search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 11 ப்ரோ அம்சங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 11 ப்ரோ அம்சங்கள்

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    ஒன்பிளஸ் 11 ப்ரோ ரெண்டர்கள் இம்மாத துவக்கத்தில் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இந்த பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    தற்போதைய தகவல்களின் படி ஒன்பிளஸ் 11 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், QHD+ ரெசல்யூஷன், பன்ச் ஹோல் கட்-அவுட், 120Hz ரிப்ரெஷ் ரேட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 32MP டெலிபோட்டோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஹேசில்பிலாட் கேமரா தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய ஒன்பிளஸ் 11 ப்ரோ மாடலில் குவால்காம் நிறுவனம் அறிவிக்க இருக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்றும் டாப் எண்ட் மாடல் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெநரி கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் பாஸ்ட் சார்ஜிங், டால்பி அட்மோஸ், 5ஜி, வைபை, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட், ஆண்ட்ராய்டு 13 வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட கேமரா மாட்யுல் வழங்கப்பட இருக்கிறது. வட்ட வடிவ கேமரா பம்ப் மூன்று சென்சார்கள் மற்றும் எல்இடி பிளாஷ் கொண்டிருக்கிறது.

    Photo Courtesy: @OnLeaks @Smartprix

    Next Story
    ×