என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    பட்ஜெட் விலையில் 11 ஜிபி ரேம் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன் - டெக்னோ நிறுவனம் அதிரடி
    X

    பட்ஜெட் விலையில் 11 ஜிபி ரேம் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன் - டெக்னோ நிறுவனம் அதிரடி

    • டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் இன்பினிட்டி பிளாக் மற்றும் ஸ்கை மிரர் ஆகிய கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது.
    • இதன் விலை ரூ.10 ஆயிரத்திற்கு கீழ் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    டெக்னோ நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மாட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி அந்நிறுவனத்தின் டெக்னோ ஸ்பார்க் 9 மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 18-ந் தேதி லான்ச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே அதன் ரேம் தான். அதன்படி இந்தியாவில் முதன்முறையாக 11 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாக உள்ளது.

    இதன் அம்சங்களை பொருத்தவரை 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.6 இன்ச் ஹெச்.டி ப்ளஸ் டிஸ்ப்ளே, பெரிய செவ்வக வடிவிலான கேமரா மாட்யூல், இரண்டு சென்சார் மற்றும் எல்.இ.டி பிளாஷ் லைட் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி மீடியாடெக் ஹீலியோ G37 ஆக்டாகோர் புராசஸரும் இதில் இடம்பெற்று உள்ளது.


    128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்சன் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்.ஏ.எச் பேட்டரியும் இடம்பெற்று உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்பினிட்டி பிளாக் மற்றும் ஸ்கை மிரர் ஆகிய கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது. இதன் விலை ரூ.10 ஆயிரத்திற்கு கீழ் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×