என் மலர்

  புதிய கேஜெட்டுகள்

  கம்மியான விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்வாட்ச் - எப்போ ரிலீஸ் தெரியுமா?
  X

  கம்மியான விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்வாட்ச் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒன்பிளஸ் வாட்ச் போன்றே புதிதாக அறிமுகம் ஆக உள்ள நார்டு ஸ்மார்ட்வாட்சும் பிரத்யேக இயங்குதளத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஒன்பிளஸின் புது ஸ்மார்ட்வாட்ச் பியூரோ ஆப் இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் (BIS) வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.

  ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் அதன் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒன்பிளஸின் புது ஸ்மார்ட்வாட்ச் பியூரோ ஆப் இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் (BIS) வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்த ஆண்டு மூன்றாவது காலாண்டு வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

  இது ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் மூன்றாவது ஸ்மார்ட்வாட்ச் மாடலாகும். மேலும் நார்டு பிராண்டிங் உடன் அறிமுகம் செய்யப்பட உள்ள முதல் ஸ்மார்ட்வாட்ச் இதுவாகும். ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு ஸ்மார்ட்வாட்ச் 42mm மற்றும் 46mm என இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


  அம்சங்களை பொருத்தவரை இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்சில் 24x7 இதய துடிப்பு மானிட்டர், ஸ்லீப் மாணிட்டர், ஸ்டெப் கவுண்ட்டர், SpO2 மாணிட்டர், பீடோமீட்டர் என ஏராள வசதிகள் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது. இரண்டு விதமான நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கும் என்றும் இதில் வட்ட வடிவ டையல் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் வாட்ச் போன்றே புதிதாக அறிமுகம் ஆக உள்ள நார்டு ஸ்மார்ட்வாட்சும் பிரத்யேக இயங்குதளத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Next Story
  ×