search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இந்தியாவில் இப்படி ஒரு அம்சம் எந்த ஸ்மார்ட்வாட்சிலும் இல்லை - போட் நிறுவனம் அதிரடி
    X

    இந்தியாவில் இப்படி ஒரு அம்சம் எந்த ஸ்மார்ட்வாட்சிலும் இல்லை - போட் நிறுவனம் அதிரடி

    • இந்த ஸ்மார்ட்வாட்ச் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP67 மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது.
    • எஷென் கிரீன், கிளாசிக் பிளாக், கூல் புளூ ஆகிய கலர் வேரியண்டில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கும்.

    போட் நிறுவனம் கடந்தாண்டு Xtend மாடல் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில், தற்போது அதன் அடுத்த வெர்ஷனான Xtend ஸ்போர்ட் என்கிற மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. 700க்கும் மேற்பட்ட ஆக்டிவ் மோடுகளை கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்வாட்ச் இதுதான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உடல் வலிமை மற்றும் இருதய செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட டான்ஸ், கிரிக்கெட், பேலெட், ரன்னிங், பாக்ஸிங் போன்றவற்றை கண்காணிக்கும் பிரத்யேக அம்சமும் இதில் உள்ளது. Xtend Sport ஆனது சமையல், ஸ்கேட்போர்டிங், தியானம் போன்ற குறைந்த மற்றும் மிதமான தீவிரம் கொண்ட செயல்பாடுகளை கண்காணிக்கும் திறன் கொண்டது என்று போட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் 24-மணிநேர இதய துடிப்பு சென்சார், SpO2 மானிட்டர் மற்றும் நிகழ்நேரத்தில் உங்கள் உடற்பயிற்சி நிலைகளை கண்காணிக்கும் பெடோமீட்டர் உள்ளது. இது 1.69 இன்ச் எல்சிடி 2.5டி கர்வுடு டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. நேரலை கிரிக்கெட் ஸ்கோர்கள், போன் அழைப்புகள், குறுஞ்செய்தி மற்றும் நோட்டிபிகேஷன் உள்ளிட்டவையும் இதில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    இந்த ஸ்மார்ட்வாட்ச் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP67 மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. இது 200mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் தாங்கும் அளவு பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. மேலும் இது 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    எஷென் கிரீன், கிளாசிக் பிளாக், கூல் புளூ ஆகிய கலர் வேரியண்டில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.2,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இன்று முதல் அமேசான் மற்றும் போட் லைஃப்ஸ்டைல் ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    Next Story
    ×