search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    அசத்தல் அம்சங்களுடன் வருகிறது சியோமியின் 12 சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் போன்
    X

    அசத்தல் அம்சங்களுடன் வருகிறது சியோமியின் 12 சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் போன்

    • சியோமி 12S ஸ்மார்ட்போன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • எல்இடி ப்ளாஷ் உடன் பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு இதில் உள்ளது.

    சியோமி நிறுவனம் தனது அடுத்த 12 சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் போன்களை வெளியிட தயாராகி உள்ளது. அந்த நிறுவனம் வெளியிட உள்ள புதிய போன்களுக்கு சியோமி 12S மற்றும் 12S ப்ரோ என பெயரிடப்பட்டு உள்ளது. சியோமி 12S ஸ்மார்ட்போன் 2206123SC என்கிற மாடல் நம்பரை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வருகிறது.

    2.02 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் நான்கு கோர்கள் மற்றும் 2.75 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் மூன்று கோர்கள் கொண்ட ஆக்டா கோர் சிப்செட் மூலம் இந்த ஃபோன் இயக்கப்படுகிறது. இதில் புதிதாக அறிவிக்கப்பட்ட குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen1 சிப்செட் கொண்டிருக்கலாம். இது 12 ஜிபி ரேம் உடன் வரும் என கூறப்படுகிறது,


    சியோமி 12S ஸ்மார்ட்போன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இதன் ப்ரோ மாடல் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சியோமி 12S இன் லீக்கான புகைப்படத்தின் மூலம், இது இதற்கு முன் வெளியிடப்பட்ட சியோமி 12 சீரிஸ் போன்களை போன்றே கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

    எல்இடி ப்ளாஷ் உடன் பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. இது சில்வர் நிறத்தை கொண்டிருக்கிறது. ஆனால் வெளியாகும் போது பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி 12S ஆனது AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வர வாய்ப்புள்ளது.

    Next Story
    ×