என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- ஒன்பிளஸ் வாட்ச் போன்றே புதிதாக அறிமுகம் ஆக உள்ள நார்டு ஸ்மார்ட்வாட்சும் பிரத்யேக இயங்குதளத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒன்பிளஸின் புது ஸ்மார்ட்வாட்ச் பியூரோ ஆப் இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் (BIS) வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் அதன் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒன்பிளஸின் புது ஸ்மார்ட்வாட்ச் பியூரோ ஆப் இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் (BIS) வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்த ஆண்டு மூன்றாவது காலாண்டு வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
இது ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் மூன்றாவது ஸ்மார்ட்வாட்ச் மாடலாகும். மேலும் நார்டு பிராண்டிங் உடன் அறிமுகம் செய்யப்பட உள்ள முதல் ஸ்மார்ட்வாட்ச் இதுவாகும். ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு ஸ்மார்ட்வாட்ச் 42mm மற்றும் 46mm என இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்சில் 24x7 இதய துடிப்பு மானிட்டர், ஸ்லீப் மாணிட்டர், ஸ்டெப் கவுண்ட்டர், SpO2 மாணிட்டர், பீடோமீட்டர் என ஏராள வசதிகள் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது. இரண்டு விதமான நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கும் என்றும் இதில் வட்ட வடிவ டையல் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் வாட்ச் போன்றே புதிதாக அறிமுகம் ஆக உள்ள நார்டு ஸ்மார்ட்வாட்சும் பிரத்யேக இயங்குதளத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- விவோ V25 ஸ்மார்ட்போனில் 6.62 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது.
- 4500 mAh பேட்டரி. 80W பாஸ்ட் சார்ஜிங் என எண்ணற்ற அம்சங்களை இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
விவோ நிறுவனம் அதன் V25 மாடலை விரைவில் இந்தியாவில் லான்ச் செய்ய உள்ளது. V25 சீரிஸில் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். முதலில் விவோ V25 மாடலை அறிமுகப்படுத்திவிட்டு அதன்பின் ஸ்பெஷன் எடிசன் வேரியண்ட்டான வெண்ணிலா விவோ V25 மற்றும் விவோ V25 ப்ரோ ஆகிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தகவல் படி விவோ நிறுவனம் வருகிற ஆகஸ்ட் மாதம் 17 அல்லது 18 ஆகிய தேதிகளில் இந்தியாவில் லாஞ்ச் ஈவண்ட் ஒன்றை நடத்தி அதில் விவோ V25 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. அதன் இதர மாடல்களான வெண்ணிலா விவோ V25 மற்றும் விவோ V25 ப்ரோ ஆகிய மாடல்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விவோ V25 ஸ்மார்ட்போனில் 6.62 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, 50MP மெயின் கேமரா, 12MP அல்ட்ரா ஒயிடு கேமரா, 2MP போர்ட்ரேட் கேமரா என பின்புறம் டிரிபிள் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 16MP கேமரா, மீடியாடெக் டைமென்சிட்டி 1200 SoC புராசஸர், 4500 mAh பேட்டரி. 80W பாஸ்ட் சார்ஜிங் என எண்ணற்ற அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
- கிரே மற்றும் ஆரஞ்சு ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
ஹாட்வேவ் நிறுவனத்தின் W10 ரக்கட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது ராணுவ தரத்தால் ஆன டியுரபிலிட்டி மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்றால் அது அதில் உள்ள 15,000mAh பேட்டரி தான். இதனால் இந்த W10 ரக்கட் ஸ்மார்ட்போன் 1200 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. இதுதவிர இதில் 6.53 இன்ச் HD+ டிஸ்ப்ளே, குவாட் கோர் பிராசஸர், வாட்டர் டிராப் நாட்ச் போன்ற அம்சங்களும் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் பேஸ் அன்லாக் வசதியும் உள்ளது. கேமராவை பொருத்தவரை டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது. அதன்படி 13MP பிரைமரி கேமரா லென்ஸ் மற்றும் 5MP செல்பி கேமரா யூனிட் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹாட்வேவ் W10 ரக்கட் ஸ்மார்ட்போன் இன்று (ஜூன் 27) முதல் அலி எக்ஸ்பிரஸ் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அறிமுக விலை என்பதால் தற்போது கம்மி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பின் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 11 ஆயிரமாக மாறி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரே மற்றும் ஆரஞ்சு ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
- சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 புராசசர் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.
- இந்த போன் முதலில் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சியோமி தனது அடுத்த ஸ்மார்ட்போனை வெளியிட தயாராகி வருகிறது. சியோமி 12 அல்ட்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த மாடலின் வெளியீட்டு விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த போன் முதலில் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.
வருகிற ஜூலை மாதம் 5-ந் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 புராசசர் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இது 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உடன் வரும் எனவும் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கும் என தெரிகிறது.

இதன் பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி அம்சங்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பின்னரே உலக சந்தைகளில் விற்பனைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. வருகிற ஜூன் 28-ந் தேதி இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் நைட் பிளாக், நெபுலா கிரீன், மூன்லைட் சில்வர் என 3 நிறங்களில் கிடைக்கிறது.
- வருகிற ஜூன் 27-ந் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்க உள்ளது.
போக்கோ நிறுவனம் தனது அடுத்த F சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. போக்கோ F4 எனப்படும் இந்த மாடல் நேற்று நடைபெற்ற லான்ச் ஈவண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு அம்சங்களுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மற்றும் AMOLED டிஸ்ப்ளே உடன் அறிமுகமாகி உள்ளது.
கேமராவை பொருத்தவரை போக்கோ F4 மாடல் 64MP டிரிபிள் கேமராவுடன் வந்துள்ளது. மேலும் இது 4,520mAh பேட்டரி மற்றும் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகி உள்ளது. டைப் சி சார்ஜிங் போர்ட், ஆண்ட்ராய்டு 12, 6.67 இன்ச் டிஸ்பிளே என பல்வேறு சிறப்பம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது.

விலையை பொருத்தவரை போக்கோ F4 மாடலின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.27,999 ஆகவும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.29,999 ஆகவும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.33,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயனர்களாக இருந்தால் அவர்களுக்கு அறிமுக ஆஃபராக ரூ.1,000 இன்ஸ்டண்ட் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.3,000 சிறப்பு ஆஃபர் என மொத்த ரூ.4,000 ஆஃபர் உடன் பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் நைட் பிளாக், நெபுலா கிரீன், மூன்லைட் சில்வர் என 3 நிறங்களில் வருகிற ஜூன் 27-ந் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
- சாம்சங் எக்சினாஸ் 850 புராசசருடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது.
- 15W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது.
சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. சாம்சங் கேலக்ஸி F13 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. டிசைனைப் பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி M13 மாடலைப் போன்றே தற்போது வெளியாக உள்ள F13 மாடலும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிங்க், புளூ, கிரீன்ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி F13 முழு ஹெச்டி + எல்சிடி பேனலுடன் கூடிய 6.6-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது 15W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. கேமராவை பொருத்தவரை பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பும், முன்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் செல்ஃபி கேமராவும் உள்ளது.

சாம்சங் எக்சினாஸ் 850 புராசசருடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்ஃபால் புளூ, நைட்ஸ்கை கிரீன், சன்ரைஸ் காப்பர் பெயிண்ட் ஜாப்ஸ் ஆகிய நிறங்களில் வருகிறது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் 64ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.11,999 ஆகவும், 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.12,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வருகிற ஜூன் 29-ந் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் வாயிலாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணிநேரம் தாங்கும் பேட்டரி பேக் அப் உடன் இந்த ஸ்மார்ட்கிளாஸ் வருகிறது.
- பவர் லென்ஸ்களையும் பயன்படுத்த இந்த ஸ்மார்ட்கிளாஸ் அனுமதிக்கிறது.
இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் நாய்ஸ், தற்போது தங்கள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்கிளாஸை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்கிளாஸ் தனித்துவமானதாகவும், ஃபேஷன் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னோக்கிய அனுபவத்தை வழங்கும் நோக்கத்தோடும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
நாய்ஸ் i1 ஸ்மார்ட்கிளாஸ் UVA/B 99% பாதுகாப்பு மற்றும் நீல ஒளி வடிகட்டுதலுடன் கூடிய டிரான்ஸ்பரண்ட் லென்ஸ்களை வழங்கும் சாதாரண கண்ணாடி போல் தெரிகிறது. மேலும் பவர் லென்ஸ்களையும் பயன்படுத்த அனுமதிக்கிறது. i1 ஆனது புரட்சிகரமான வழிகாட்டுதல் கொண்ட ஆடியோ வடிவமைப்புடன் வருகிறது.

இது 16.2mm டிரைவர்கள், MEMS மைக்ரோஃபோன்கள் மற்றும் மல்டி-ஃபங்க்ஸ்னல் டச் கண்ட்ரோல்களைக் கொண்டுள்ளது. மேலும் இது உங்கள் செல்போன் அழைப்புகளை நிர்வகிக்கவும், பாடல்களைக் கேட்கவும், ஒலியளவைக் கட்டுப்படுத்தவும், வாய்ஸ் அசிஸ்டண்ட்களை ஹேண்ட்ஸ்-ஃப்ரீ முறையில் அணுகவும் உதவுகிறது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணிநேரம் தாங்கும் பேட்டரி பேக் அப் உடன் இந்த ஸ்மார்ட்கிளாஸ் வருகிறது. கருப்பு நிறத்தில் வரும் இந்த ஸ்மார்ட்கிளாஸ் வட்டம் மற்றும் சதுரம் ஆகிய இரு வடிவிலான மாடல்களை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.5,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஐகூ 10 ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
- ஐகூ 10 ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.
ஐகூ நிறுவனம் அதன் 10 சீரிஸ் ஸ்மார்டோனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கனவே ஐகூவின் 10 ப்ரோ மாடலின் விவரங்கள் லீக்கான நிலையில், தற்போது ஐகூ 10 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கசிந்துள்ளன. அதன்படி 6.78-இன்ச் OLED பேனல், 120Hz புதுப்பிப்பு வீதம், முழு-ஹெச்டி பிளஸ் ரெசொலியூசன் மற்றும் DC டிம்மிங் ஆதரவு உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குவால்காம் SM8475 சிப்செட் அதாவது ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 சிப் மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐகூ 10 புராசசர் உடன் 12GB ரேம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐகூ 10 ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இதில் 1/1.5-இன்ச் அளவுள்ள 50MP பின்புற கேமரா உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர இந்த ஸ்மார்ட்போனில் உள்ள பிற அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஐகூ 10 ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதன் வெளியீட்டுத் தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஐகூ நிறுவனம் தனது அடுத்த 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
- ஐகூவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என கூறப்படுகிறது.
ஐகூ நிறுவனம் இந்தியாவில் அதன் 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்து இருந்தது. அதன்படி 9 சீரிஸில் இதுவரை ஐகூ 9, ஐகூ 9 ப்ரோ, ஐகூ 9 SE ஆகிய மாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்நிலையில், அந்நிறுவனம் தனது அடுத்த 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி ஐகூ 9T என பெயரிடப்பட்டுள்ள அந்த புது மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 SoC புராசசரை கொண்டிருக்கும் என தெரிகிறது. அதுமட்டுமின்றி 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய AMOLED டிஸ்ப்ளேவும் இதில் இடம்பெற்றுள்ளது.

ஐகூவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என கூறப்படுகிறது. இதன் அறிமுக தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த இதர அம்சங்கள் விரைவில் தெரியவரும். இதன் விலை பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
- டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் ஃபுல் ஹெச்டி + எல்சிடி டிஸ்ப்ளே உடன் வந்துள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது.
டெக்னோ நிறுவனம் சமீபகாலமாக நல்ல தரமான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமாகி உள்ளது. டெக்னோ போவா 3 என பெயரிடப்பட்டுள்ள அந்த ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.
இந்த போனின் சிறப்பம்சமே அதன் பேட்டரி தான். இது 7,000 mAh பேட்டரியுடன் வருவதால் சார்ஜ் பற்றி பயனர்கள் கவலையே பட வேண்டாம். ஏற்கனவே பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று தான் அறிமுகமாகி உள்ளது. வருகிற ஜூன் 27-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் ஃபுல் ஹெச்டி + எல்சிடி டிஸ்ப்ளே உடன் வந்துள்ளது. இதில் மீடியாடெக் ஜி88 சிப்செட் இடம்பெற்றுள்ளது. இந்த சிப்செட் கேமிங் பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 11 சார்ந்த HiOS இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. 6ஜிபி ரேம் 125ஜிபி இண்டர்னல் மெமரி உடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது. அதில் ஒன்று 50 எம்பி பிரைமரி கேமரா மற்ற இரண்டும் 2 எம்பி ஆக்ஸிலரி கேமரா ஆகும். இதுதவிர முன்பக்கம் 8 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் புளூ, டெக் சில்வர், எக்கோ பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 21,000 mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது ஸ்மார்ட்போன். அந்த ஸ்மார்ட்போனில் சார்ஜ் இல்லையென்றால் பித்து பிடித்தார்போல் சுற்றுபவர்கள் ஏராளம். அந்த அளவுக்கு அதில் தீவிரமாக உள்ளனர். குறிப்பாக இளம் தலைமுறையினர் ஸ்மார்ட்போன் இல்லையென்றால் அவ்வளவுதான் என சொல்லும் அளவுக்கு அதன் மீது அதீத மோகம் கொண்டுள்ளனர்.
ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது சார்ஜ் செய்யும் நிலைமை தான் பெரும்பாலும் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒருவாரம் வரை தாங்கும் பேட்டரி பேக் அப் உடன் ஒரு ஸ்மார்ட்போன் கிடைத்தால் அது அதிர்ஷ்டம் தானே.

ஆம், அப்படி ஒரு ஸ்மார்ட்போன் தான் விரைவில் அறிமுகமாக உள்ளது. Oukitel WP19 என்கிற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 21,000 mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாமாம். தொடர்ந்து பயன்படுத்தினால் 4 நாட்கள் வரை பேட்டரி தாங்கும் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. அதுமட்டுமின்றி 6.78-இன்ச் FHD+ டிஸ்ப்ளே மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் டெம்பர்ட் கிளாஸ் பாதுகாப்புடன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி G95 SoC புராசசர் உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் அம்சமும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,071 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது AliExpress தளத்தின் வாயிலாக வருகிற ஜூன் 27-ந் தேதி முதல் உலக சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் வர உள்ளது.
- டிஸ்ப்ளேவை பொருத்தவரை 360 x 360 பிக்சல்களுடன் கூடிய 1.32 இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது.
ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்வாட்ச்சுக்கு ரியல்மி டெக்லைஃப் வாட்ச் R100 என பெயரிடப்பட்டு உள்ளது. இது புளூடூத் காலிங் வசதியுடன் வருகிறது. மேலும் இதில் மிகப்பெரிய பேட்டரி பேக் அப் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் வர உள்ளது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை 360 x 360 பிக்சல்களுடன் கூடிய 1.32 இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது. இதில் இரண்டு ஹார்டுவேர் பட்டனும் இடம்பெற்றுள்ளது. ஒன்று UI நேவிகேஷன் மற்றொன்றும் வேகமாக ஸ்போர்ட்ஸ் மோடுக்கு மாற்றவும் உதவும்.

இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்வாட்சில் இதய துடிப்பை கண்காணிக்கும் சென்சார், ஸ்லீப் டிராக்கர் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இது iOS மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் இரண்டிற்கும் இணக்கமானது. மேலும் புளூடூத் 5.2 இணைப்பு வழியாக ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கப்படும் வசதியும் இதில் உள்ளது.
இது வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் அலெக்ஸா சபோர்ட் உடன் வருகிறது. மேலும் இதில் திசைகாட்டி, காலண்டர், அலாரம், கடிகாரம் மற்றும் ஸ்பீக்கர் & மைக்ரோஃபோன் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இது ஒரு வருட வாரண்டி உடன் வருகிறது. இதன் விலை ரூ.6 ஆயிரத்திற்கு கீழ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிற ஜூன் 23-ந் தேதி லான்ச் ஆக உள்ளது.






