என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT நியோ 3 மாடலில் இருக்கும் அதே அம்சங்கள் தான் இதிலும் உள்ளன.
    • 15 நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.

    ரியல்மி நிறுவனம் அதன் GT நியோ 3 மாடல் ஸ்மார்ட்போனை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில், தற்போது அதன் ஸ்பெஷல் எடிஷனை அந்நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனான இதற்கு ரியல்மி GT நியோ 3 150 வாட் தார்: லவ் மற்றும் தண்டர் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் உடன் தீம் கார்டுகள், வால்பேப்பர், ஸ்டிக்கர்கள், மெடல் மற்றும் சிம் கார்டு டிரே ஆகியவை வழங்கப்படுகின்றன. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT நியோ 3 மாடலில் இருக்கும் அதே அம்சங்கள் தான் இதிலும் உள்ளன.


    அந்த வகையில் 6.7 இன்ச்ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், மீடியாடெக் டைமென்சிட்டி 8100 பிராசஸர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கிறது. கேமராவை பொருத்தவரை 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம்பெற்று உள்ளது.

    இதில் அதிகபட்சமாக 150 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 15 நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம். இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட் நைட்ரோ புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 42 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய லாக்டவுன் மோட் iOS 16 வெர்ஷனில் கிடைக்குமாம்.
    • இந்த லாக்டவுன் மோட் ஆப்பிளின் ஐபோன்கள், ஐபாட்கள் மற்றும் மேக் கணினிகளில் வேலை செய்யும் என கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளான ஸ்மார்ட்போன்கள், ஐபேட்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க லாக்டவுன் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. லாக்டவுன் மோட் என்பது ஒரு புதிய பாதுகாப்பு அடுக்கு தொழில்நுட்பம் ஆகும். ஐபோன் பயனர்களுக்காக இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    லாக்டவுன் மோட் ஆனது அரசியல்வாதிகள், மனித உரிமை வழக்கறிஞர்கள், பிற விஐபிகளுக்கு போனில் புதிய பாதுகாப்பு அடுக்கைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. பெகாசஸ் ஊழல் நடைபெற்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகே ஆப்பிள் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.


    இஸ்ரேலின் NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் ஹேக் செய்யப்பட்டது. இதன்பின் பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் ஆகியோரும் குறிவைக்கப்பட்டனர். இதற்காக ஆப்பிள் நிறுவனத்துக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.

    தற்போது அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய லாக்டவுன் மோட் iOS 16 வெர்ஷனில் கிடைக்குமாம். இந்த லாக்டவுன் மோட் ஆப்பிளின் ஐபோன்கள், ஐபாட்கள் மற்றும் மேக் கணினிகளில் வேலை செய்யும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • கிளாஸ் புளூ, கிளாஸ் பிளாக், கிளாஸ் கிரீன் மற்றும் கிளாஸ் ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 14-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட், லாவா இ ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வர உள்ளது.

    லாவா நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி லாவா பிளேஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன் நான்கு விதமான நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் டிசைன், மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர் ஆகியவற்றை கொண்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், 3ஜிபி விர்ச்சுவல் ரேம், 64ஜிபி மெமரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கேமராவை பொருத்தவரை 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், மேலும் இரு சென்சார்கள், பிரீலோட் செய்யப்பட்ட கேமரா மோட்கள் மற்றும் ஃபில்ட்டர்கள், 8 மெகாபிக்சல் செல்பி கேமரா, ஸ்கிரீன் பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது. 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி இதில் இடம்பெற்றுள்ளது.


    இதன் 3ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வேரியண்ட் மாடலின் விலை ரூ.8 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கிளாஸ் புளூ, கிளாஸ் பிளாக், கிளாஸ் கிரீன் மற்றும் கிளாஸ் ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 14-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட், லாவா இ ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வர உள்ளது.

    • 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கும் என கூறப்படுகிறது.
    • இதன் விலை ரூ.20 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    ரெட்மி நிறுவனம் அதன் K சீரிஸ் ஸ்மார்ட்போனின் புதிய மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ரெட்மி K50i என்கிற மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 20--ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இது கடந்த மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 11T ப்ரோ மாடலின் ரீ பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள போஸ்டரின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.


    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் உடன் வரும் என கூறப்படுகிறது. இது ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 புராசஸரை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    அதுமட்டுமின்றி 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் என டிரிபிள் கேமரா செட் அப் உடன் இந்த ஸ்மார்ட் போன் வர உள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 5080 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.20 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    • ரெட்மி நோட் 11T ப்ரோ மாடலின் ரீ பிராண்டட் வெர்ஷனாக ரெட்மி K50i இருக்கும் என கூறப்படுகிறது.
    • இது ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 புராசஸரை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    ரெட்மி நிறுவனம் அதன் K சீரிஸ் ஸ்மார்ட்போனின் புதிய மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி ரெட்மி K50i என்கிற மாடல் ஸ்மார்ட்போன் தான் விரைவில் வர உள்ளதாம். இது கடந்த மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 11T ப்ரோ மாடலின் ரீ பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

    K சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசரும் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ரெட்மி K இஸ் பேக் என குறிப்பிடப்பட்டு உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் உடன் வரும் என கூறப்படுகிறது.


    இது ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 புராசஸரை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் என டிரிபிள் கேமரா செட் அப் உடன் இந்த ஸ்மார்ட் போன் வர உள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 5080 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கும் என கூறப்படுகிறது.

    • சியோமி 12S ஆனது AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.
    • மேலும் இதில் 5000mAh பேட்டரியும் இடம்பெற்று உள்ளது.

    சியோமி நிறுவனம் தனது அடுத்த 12S சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் போன்களை சீனாவில் வெளியிட்டு உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த புதிய போன்களுக்கு சியோமி 12S, 12S ப்ரோ மற்றும் 12S அல்ட்ரா என பெயரிடப்பட்டு உள்ளது. சியோமி 12S ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வருகிறது. இதில் புதிதாக அறிவிக்கப்பட்ட குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen1 சிப்செட் இடம்பெற்று உள்ளது.

    சியோமி 12S ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் எல்இடி ப்ளாஷ் உடன் கூடிய டிரிபிள் கேமரா செட் அப் அமைந்துள்ளது. சியோமி 12S ஆனது AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. மேலும் இதில் 5000mAh பேட்டரியும் இடம்பெற்று உள்ளது.


    சியோமி 12S ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.47 ஆயிரம் என்றும், 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட் ரூ.50,700 எனவும், 12ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.55,400 என்றும் 12ஜிபி + 512ஜிபி வேரியண்ட் ரூ.61,300 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அதேபோலி சியோமி 12S ப்ரோ மாடலின் 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.55,400 என்றும் 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.58,900 எனவும், 12ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.63,650 என்றும் 12ஜிபி + 512ஜிபி வேரியண்ட் ரூ.69,500 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதை உயர்ரக மாடலான 12S அல்ட்ராவின் 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட் ரூ.70,700 எனவும், 12ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.76,600 என்றும் 12ஜிபி + 512ஜிபி வேரியண்ட் ரூ.82,500 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஆக்சிஜன் பிளே 2.0 மூலம் 230க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களை இந்த ஸ்மார்ட்டிவியில் பார்க்க முடியும்.
    • 43 இன்ச் மாடலை போல் இதிலும் 24W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ ஆகியவை இடம்பெற்று உள்ளன.

    ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 43 இன்ச் Y1S புரோ மாடல் ஸ்மார்ட் டிவியை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது அதன் 50 இன்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த டிவி பேசில் லெஸ் டிசைன் உடன் வருகிறது. இதில் ஹெச்.டி.ஆர் 10 பிளஸ், ஹெச்.டி.ஆர் 10 ஆகியவற்றுடன் HLG பார்மெட்டும் சப்போர்ட் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் MEMC எனும் புதிய தொழில்நுட்பமும் இடம்பெற்று உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 10.0, கூகுள் அசிஸ்டன்ட் ஆகிய அம்சங்களும் இடம்பெற்று உள்ளன. இதில் உள்ள ஸ்மார்ட் மேனேஜர் அம்சம் மூலம் ஒன்பிளஸ் பட்ஸ், ஒன்பிளஸ் வாட்ச், ஒன்பிளஸ் கனெக்ட் 2.0 ஆகியவற்றை இணைக்க முடியும்.


    இதில் உள்ள ஆக்சிஜன் பிளே 2.0 மூலம் 230க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களை பார்க்க முடியும். 43 இன்ச் மாடலை போல் இதிலும் 24W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ ஆகியவை இடம்பெற்று உள்ளன. ஒன்பிளஸ் TV 50 Y1S புரோ ஸ்மார்ட் டிவி அமேசான் மற்றும் ஒன்பிளஸ்ஸின் ஆன்லைன், ஆஃப்லைன் ஸ்டோர்களில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.32 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மற்ற கம்பெனிகளில் 50 இன்ச் ஸ்மார்ட்டிவி விலை ரூ.45 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இனிபினிக்ஸ் நிறுவனத்தின் இந்த Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
    • இது 20W டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது.

    பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது அதன் மலிவு விலை ஸ்மார்ட்டிவியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அந்நிறுவனத்தின் இன்பினிக்ஸ் Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த புதிய ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த டிவி பயனுள்ளதாக இருக்கும்.


    இதில் யூடியூப், அமேசான் ப்ரைம் வீடியோ, சோனி லிவ், ஈராஸ் நவ், ஜீ5, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், போன்ற ஓடிடி ஆப்புகளும் இடம்பெற்று இருக்குமாம். மேலும் இது 20W டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. இனிபினிக்ஸ் நிறுவனத்தின் இந்த Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்‌ஷிப் போனாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
    • 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு 2022ம் ஆண்டு பிசியான ஆண்டாக இருந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு அந்த நிறுவனம் தொடர்சசியாக போன்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. இதுவரை ஒன்பிளஸ் 10 ப்ரோ, 10R ரேஸிங் எடிசன், நார்டு 2T, நார்டு CE 2 லைட் ஆகிய மாடல்கள் இந்த ஆண்டு இதுவரை வெளியிடப்பட்டு உள்ளன.

    அடுத்ததாக அந்நிறுவனம் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற மாடலை வெளியிடும் என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலாக ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு வெளியாகும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்‌ஷிப் போனாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.


    ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப் மற்றும் 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த போன் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 4,800mAh பேட்டரி திறனுடன் இந்த போன் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த போனின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதைப்பார்க்கும் போது இந்த ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் இருப்பதை பார்க்க முடிகிறது. இதுதவிர 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும் கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.

    • ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடல் மீடியாடெக் டைமென்சிட்டி 1300 புராசசரை கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன், 4500 mAh பேட்டரி பேக் அப் உடன் வந்துள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நாட்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகி உள்ளது. ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இன்று (ஜூலை 1) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 5ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

    இதன் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.28 ஆயிரத்து 999 ஆகவும், 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.33 ஆயிரத்து 999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


    ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடலில் ஆக்சிஜன் 12.1 இயங்குதளம், 6.43 இன்ச் புல் ஹெச்.டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 1300 புராசசரை கொண்டுள்ளது. டிரிபிள் கேமரா செட் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன், 4500 mAh பேட்டரி பேக் அப் உடன் வந்துள்ளது. 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

    • நோக்கியா G11 ப்ளஸ் மாடல் லேக் ப்ளூ, சார்க்கோல் கிரே ஆகிய நிறங்களில் வருகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    நோக்கியா நிறுவனம் அதன் புது G சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனத்தின் G11 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் அடுத்த மாடலான G11 ப்ளஸ்-சை விரைவில் அறிமுகம் செய்ய நோக்கியா நிறுவனம் தயாராகி வருகிறது.

    G11 மாடலில் இருந்ததுபோல் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய வி நாட்ச் ஸ்கிரீன் மற்றும் யுனிசாக், T606 SoC புராசஸர் ஆகியவை G11 ப்ளஸ் மாடலிலும் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குகளத்துடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரதான கேமரா, 2MP இரண்டாம் நிலை கேமரா மற்றும் முன்பக்கத்தில் 8MP கேமரா உள்ளது. இது ஒரு நோர்டிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது, இது 3 நாட்கள் வரை தாங்கக்கூடிய திறன் கொண்டவை என கூறப்படுகிறது.

    நோக்கியா G11 ப்ளஸ் மாடல் லேக் ப்ளூ, சார்க்கோல் கிரே ஆகிய நிறங்களில் வருகிறது. இந்த போன் விரைவில் சர்வதேச சந்தையில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதன் விலை விவரம் இதுவரை வெளியாகவில்லை.

    • சியோமி 12S ஸ்மார்ட்போன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.
    • அதேபோல் சியோமியின் 12S ப்ரோ மாடல் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வர உள்ளதாம்.

    சியோமி நிறுவனம் தனது அடுத்த 12S சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் போன்களை வெளியிட தயாராகி உள்ளது. அந்த நிறுவனம் வெளியிட உள்ள புதிய போன்களுக்கு சியோமி 12S, 12S ப்ரோ மற்றும் 12S அல்ட்ரா என பெயரிடப்பட்டு உள்ளது. சியோமி 12S ஸ்மார்ட்போன் 2206123SC என்கிற மாடல் நம்பரை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வருகிறது.

    இதில் புதிதாக அறிவிக்கப்பட்ட குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen1 சிப்செட் கொண்டிருக்கலாம். இது 12 ஜிபி ரேம் உடன் வரும் என கூறப்படுகிறது, சியோமி 12S ஸ்மார்ட்போன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது,


    அதே நேரத்தில் இதன் ப்ரோ மாடல் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சியோமி 12S இன் லீக்கான புகைப்படத்தின் மூலம், இது இதற்கு முன் வெளியிடப்பட்ட சியோமி 12 சீரிஸ் போன்களை போன்றே கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

    எல்இடி ப்ளாஷ் உடன் பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. சியோமி 12S ஆனது AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வர வாய்ப்புள்ளது. சியோமி 12S சீரிஸ் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 4-ந் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    ×