என் மலர்

  புதிய கேஜெட்டுகள்

  சாம்சங்கின் புது போல்டபில் ஸ்மார்ட்போன்கள் - அதிரடி சலுகைகளுடன் முன்பதிவு துவக்கம்!
  X

  சாம்சங்கின் புது போல்டபில் ஸ்மார்ட்போன்கள் - அதிரடி சலுகைகளுடன் முன்பதிவு துவக்கம்!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாம்சங் நிறுவனம் விரைவில் இரண்டு புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புது சாதனங்கள் வெளியீட்டு தேதியை சாம்சங் ஏற்கனவே அறிவித்து விட்டது.

  சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் Z ப்ளிப் 4 போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்களை ஆகஸ்ட் 10 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்கிறது. இதே சமயத்தில் புது ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுக நிகழ்வு தேதி நெருங்கி வரும் நிலையில், புது ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.

  அந்த வகையில், புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்ளை முன்பதிவு செய்வோர் அசத்தல் சலுகை மற்றும் சிறப்பு பலன்களை பெற முடியும். கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 என இரு மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 1,999 ஆகும். முன்பதிவு செய்வோருக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்பட இருக்கிறது.


  இரு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவற்றின் வினியோகம் ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கலாம். இந்திய சந்தையில் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போன் பிளாக், கிரீம்/பெய்க் மற்றும் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும்.

  கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாக துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பிளாக், லைட் புளூ, போரா பர்பில் மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

  Next Story
  ×