search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oppo Reno 8"

    • ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போன் ஷிம்மர் பிளாக் மற்றும் ஷிம்மர் கோல்டு ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.
    • இதன் விலை ரூ.29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதன்படி ஒப்போ ரெனோ 8 மற்றும் ரெனோ 8 ப்ரோ ஆகிய இரு மாடல் ஸ்மார்ட்போன்கள் இந்த சீரிஸில் இடம்பெற்று இருந்தன. இதில் ரெனோ 8 மாடல் மட்டும் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ரெனோ 8 மாடல் 6.43-இன்ச் முழு ஹெச்.டி+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

    அதேபோல் புராசஸரை பொருத்தவரை ரெனோ 8 மாடல் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 1300 SoC புராசஸரை கொண்டுள்ளது. மேலும் இது ட்ரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது. ரெனோ 8 மாடலில் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டும் இடம்பெற்று உள்ளது. இதன் விலை ரூ.29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஷிம்மர் பிளாக் மற்றும் ஷிம்மர் கோல்டு ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.


    இந்த போனை ஹெச்.டி.எஃப்.சி. ஐசிஐசிஐ, எஸ்.பி.ஐ., மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய கார்ட்களை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் டிஸ்கவுண்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7 மணி முதல் ஒப்பொ ரெனோ 8 ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ தளங்களில் தொடங்கப்பட உள்ளது. ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 25-ந் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஒப்போ ரெனோ 8 மாடல் ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.
    • ஒப்போ ரெனோ 8 வருகிற ஜூலை 25-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

    அம்சங்களை பொருத்தவரை ரெனோ 8 மாடல் 6.43-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவையும், ரெனோ 8 ப்ரோ மாடல் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. அதேபோல் புராசஸரை பொருத்தவரை ரெனோ 8 மாடல் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 1300 SoC புராசஸரையும், ரெனோ 8 ப்ரோ ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 மேக்ஸ் SoC புராசஸரையும் கொண்டுள்ளது.


    இந்த இரண்டு மாடல்களும் ட்ரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது. ரெனோ 8 மாடலின் 8ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ரெனோ 8 ப்ரோ மாடலின் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.45 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஒப்போ ரெனோ 8 மாடல் ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது. அதேபோல் ரெனோ 8 ப்ரோ மாடல் கிளேசுடு பிளாக் மற்றும் கோல்டன் கிரீன் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒப்போ ரெனோ 8 வருகிற ஜூலை 25-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • வருகிற ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ள லான்ச் ஈவண்ட் மூலம் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
    • புராசஸரை பொருத்தவரை ரெனோ 8 மாடல் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 SoC புராசஸரையும், ரெனோ 8 ப்ரோ மாடல் ஸ்நாப்டிராகன் 7 Gen 1 புராசஸரையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்தவித அறிவிப்பும் கடந்த மாதம் வெளியாகவில்லை.

    வருகிற ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ள லான்ச் ஈவண்ட் மூலம் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் ரெனோ 8 மாடல் 6.43-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவையும், ரெனோ 8 ப்ரோ மாடல் 6.62 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


    அதேபோல் புராசஸரை பொருத்தவரை ரெனோ 8 மாடல் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 SoC புராசஸரையும், ரெனோ 8 ப்ரோ மாடல் ஸ்நாப்டிராகன் 7 Gen 1 புராசஸரையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதர விவரங்கள் அடுத்தடுத்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் ஒப்போ ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரம் லீக் ஆகி உள்ளது.

    அதன்படி ரெனோ 8 மாடலின் 8ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.28 ஆயிரத்து 999 எனவும், 8ஜிபி + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.31 ஆயிரத்து 990 எனவும், 12 ஜிபி + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33 ஆயிரத்து 990 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ரெனோ 8 ப்ரோ மாடலின் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.44 ஆயிரத்து 990 ஆக நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×