என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- இந்த ஸ்மார்ட்வாட்ச் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP67 மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது.
- எஷென் கிரீன், கிளாசிக் பிளாக், கூல் புளூ ஆகிய கலர் வேரியண்டில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கும்.
போட் நிறுவனம் கடந்தாண்டு Xtend மாடல் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில், தற்போது அதன் அடுத்த வெர்ஷனான Xtend ஸ்போர்ட் என்கிற மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. 700க்கும் மேற்பட்ட ஆக்டிவ் மோடுகளை கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்வாட்ச் இதுதான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உடல் வலிமை மற்றும் இருதய செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட டான்ஸ், கிரிக்கெட், பேலெட், ரன்னிங், பாக்ஸிங் போன்றவற்றை கண்காணிக்கும் பிரத்யேக அம்சமும் இதில் உள்ளது. Xtend Sport ஆனது சமையல், ஸ்கேட்போர்டிங், தியானம் போன்ற குறைந்த மற்றும் மிதமான தீவிரம் கொண்ட செயல்பாடுகளை கண்காணிக்கும் திறன் கொண்டது என்று போட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் 24-மணிநேர இதய துடிப்பு சென்சார், SpO2 மானிட்டர் மற்றும் நிகழ்நேரத்தில் உங்கள் உடற்பயிற்சி நிலைகளை கண்காணிக்கும் பெடோமீட்டர் உள்ளது. இது 1.69 இன்ச் எல்சிடி 2.5டி கர்வுடு டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. நேரலை கிரிக்கெட் ஸ்கோர்கள், போன் அழைப்புகள், குறுஞ்செய்தி மற்றும் நோட்டிபிகேஷன் உள்ளிட்டவையும் இதில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP67 மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. இது 200mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் தாங்கும் அளவு பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. மேலும் இது 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எஷென் கிரீன், கிளாசிக் பிளாக், கூல் புளூ ஆகிய கலர் வேரியண்டில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.2,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இன்று முதல் அமேசான் மற்றும் போட் லைஃப்ஸ்டைல் ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- புது கண்ட்ரோலர் PS5 ஸ்டைலில் இருந்தாலும் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- PS5 ப்ரோ கண்ட்ரோலர் 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனி பிளே ஸ்டேஷன் 5-ன் ப்ரோ (PS5 Pro) வெர்ஷன் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி PS5-வை விட அதன் ப்ரோ வெர்ஷன் கூடுதல் அம்சங்களுடன் தயாராகி வருகிறதாம். சோனி நிறுவனம் புதிய கண்ட்ரோலர் ஒன்றையும் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள டூயல் சென்ஸ் கண்ட்ரோலரை விட இந்த புதிய கண்ட்ரோலர் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய PS5 கண்ட்ரோலர் ஹண்ட் என்கிற புனைப்பெயரை கொண்டுள்ளது. புது கண்ட்ரோலர் PS5 ஸ்டைலில் இருந்தாலும் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டிக் டிரிஃப்டை எதிர்கொள்ளும்போது இந்த கண்ட்ரோலர், அனலாக் ஸ்டிக் மற்றும் அதன் பாகங்களை அகற்ற பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள மற்றொரு கூடுதல் அம்சம் டிரிகர் ஸ்டாப், இது கண்ட்ரோலரின் பேக் பேனலில் உள்ள ஃபிளாப்பி பட்டனுடன் வருகிறது. கண்ட்ரோலரை பிடிக்க உதவும் கிரிப்களை மாற்றிக்கொள்ளும் அம்சமும் இதில் உள்ளது. பல்வேறு சாஃப்ட்வேர் அப்டேட்டுகளையும் இந்த கண்ட்ரோலர் சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது. PS5 ப்ரோ கண்ட்ரோலர் 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- A13 பயோனிக் சிப்பை விட A14 சிப் 30 சதவீதம் கூடுதலாக செயல்திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
- 2022 ஐபேடு, லைட்னிங் போர்ட்டுக்குப் பதிலாக யுஎஸ்பி டைப் சி போர்ட்டைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிளின் எண்ட்ரி லெவல் ஐபேடுகள் அந்நிறுவனத்தின் மிகவும் பிரபலமான டேப்லெட் ஆகும். புதிய மலிவு விலை ஐபேடுகள் A13 பயோனிக் சிப், டீசண்டான முன்பக்க கேமரா மற்றும் பலவற்றுடன் வருகின்றன. ஆனால் அதன் அடுத்த தலைமுறை ஐபேடுகள் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என கூறப்படுகின்றன. ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் தற்போது குறைந்த விலை நுழைவு-நிலை ஐபேடுகளை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் அதன் எண்ட்ரி லெவல் ஐபேடுக்கு பல மேம்படுத்தல்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஐபேடு சீரிஸ்களை விட அதிக வேகத்தைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. J272 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட 2022 ஐபேடு, லைட்னிங் போர்ட்டுக்குப் பதிலாக யுஎஸ்பி டைப் சி போர்ட்டைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

புதிய எண்ட்ரி லெவல் ஐபாட், ஐபாட் ஏர் போன்ற அதே தெளிவுத்திறனுடன் கூடிய ரெடினா டிஸ்ப்ளே கொண்டிருக்கும். ஆனால் இது தற்போதைய மாடலின் 10.2-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைவிட 10.5-இன்ச் அல்லது 10.9-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போதைய ஐபேட் மாடல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் A13 பயோனிக் சிப்பை விட A14 சிப் 30 சதவீதம் கூடுதலாக செயல்திறன் கொண்டிருக்குமாம். செல்லுலார் மாடல்களுக்கு 5ஜி நெட்வொர்க் திறன்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சியோமி 12S ஸ்மார்ட்போன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- எல்இடி ப்ளாஷ் உடன் பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு இதில் உள்ளது.
சியோமி நிறுவனம் தனது அடுத்த 12 சீரிஸ் ஃபிளாக்ஷிப் போன்களை வெளியிட தயாராகி உள்ளது. அந்த நிறுவனம் வெளியிட உள்ள புதிய போன்களுக்கு சியோமி 12S மற்றும் 12S ப்ரோ என பெயரிடப்பட்டு உள்ளது. சியோமி 12S ஸ்மார்ட்போன் 2206123SC என்கிற மாடல் நம்பரை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வருகிறது.
2.02 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் நான்கு கோர்கள் மற்றும் 2.75 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் மூன்று கோர்கள் கொண்ட ஆக்டா கோர் சிப்செட் மூலம் இந்த ஃபோன் இயக்கப்படுகிறது. இதில் புதிதாக அறிவிக்கப்பட்ட குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen1 சிப்செட் கொண்டிருக்கலாம். இது 12 ஜிபி ரேம் உடன் வரும் என கூறப்படுகிறது,

சியோமி 12S ஸ்மார்ட்போன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இதன் ப்ரோ மாடல் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சியோமி 12S இன் லீக்கான புகைப்படத்தின் மூலம், இது இதற்கு முன் வெளியிடப்பட்ட சியோமி 12 சீரிஸ் போன்களை போன்றே கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
எல்இடி ப்ளாஷ் உடன் பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. இது சில்வர் நிறத்தை கொண்டிருக்கிறது. ஆனால் வெளியாகும் போது பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி 12S ஆனது AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வர வாய்ப்புள்ளது.
- நத்திங் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வாயிலாக விற்பனைக்கு வர உள்ளது.
- நத்திங் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நத்திங் நிறுவனத்தின் தலைவரான கார்ல் பெய், கடந்த வாரம் இந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான நத்திங் போன் (1) குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்திருந்தார். தற்போது அந்த போன் குறித்த புதிய தகவல் ஒன்று லீக் ஆகி உள்ளது.
அதன்படி நத்திங் போன் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை மேற்கொண்டு வரும் இந்நிறுவனங்களில் எதனுடன் நத்திங் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

உள்நாட்டிலேயே தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதனால், இந்திய மக்களுக்கு தகுந்த விலையில் இந்த நத்திங் போன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வாயிலாக விற்பனைக்கு வர உள்ளது. நத்திங் போனின் பின்பக்கம் ஐபோன் 13 மாடலின் சாயலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கவர் டிஸ்ப்ளே தவிர இரட்டை கேமரா அமைப்பு உள்ளது.
- கேலக்ஸி Z Flip 4 நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி Z Flip 4 ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிறுவனம் அதனுடன் கேலக்ஸி Z Fold 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 தொடர்களையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியாகி உள்ள கேலக்ஸி Z Flip 4 ஹேண்ட்ஸ்-ஆன் படங்களின் படி, அதன் ஒட்டுமொத்த தோற்றம் கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி Z Flip 3ஐப் போலவே இருக்கிறது. முன்பக்கத்தில் இருந்து தொடங்கி, Z Flip 4 சற்று மெல்லிய பெசல்களை வழங்குகிறது. இது மையமாக நிலைநிறுத்தப்பட்ட பஞ்ச்-ஹோல் கொண்ட மடிக்கக்கூடிய திரையை தொடர்ந்து கொண்டுள்ளது. கேலக்ஸி Z Flip 4 இன் டிஸ்ப்ளே அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது ஆழமற்ற மடிப்பைக் கொண்டுள்ளது என்பது தெரிகிறது.
எனவே இது முந்தைய மாடலை விட இலகுவாக இருக்கும் என்று தோன்றுகிறது. இருப்பினும், சாதனம் மூடப்பட்டிருக்கும் போது ஒரு புலப்படும் இடைவெளி உள்ளது. கவர் டிஸ்ப்ளே ஃபிளிப் 3-ஐ விட சற்று பெரியதாக தோன்றுகிறது.

Photo Courtesy: TechtalkTV
கேலக்ஸி Z Flip 4 இரட்டை-தொனி வடிவமைப்பைத் தொடர்ந்து கொண்டுள்ளது. கவர் டிஸ்ப்ளே தவிர இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. Z Flip 4 நீண்ட பேட்டரி ஆயுளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
கேலக்ஸி Z Flip 4 கேலக்ஸி S22 போன்ற 3,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 25W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டிருக்கும். இது வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கலாம். 6.7 இன்ச் AMOLED FHD+ 120Hz மடிக்கக்கூடிய திரை, ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜெனரல் 1, 12GB வரை ரேம், 512GB இண்டர்னல் மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 12MP கேமரா என முந்தைய தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இத்துடன் 12MP (அல்ட்ராவைடு) இரட்டை கேமரா அமைப்பு, மற்றும் 10MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கிராஃபைட், போரா புளூ, பின்க் கோல்டு மற்றும் புளூ போன்ற வண்ணங்களில் வருகிறது.
- ஆப்பிளின் ஏர்பாட்ஸ் புரோ வெர்ஷனுக்கு போட்டியாக சாம்சங் நிறுவனம் இந்த கேலக்ஸி பட்ஸ் புரோ 2 மாடலை களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- சமீபத்திய தகவல் படி இந்த இயர்பட்ஸ் சாம்சங் ஈவண்டில் வெளியிடப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் 2 இயர்பட்ஸ் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் புரோ வெர்ஷன் இந்த வருடம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் அந்நிறுவனத்தின் வருடாந்திர ஈவண்ட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்திய தகவல் படி இந்த இயர்பட்ஸ் அந்த ஈவண்டில் வெளியிடப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
அந்த ஈவண்டில் சாம்சங் கேலக்ஸி Fold 4, கேலக்ஸி Z Flip 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ஆகியவை மட்டுமே அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம். ஆப்பிளின் ஏர்பாட்ஸ் புரோ வெர்ஷனுக்கு போட்டியாக சாம்சங் நிறுவனம் இந்த கேலக்ஸி பட்ஸ் புரோ 2 மாடலை களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. கேலக்ஸி பட்ஸ் புரோ 2 மாடலின் சிறப்பம்சங்கள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி பட்ஸ் 2 மாடலில் புளூடூத் 5.2, மூன்று மைக்ரோபோன்கள், நாய்ஸ் கேன்சலேசன் வசதி, டச் சென்சார், வாய்ஸ் பிக் அப் யூனிட் என பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தன. இதேபோல் விரைவில் அறிமுகமாக உள்ள கேலக்ஸி பட்ஸ் புரோ 2 மாடலும் என்னற்ற அம்சங்களுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்ச் 7 நாட்கள் பேட்டரி பேக் அப் உடன் வருகிறது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் கிரீன், பிளாக், கிரே, பிங்க், புளூ உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.
ஆடியோ சாதனங்கள் மற்றும் வாட்ச் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் நாய்ஸ், தற்போது தனது புது மாடல் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. கலர்ஃபிட் பல்ஸ் Buzz எனப்படும் அந்த புது ஸ்மார்ட்வாட்ச் ஆனது புளுடூத் காலிங் உள்பட பல்வேறு அம்சங்களுடன் வருகிறது.
1.69 இன்ச் TFT LCD தொடு திரை உடன் கூடிய இந்த ஸ்மார்ட் வாட்ச் ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங், சைக்கிளிங், ஃபிட்னஸ் உள்ளிட்டவற்றை டிராக் செய்ய 60க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளை கொண்டுள்ளது. இதயத் துடிப்பு சீராக உள்ளதா என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வசதியும் இதில் உள்ளது.

இதுதவிர ஸ்லீப் மானிட்டரிங், வானிலை நிலவரம் உள்பட எண்ணற்ற அம்சங்களை கொண்டுள்ளது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்ச் 7 நாட்கள் பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. கிரீன், பிளாக், கிரே, பிங்க், புளூ உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விலை ரூ.3,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அறிமுக ஆஃபரில் ரூ.2,499க்கு கிடைக்கிறது.
- நத்திங் நிறுவனம் வெளியிட உள்ள அதன் முதல் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கும் என கூறப்படுகிறது.
- நத்திங் போன் இந்தியாவில் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நத்திங் போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அறிமுக நிகழ்வு வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி இரவு 8:30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாம் முன்கூட்டியே கூறியபடி இந்த போன் டிரான்ஸ்பரண்ட் டிசைனில் வர உள்ளது. தற்போது அதன் அம்சங்களும் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதனை பற்றி தற்போது பார்க்கலாம்.
நத்திங் நிறுவனம் வெளியிட உள்ள அதன் முதல் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங், ஸ்நாப்டிராகன் சிப்செட் மற்றும் நத்திங் இயங்குதளம் ஆகியவற்றை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த போன் இந்தியாவில் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 6.55 இன்ச் புல் HD + OLED டிஸ்பிளேயை கொண்டிருக்குமாம்.

குவால்காம் ஸ்நாப்டிராகன் 7 Gen1 சிப்செட்டுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் 128ஜிபி இண்டர்னல் மெமரி உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 4,500 அல்லது 5,000 mAh பேட்டரியும், வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர கேமரா பற்றிய தகவல் ரகசியமாகவே உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி, LTE, வைஃபை 6, புளூடூத் 5.2, GPS, டைப் C போர்ட் உள்ளிட்டவை அதில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- ரியல்மி GT நியோ 3T மாடல் பிளாஸ் யெல்லோ, ஒயிட் மற்றும் ஷேடோ பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
- 80W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. அதன்மூலம் 36 நிமிடத்தில் 100 சதவீத சார்ஜை பெற முடியும்.
ரியல்மி நிறுவனம் அதன் GT நியோ சீரீஸின் புது மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி Q5 புரோ மாடலைத் தான் தற்போது GT நியோ 3T என்கிற பெயரில் ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இது 6.62இன்ச் ஃபுல் HD + AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது. மேலும் ஸ்னாப்டிராகன் 870 SoC புராசசர், 8ஜிபி ரேம் உடன் கிடைக்கிறது. இன் டிஸ்பிளே கைரேகை ஸ்கேனருடன் கூடிய இந்த போன், 5000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. 80W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. அதன்மூலம் 36 நிமிடத்தில் 100 சதவீத சார்ஜை பெற முடியும்.

ரியல்மி GT நியோ 3T மாடல் பிளாஸ் யெல்லோ, ஒயிட் மற்றும் ஷேடோ பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி இண்டர்னல் மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.36 ஆயிரத்து 520 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி இண்டர்னல் மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.39 ஆயிரத்து 625-க்கு கிடைக்கிறது. இந்த வாரத்தில் இது விற்பனைக்கு வர உள்ளது.
ரியல்மி GT நியோ 3T மாடலில் உள்ள அம்சங்கள்
- 6.62-இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) முழு HD+ AMOLED டிஸ்ப்ளே,
- NT கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 870
- ரியல்மி UI 3.0 உடன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
- இரட்டை சிம் (நானோ + நானோ)
- 64MP பின்பக்க கேமரா, LED ஃபிளாஷ், 8MP 119° அல்ட்ரா வைட் லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா
- 16MP முன்பக்க கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- USB டைப்-C ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்
- எடை: 194.5 கிராம்
- 5000mAh பேட்டரி
- 80W வேகமான சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 மணிநேரம் தாங்கும் பேட்டரி பேக் அப்புடன் இந்த இயர்பட்ஸ் வருகிறது.
- வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதியும் கொண்டுள்ள MIVI Duopods F40 இயர்பட்ஸ், வெள்ளை, கருப்பு, பச்சை, கிரே மற்றும் புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
MIVI Duopods F60 கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது MIVI Duopods F40 மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. F60 மாடலில் இருந்ததைப் போல் இதிலும் 13mm டிரைவர்ஸ், புளுடூத் 5.1, வாய்ஸ் கேன்சலேசன், அலெக்ஸா, சிரி மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட்டுடன் வருகிறது. இதுதவிர இயர்பட்ஸை தொட்டாலே மொபைல் அழைப்புகளை ஏற்கவோ மற்றும் தவிர்க்கவோ முடியும்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 மணிநேரம் தாங்கும் பேட்டரி பேக் அப்புடன் இந்த இயர்பட்ஸ் வருகிறது. 70 சதவீத வால்யூமை வைத்திருந்தால் மட்டுமே 50 மணிநேரம் இடைவிடாது கேட்க முடியுமாம். 500mAh பேட்டரியுடன் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. பேட்டரி கேஸில் உள்ள LED டிஸ்பிளே பேட்டரியில் சார்ஜ் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்காணிக்க உதவுகிறது.

வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதியும் இதில் உள்ளது. MIVI Duopods F40 இயர்பட்ஸ், வெள்ளை, கருப்பு, பச்சை, கிரே மற்றும் புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.1,199 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதும், இது பிளிப்கார்ட் மற்றும் MIVI தளத்தில் ரு.999க்கு விற்பனைக்கு கிடைக்கிறது.
- வரவிருக்கும் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்நாப்டிராகன் 480+ 5ஜி Soc மூலம் இயங்கும் எனத் தெரிகிறது.
- இத்துடன் நோக்கியா XR21 5ஜி, X21 5ஜி மற்றும் X11 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது.
நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நோக்கியா XR21 5ஜி, X21 5ஜி மற்றும் X11 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் ஸ்நாப்டிராகன் 480+ 5ஜி Soc மூலம் இயங்கும் எனத் தெரிகிறது.
வரவிருக்கும் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் பெயர்கள் இன்னும் தெரியவில்லை, ஆனால் அவை 120HZ புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவைப் பெறலாம் என்று கூறப்படுகிறது. புதிய X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தாலும் நோக்கியா நிறுவனம் இதன் வெளியீட்டை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

கடைசியாக நோக்கியா நிறுவனம் ஏப்ரல் 26-ந் தேதி புது ஜி சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது. நோக்கியா ஜி-21 எனப்படும் அந்த மாடலின் விலை ரூ.12 ஆயிரத்து 999 மட்டுமே. இது 4ஜிபி ரேம் 64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வந்தது. அதேபோல் 6ஜிபி ரேம் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய வேரியண்ட்டின் விலை ரூ.14 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இது 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வந்தது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் வந்த இந்த ஸ்மார்ட்போன் டஸ்க் மற்றும் நார்டிக் புளூ ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.






