search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    அமேசானில் ரூ.2 ஆயிரம் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்தது பாஸ்ட்டிராக் ஸ்மார்ட்வாட்ச்
    X

    அமேசானில் ரூ.2 ஆயிரம் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்தது பாஸ்ட்டிராக் ஸ்மார்ட்வாட்ச்

    • பாஸ்ட்டிராக் ரிஃப்ளக்ஸ் ப்ளே ஸ்மார்ட்வாட்சில் 25க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.
    • 7 நாட்கள் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளது.

    பாஸ்ட்டிராக் நிறுவனம் ரிஃப்ளக்ஸ் ப்ளே எனும் ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் அமேசான் ப்ரைம் டே சேலில் இந்த ஸ்மார்ட்வாட்சை பாஸ்ட்டிராக் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த வாட்சில் 25க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இதுதவிர 1.3 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவும், அலுமினியத்தால் ஆன வட்ட வடிவ டயலும் இதில் இடம்பெற்று உள்ளன.

    இந்த வாட்சில் பல்வேறு கேம்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர பயனர்களின் இதய துடிப்பு, இரத்த அழுத்தம், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை அளவிடும் அம்சமும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சில் விதவிதமான அனிமேஷன் வாட்ச் பேஸ்களும் இடம்பெற்று உள்ளன. தேவைக்கேற்ப அதனை மாற்றி வைத்துக்கொள்ளலாம்.


    வாட்சின் மூலமே போனின் கேமரா மற்றும் பாடல்களை கண்ட்ரோல் செய்யும் வசதி இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்டிற்காக IP68 ரேட்டிங் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி 7 நாட்கள் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப்பும் கொண்டுள்ளது.

    பிளாக், ப்ளூ, ஆரஞ்ச் மற்றும் பிங்க் நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.7 ஆயிரத்து 995 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் அமேசான் பிரைம் டே சேலில் இந்த ஸ்மார்ட்வாட்சை ரூ.5 ஆயிரத்திற்கு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×