என் மலர்

  நீங்கள் தேடியது "Xiaomi 12 Lite"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சியோமி 12 லைட் ஸ்மார்ட்போன் லைட் கிரீன் மற்றும் லைட் பிங்க் ஆகிய இரு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
  • புதிய சியோமி 12 லைட் 5ஜி மாடல் ஸ்மார்ட்போனின் மொத்த எடை 173 கிராம்கள் ஆகும்.

  சியோமி நிறுவனம் அதன் 12 லைட் ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 12 ஸ்மார்ட்போனின் டோன்-டவுன் வெர்ஷனாக இந்த 12 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பெயருக்கு ஏற்றார் போல் சியோமி 12 லைட் மாடலின் அம்சங்களும் மிட் ரேன்ஜ் அளவிலேயே வழங்கப்பட்டு இருக்கின்றன.

  புதிய சியோமி 12 லைட் 5ஜி மாடல் ஸ்மார்ட்போனின் மொத்த எடை 173 கிராம்கள் ஆகும். அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 778ஜி பிராசஸர், 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 256ஜிபி மெமரி, 6.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்லிங் ரேட் ஆகியவை இதில் உள்ளது.


  சியோமி 12 லைட் ஸ்மார்ட்போன் லைட் கிரீன், லைட் பிளாக் மற்றும் லைட் பிங்க் ஆகிய இரு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம்+ 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை இந்திய மதிப்பில் ரூ. 31 ஆயிரத்து 635 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 35 ஆயிரத்து 600 என்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 39 ஆயிரத்து 565 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

  ×