என் மலர்

  புதிய கேஜெட்டுகள்

  கம்மி விலையில் 6,000 mAh பேட்டரி உடன் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்
  X

  கம்மி விலையில் 6,000 mAh பேட்டரி உடன் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாம்சங் எக்சினாஸ் 850 புராசசருடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது.
  • 15W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது.

  சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. சாம்சங் கேலக்ஸி F13 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. டிசைனைப் பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி M13 மாடலைப் போன்றே தற்போது வெளியாக உள்ள F13 மாடலும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிங்க், புளூ, கிரீன்ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

  சாம்சங் கேலக்ஸி F13 முழு ஹெச்டி + எல்சிடி பேனலுடன் கூடிய 6.6-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது 15W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. கேமராவை பொருத்தவரை பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பும், முன்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் செல்ஃபி கேமராவும் உள்ளது.


  சாம்சங் எக்சினாஸ் 850 புராசசருடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்ஃபால் புளூ, நைட்ஸ்கை கிரீன், சன்ரைஸ் காப்பர் பெயிண்ட் ஜாப்ஸ் ஆகிய நிறங்களில் வருகிறது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் 64ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.11,999 ஆகவும், 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.12,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

  வருகிற ஜூன் 29-ந் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் வாயிலாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

  Next Story
  ×