search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    அசத்தல் ஆஃபருடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ரெட்மி K50i ஸ்மார்ட்போன்
    X

    அசத்தல் ஆஃபருடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ரெட்மி K50i ஸ்மார்ட்போன்

    • ரெட்மி K50i ஸ்மார்ட்போன் பேண்டம் ப்ளூ, ஸ்டெல்த் பிளாக் மற்றும் குவிக் சில்வர் ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • 5080 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இடம்பெற்று உள்ளது.

    ரெட்மி நிறுவனம் K50i என்கிற அதன் புதிய K சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இன்று முதல் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் தொடங்கி உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 புராசஸர் இடம்பெற்று உள்ளது.

    அதுமட்டுமின்றி 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் என டிரிபிள் கேமரா செட் அப் உடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்று உள்ளது. 5080 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இடம்பெற்று உள்ளது.


    இதன் மூலம் 15 நிமிடத்தில் 50சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்றும் 46 நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டிஸ்ப்ளே மேட் ஏ+ ரேட்டிங் பெற்ற முதல் எல்.சி.டி மொபைல் இதுவாகும். ரெட்மி K50i ஸ்மார்ட்போன் பேண்டம் ப்ளூ, ஸ்டெல்த் பிளாக் மற்றும் குவிக் சில்வர் ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இதன் 6ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25 ஆயிரத்து 999 எனவும், 8ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல் அமேசான், Mi-ன் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஐசிஐசிஐ பேங்க் கார்ட் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×