேமராவும், முன்பக்கம் 8 மெகாபிக்சல் கேமராவும் இடம்பெற்று இருக்கிறது. மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4410 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி என எண்ணற்ற அம்சங்கள் இதில் உள்ளன.


    6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் சார்கோல் மற்றும் சால்க் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் செய்யப்படுகிறது.

    Next Story
    ×