search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    கம்மி விலையில் எண்ணற்ற அம்சங்களுடன் தயாராகிறது ஆப்பிளின் எண்ட்ரி லெவல் ஐபேடுகள்
    X

    கம்மி விலையில் எண்ணற்ற அம்சங்களுடன் தயாராகிறது ஆப்பிளின் எண்ட்ரி லெவல் ஐபேடுகள்

    • A13 பயோனிக் சிப்பை விட A14 சிப் 30 சதவீதம் கூடுதலாக செயல்திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    • 2022 ஐபேடு, லைட்னிங் போர்ட்டுக்குப் பதிலாக யுஎஸ்பி டைப் சி போர்ட்டைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஆப்பிளின் எண்ட்ரி லெவல் ஐபேடுகள் அந்நிறுவனத்தின் மிகவும் பிரபலமான டேப்லெட் ஆகும். புதிய மலிவு விலை ஐபேடுகள் A13 பயோனிக் சிப், டீசண்டான முன்பக்க கேமரா மற்றும் பலவற்றுடன் வருகின்றன. ஆனால் அதன் அடுத்த தலைமுறை ஐபேடுகள் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என கூறப்படுகின்றன. ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் தற்போது குறைந்த விலை நுழைவு-நிலை ஐபேடுகளை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    ஆப்பிள் அதன் எண்ட்ரி லெவல் ஐபேடுக்கு பல மேம்படுத்தல்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஐபேடு சீரிஸ்களை விட அதிக வேகத்தைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. J272 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட 2022 ஐபேடு, லைட்னிங் போர்ட்டுக்குப் பதிலாக யுஎஸ்பி டைப் சி போர்ட்டைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


    புதிய எண்ட்ரி லெவல் ஐபாட், ஐபாட் ஏர் போன்ற அதே தெளிவுத்திறனுடன் கூடிய ரெடினா டிஸ்ப்ளே கொண்டிருக்கும். ஆனால் இது தற்போதைய மாடலின் 10.2-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைவிட 10.5-இன்ச் அல்லது 10.9-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போதைய ஐபேட் மாடல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் A13 பயோனிக் சிப்பை விட A14 சிப் 30 சதவீதம் கூடுதலாக செயல்திறன் கொண்டிருக்குமாம். செல்லுலார் மாடல்களுக்கு 5ஜி நெட்வொர்க் திறன்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×