search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M13 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது
    X

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M13 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது

    • சாம்சங் கேலக்ஸி M13 ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் ப்ளூ, ஆக்வா கிரீன் மற்றும் ஸ்டார்டஸ்ட் பிரவுன் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி M13 4ஜி மற்றும் கேலக்ஸி M13 5ஜி ஆகிய மாடல்களை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. மெக்சிகோவில் கடந்த மே மாதம் லான்ச் செய்யப்பட்ட M13 போன்களை விட இந்த போன் வித்தியாசமான தோற்றத்துடன் வந்துள்ளது. இதில் இன்பினிட்டி வி நாட்ச் டிஸ்ப்ளே இடம்பெற்று உள்ளது.

    M13 4ஜி ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வந்துள்ளது. அதேபோல் M13 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வந்துள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் மிட்நைட் ப்ளூ, ஆக்வா கிரீன் மற்றும் ஸ்டார்டஸ்ட் பிரவுன் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    M13 5ஜி ஸ்மார்ட்போனில் ரேம் ப்ளஸ் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் உடன் வந்துள்ளது. டைமென்சிட்டி 700 புராசஸரை கொண்டுள்ளது. அதேபோல் M13 4ஜி ஸ்மார்ட்போன் 4,000 எம்.ஏ.ஹெச் பேட்டரியை கொண்டு உள்ளது.

    M13 4ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 11 ஆயிரத்து 999 எனவும், அதன் 6ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.12 ஆயிரத்து 999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அதேபோல் M13 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14 ஆயிரத்து 999 என்றும் அதன் 6ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.15 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த போன் வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.

    Next Story
    ×