என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- விவோ T1x ஸ்மார்ட்போனில் 5,000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்று உள்ளது.
- வருகிற ஜூலை 27-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது.
விவோ நிறுவனம் அதன் T1x ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இதில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.58 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. 90.6 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 680 புராசஸரை கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை டூயல் கேமரா செட் அப் உடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் எல்.இ.டி பிளாஷ் லைட் ஆகியவை பின்பகுதியில் இடம்பெற்றுள்ளன. முன்பகுதியில் வீடியோ கால் மற்றும் செல்பி எடுப்பதற்கு ஏதுவாக 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்று உள்ளது. இதுதவிர 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிராவிட்டு பிளாக் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ ஆகிய இருவித கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
விலையை பொறுத்தவரை விவோ T1x ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.11 ஆயிரத்து 999 எனவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 12 ஆயிரத்து 999 எனவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 14 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 27-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது.
- ஐகூ 10 ப்ரோ மாடலில் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
- இதன்மூலம் ஐகூ 10 ப்ரோ ஸ்மார்ட்போனை 10 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியுமாம்.
ஐகூ நிறுவனம் அதன் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்து உள்ளது. அதன்படி ஐகூ 10 மற்றும் ஐகூ 10 ப்ரோ ஆகிய மாடல்கள் ஐகூ 10 சீரிஸில் இடம்பெற்று உள்ளது. ஐகூ 10-ல் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.78 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் AMOLED டிஸ்ப்ளேவும், ஐகூ 10 ப்ரோவில் 6.78 இன்ச் குவாட் ஹெச்.டி ப்ளஸ் கர்வுடு E5 LTPO AMOLED டிஸ்ப்ளேவும் இடம்பெற்று உள்ளது.
இந்த இரண்டு மாடல்களும் ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 புராசஸரை கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை ஐகூ 9-ல் இருந்த அதே கேமரா செட் அப் ஐகூ 10 மாடலில் இடம்பெற்று உள்ளது. ஆனால் ஐகூ 10 ப்ரோ மாடலில் ஜி.என்.5 சென்சார் உடன் கூடிய 50 மெகாபிக்சல் மெயின் கேமராவும், 50 மெகாபிக்சல் அல்ட்ரா ஒயிடு ஆங்கிள் கேமராவும், 14.6 மெகாபிக்சல் டெலிபோட்டோ கேமராவும் இடம்பெற்று உள்ளது.

10 ப்ரோ மாடலில் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் உலகின் அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட ஸ்மார்ட்போனாக இது விளங்குகிறது. ஐகூ 10 ப்ரோ மாடலில் மட்டுமே 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஐகூ 10 மாடலில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
இதன்மூலம் ஐகூ 10 ப்ரோ ஸ்மார்ட்போனை 10 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்றும் அதேபோல் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஐகூ 10 ஸ்மார்ட்போனை 19 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐகூ 10 மாடலில் 8ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்புப் படி ரூ.43 ஆயிரத்து 825 எனவும், அதன் 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 55 ஆயிரத்து 645 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ஐகூ 10 ப்ரோ மாடலின் 8ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.59 ஆயிரத்து 225 எனவும், 12ஜிபி + 512 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 71 ஆயிரத்து 55 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஒப்போ என்கோ எக்ஸ் 2 வருகிற ஜூலை 25-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
- இந்த இயர்பட்ஸ் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
ஒப்போ நிறுவனம் நேற்று அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அத்துடன் அந்நிறுவனம் அதன் ப்ரீமியம் இயர்பட்ஸையும் லான்ச் செய்து உள்ளது. ஒப்போ என்கோ எக்ஸ் 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ், ஆப்பிள் ஏர்பாட்ஸை போன்ற டிசனை கொண்டுள்ளது. 11 எம்.எம் டைனமிக் டிரைவர் மற்றும் 6 எம்.எம் பிளானர் டயபிராம் டிரைவர் ஆகிய டிரைவர்களை கொண்டுள்ளது.
மேலும் ப்ளூடூத் 5.2, மல்டிபிள் நாய்ஸ் கேன்சலேசன் லெவல், 3 மைக்ரோபோன்கள், டைப் சி யு.எஸ்.பி போர்ட், வயர்லெஸ் சார்ஜிங், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் என எண்ணற்ற அம்சங்களை கொண்டுள்ளது. 40 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் உடன் இந்த இயர்பட்ஸ் வருகிறது.

ஒப்போ என்கோ எக்ஸ் 2 இயர்பட்ஸின் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு கலர் ஆப்ஷன்களில் வருகிறது. வருகிற ஜூலை 25-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த இயர்பட்ஸ் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் ஜூலை 23-ந் தேதி முதல் இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
- இதன் விலை ரூ.9 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டெக்னோ நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மாட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் டெக்னோ ஸ்பார்க் 9 மாடல் ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே அதன் ரேம் தான். அதன்படி இந்தியாவில் முதன்முறையாக 11 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாகி உள்ளது.
இதன் அம்சங்களை பொருத்தவரை 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.6 இன்ச் ஹெச்.டி ப்ளஸ் டிஸ்ப்ளே, பெரிய செவ்வக வடிவிலான கேமரா மாட்யூல், இரண்டு சென்சார் மற்றும் எல்.இ.டி பிளாஷ் லைட் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி மீடியாடெக் ஹீலியோ G37 ஆக்டாகோர் புராசஸரும் இதில் இடம்பெற்று உள்ளது.

128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்சன் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்.ஏ.எச் பேட்டரியும் இடம்பெற்று உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்பினிட்டி பிளாக் மற்றும் ஸ்கை மிரர் ஆகிய கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது. இதன் விலை ரூ.9 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
- டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் இன்பினிட்டி பிளாக் மற்றும் ஸ்கை மிரர் ஆகிய கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது.
- இதன் விலை ரூ.10 ஆயிரத்திற்கு கீழ் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெக்னோ நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மாட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி அந்நிறுவனத்தின் டெக்னோ ஸ்பார்க் 9 மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 18-ந் தேதி லான்ச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே அதன் ரேம் தான். அதன்படி இந்தியாவில் முதன்முறையாக 11 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாக உள்ளது.
இதன் அம்சங்களை பொருத்தவரை 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.6 இன்ச் ஹெச்.டி ப்ளஸ் டிஸ்ப்ளே, பெரிய செவ்வக வடிவிலான கேமரா மாட்யூல், இரண்டு சென்சார் மற்றும் எல்.இ.டி பிளாஷ் லைட் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி மீடியாடெக் ஹீலியோ G37 ஆக்டாகோர் புராசஸரும் இதில் இடம்பெற்று உள்ளது.

128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்சன் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்.ஏ.எச் பேட்டரியும் இடம்பெற்று உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்பினிட்டி பிளாக் மற்றும் ஸ்கை மிரர் ஆகிய கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது. இதன் விலை ரூ.10 ஆயிரத்திற்கு கீழ் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
- வருகிற ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ள லான்ச் ஈவண்ட் மூலம் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
- புராசஸரை பொருத்தவரை ரெனோ 8 மாடல் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 SoC புராசஸரையும், ரெனோ 8 ப்ரோ மாடல் ஸ்நாப்டிராகன் 7 Gen 1 புராசஸரையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்தவித அறிவிப்பும் கடந்த மாதம் வெளியாகவில்லை.
வருகிற ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ள லான்ச் ஈவண்ட் மூலம் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் ரெனோ 8 மாடல் 6.43-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவையும், ரெனோ 8 ப்ரோ மாடல் 6.62 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

அதேபோல் புராசஸரை பொருத்தவரை ரெனோ 8 மாடல் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 SoC புராசஸரையும், ரெனோ 8 ப்ரோ மாடல் ஸ்நாப்டிராகன் 7 Gen 1 புராசஸரையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதர விவரங்கள் அடுத்தடுத்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் ஒப்போ ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரம் லீக் ஆகி உள்ளது.
அதன்படி ரெனோ 8 மாடலின் 8ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.28 ஆயிரத்து 999 எனவும், 8ஜிபி + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.31 ஆயிரத்து 990 எனவும், 12 ஜிபி + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33 ஆயிரத்து 990 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ரெனோ 8 ப்ரோ மாடலின் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.44 ஆயிரத்து 990 ஆக நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- சாம்சங் கேலக்ஸி M13 ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் ப்ளூ, ஆக்வா கிரீன் மற்றும் ஸ்டார்டஸ்ட் பிரவுன் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி M13 4ஜி மற்றும் கேலக்ஸி M13 5ஜி ஆகிய மாடல்களை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. மெக்சிகோவில் கடந்த மே மாதம் லான்ச் செய்யப்பட்ட M13 போன்களை விட இந்த போன் வித்தியாசமான தோற்றத்துடன் வந்துள்ளது. இதில் இன்பினிட்டி வி நாட்ச் டிஸ்ப்ளே இடம்பெற்று உள்ளது.
M13 4ஜி ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வந்துள்ளது. அதேபோல் M13 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வந்துள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் மிட்நைட் ப்ளூ, ஆக்வா கிரீன் மற்றும் ஸ்டார்டஸ்ட் பிரவுன் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

M13 5ஜி ஸ்மார்ட்போனில் ரேம் ப்ளஸ் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் உடன் வந்துள்ளது. டைமென்சிட்டி 700 புராசஸரை கொண்டுள்ளது. அதேபோல் M13 4ஜி ஸ்மார்ட்போன் 4,000 எம்.ஏ.ஹெச் பேட்டரியை கொண்டு உள்ளது.
M13 4ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 11 ஆயிரத்து 999 எனவும், அதன் 6ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.12 ஆயிரத்து 999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் M13 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14 ஆயிரத்து 999 என்றும் அதன் 6ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.15 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த போன் வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
- பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த டிவி பயனுள்ளதாக இருக்கும்.
- இந்த ஸ்மார்ட்டிவி ஜூலை 18-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது அதன் மலிவு விலை ஸ்மார்ட்டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்நிறுவனத்தின் இன்பினிக்ஸ் Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த டிவி பயனுள்ளதாக இருக்கும்.
இதில் யூடியூப், அமேசான் ப்ரைம் வீடியோ, சோனி லிவ், ஈராஸ் நவ், ஜீ5, போன்ற ஓடிடி ஆப்புகளும் இடம்பெற்று உள்ளது. மேலும் இது 20W டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. 32 இன்ச் எல்.இ.டி டிஸ்ப்ளே, குவாட்கோர் புராசஸர், 512எம்.பி ரேம், 4 ஜிபி ஸ்டோரேஜ், லினக்ஸ் இயங்குதளம் என எண்ணற்ற அம்சங்களுடன் கூடிய இந்த ஸ்மார்ட்டிவிக்கு ஒருவருட வாரண்டியும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இனிபினிக்ஸ் நிறுவனத்தின் இந்த Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி வருகிற ஜூலை 18-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீதம் உடனடி டிஸ்கவுண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சியோமி 12 லைட் ஸ்மார்ட்போன் லைட் கிரீன் மற்றும் லைட் பிங்க் ஆகிய இரு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- புதிய சியோமி 12 லைட் 5ஜி மாடல் ஸ்மார்ட்போனின் மொத்த எடை 173 கிராம்கள் ஆகும்.
சியோமி நிறுவனம் அதன் 12 லைட் ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 12 ஸ்மார்ட்போனின் டோன்-டவுன் வெர்ஷனாக இந்த 12 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பெயருக்கு ஏற்றார் போல் சியோமி 12 லைட் மாடலின் அம்சங்களும் மிட் ரேன்ஜ் அளவிலேயே வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய சியோமி 12 லைட் 5ஜி மாடல் ஸ்மார்ட்போனின் மொத்த எடை 173 கிராம்கள் ஆகும். அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 778ஜி பிராசஸர், 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 256ஜிபி மெமரி, 6.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்லிங் ரேட் ஆகியவை இதில் உள்ளது.

சியோமி 12 லைட் ஸ்மார்ட்போன் லைட் கிரீன், லைட் பிளாக் மற்றும் லைட் பிங்க் ஆகிய இரு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம்+ 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை இந்திய மதிப்பில் ரூ. 31 ஆயிரத்து 635 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 35 ஆயிரத்து 600 என்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 39 ஆயிரத்து 565 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- கேமான் 19 நியோ மாடல் டிரீம்லேண்ட் கிரீன், ஐஸ் மிரர் மற்றும் எக்கோ பிளாக் ஆகிய நிறங்களில் வருகிறது.
- அதேபோல் கேமான் 19 மாடல் எக்கோ பிளாக், சீ சால்ட் ஒயிட் மற்றும் ஜியோமெட்ரிக் கிரீன் கலர் ஆகிய நிறங்களில் வருகிறது.
டெக்னோ நிறுவனம் அதன் கேமன் 19 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சீரிஸில் கேமன் 19 மற்றும் கேமன் 19 நியோ ஆகிய இரு மாடல்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதில் 6.8 இன்ச் ஃபுல் ஹெச்டி ப்ளஸ் எல்.இ.டி டிஸ்ப்ளே இடம்பெற்று உள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் மற்றும் ஹீலியோ ஜி85 புராசஸரை கொண்டுள்ளது.
டெக்னோ கேமான் 19 மாடல் ஸ்மாட்போனில் 64 மெகாபிக்சல் ரியர் கேமராவும் மற்றும் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இடம்பெற்று உள்ளது. டெக்னோ கேமான் 19 நியோவில் 48 மெகாபிக்சல் ரியர் கேமராவும், 32 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இடம்பெற்று உள்ளது. இந்த இரண்டு போன்களிலும் 5,000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்று உள்ளது. இது 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

கேமான் 19 நியோ மாடல் டிரீம்லேண்ட் கிரீன், ஐஸ் மிரர் மற்றும் எக்கோ பிளாக் ஆகிய நிறங்களில் வருகிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் எக்கோ பிளாக், சீ சால்ட் ஒயிட் மற்றும் ஜியோமெட்ரிக் கிரீன் கலர் ஆகிய நிறங்களில் வரும் கேமான் 19 மாடலின் விலை ரூ.14 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது.
- கொயட் நைட் பிளாக், டீப் சீ ப்ளூ ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- வருகிற ஜூலை 15-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது.
ஒப்போ நிறுவனம் அதன் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் A97 என்கிற 5ஜி மாடல் ஸ்மார்ட்போனை தான் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது. அதன்படி 48 மெகாபிக்சல் பிரமைரி கேமராவும், 2 மெகாபிக்சல் செகண்டரி கேமராவும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இதுதவிர 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இதில் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் பிளாட் ஃபிரேமை கொண்டுள்ளது. மேலும் இதில் டைப் சி போர்ட், 3.5எம்.எம் ஹெட்ஃபோன் ஜேக், 6.56 இன்ச் ஃபுல் ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்டில் வருகிறது. கொயட் நைட் பிளாக், டீப் சீ ப்ளூ ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 810 புராசஸரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்டின் விலை இந்திய மதிப்பில் ரூ.23 ஆயிரத்து 600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 15-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வருகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு 2022ம் ஆண்டு பிசியான ஆண்டாக இருந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு அந்த நிறுவனம் தொடர்சசியாக போன்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. இதுவரை ஒன்பிளஸ் 10 ப்ரோ, 10R ரேஸிங் எடிசன், நார்டு 2T, நார்டு CE 2 லைட் ஆகிய மாடல்கள் இந்த ஆண்டு இதுவரை வெளியிடப்பட்டு உள்ளன.
அடுத்ததாக அந்நிறுவனம் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற மாடலை வெளியிடும் என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலாக ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு வெளியாகும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்ஷிப் போனாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப் மற்றும் 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த போன் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 4,800mAh பேட்டரி திறனுடன் இந்த போன் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரம் லீக் ஆகி உள்ளது.
அதன்படி ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் மாதம் 1ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரிபிள் கேமரா செட் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






