என் மலர்
புதிய கேஜெட்டுகள்

கண்ட்ரோலர் உடன் தயாராகிறது சோனி பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ
- புது கண்ட்ரோலர் PS5 ஸ்டைலில் இருந்தாலும் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- PS5 ப்ரோ கண்ட்ரோலர் 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனி பிளே ஸ்டேஷன் 5-ன் ப்ரோ (PS5 Pro) வெர்ஷன் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி PS5-வை விட அதன் ப்ரோ வெர்ஷன் கூடுதல் அம்சங்களுடன் தயாராகி வருகிறதாம். சோனி நிறுவனம் புதிய கண்ட்ரோலர் ஒன்றையும் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள டூயல் சென்ஸ் கண்ட்ரோலரை விட இந்த புதிய கண்ட்ரோலர் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய PS5 கண்ட்ரோலர் ஹண்ட் என்கிற புனைப்பெயரை கொண்டுள்ளது. புது கண்ட்ரோலர் PS5 ஸ்டைலில் இருந்தாலும் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டிக் டிரிஃப்டை எதிர்கொள்ளும்போது இந்த கண்ட்ரோலர், அனலாக் ஸ்டிக் மற்றும் அதன் பாகங்களை அகற்ற பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள மற்றொரு கூடுதல் அம்சம் டிரிகர் ஸ்டாப், இது கண்ட்ரோலரின் பேக் பேனலில் உள்ள ஃபிளாப்பி பட்டனுடன் வருகிறது. கண்ட்ரோலரை பிடிக்க உதவும் கிரிப்களை மாற்றிக்கொள்ளும் அம்சமும் இதில் உள்ளது. பல்வேறு சாஃப்ட்வேர் அப்டேட்டுகளையும் இந்த கண்ட்ரோலர் சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது. PS5 ப்ரோ கண்ட்ரோலர் 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






