search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இணையத்தில் லீக் ஆன விவோ போல்டபில் போன் விவரங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன விவோ போல்டபில் போன் விவரங்கள்

    • விவோ நிறுவனத்தின் X போல்டு பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் TENAA தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் TENAA வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    மேலும் புதிய விவோ போல்டபில் ஸ்மார்ட்போன் பல்வேறு 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்கிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12 கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போன் கூகுள் பிளே சப்போர்ட் கொண்ட சாதனங்கள் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் நான்கு கேமரா சென்சார்கள், எல்இடி பிளாஷ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது.


    தற்போது TENAA வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போனில் 2300 எம்ஏஹெச் மற்றும் 2300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12 வழங்கப்படுகிறது. விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்,12MP போர்டிரெயிட் லென்ஸ், 8MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 80 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ X போல்டு மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    Next Story
    ×