search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரூ.6 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது ஐடெல் நிறுவனம்
    X

    ரூ.6 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது ஐடெல் நிறுவனம்

    • ஐடெல் A23s ஸ்மார்ட்போனில் பேஸ் அன்லாக் வசதி மற்றும் 3020 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் வசதி உள்ளது.
    • ஸ்கை சியன், ஸ்கை பிளாக் மற்றும் ஓசன் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் வரும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

    ஐடெல் நிறுவனம் அதன் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஐடெல் A23s என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் விலை வெறும் ரூ.5 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களுக்கு இந்த போன் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    அம்சங்களை பொறுத்தவரை, 5 இன்ச் ஹெச்.டி ப்ளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் யுனிசாக் SC9832E குவாட்கோர் புராசஸர் இடம்பெற்று உள்ளது. 2ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் ரியர் கேமராவும், VGA ரெசொலியூசன் உடன் கூடிய செல்ஃபி கேமரா உள்ளது.


    இதுதவிர பேஸ் அன்லாக் வசதி மற்றும் 3020 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் பின்பகுதியில் கிரேடியண்ட் கிளாஸ் பினிஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

    ஸ்கை சியன், ஸ்கை பிளாக் மற்றும் ஓசன் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. போன் வாங்கிய 100 நாட்களுக்குள் அதன் ஸ்கிரீன் உடைந்துவிட்டால் இலவசமாக ஸ்கிரீன் மாற்றி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×